-->

About the Site:

  • புத்தகம், புத்தகம், புத்தகம்..

Archives




தமிழில் எழுத:

தமிழ் விக்கிபீடியா

logobig.jpg

சிற்றிதழ்கள்

Reference Book list from ‘Ten Thousand Miles Without a Cloud’ by Sun Shuyun

August 28th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: மதி கந்தசாமி

Alien, Charles, The Buddha and the Sahibs: The Men Who Discovered India’s Lost Religion, London: John Murray, 2002.

Almond, Philip C., The British Discovery of Buddhism, Cambridge: Cambridge University Press, 1988.

Armstrong, Karen, Buddha, London: Weidenfeld & Nlcolson, 2000.

Bagchi, P. C., India and China: A Thousand Years of Cultural Relations, Bombay, 1950, Westport, CT.: Greenwood Press, reprint, 1971.

Basham, A. L., The Wonder That was India, New Delhi: Rupa & Co., by arrangement with Macmillan, 3rd revised edn (1967), 34th impression, 1999.

Bayly, Susan, Caste, Society and Politics in India: From the Eighteenth Century to the Modern Age, New Cambridge History of India, Vol. 4, No. 3, Cambridge: Cambridge University Press, 1999.

Beal, Samuel, trans., Si-yu-ki, Buddhist Records of the Western World, Translated from the Chinese of Hiuen Tsiang (A.D. 629), 1884, Delhi: Oriental Books Reprint Corp., 2 vols, 1969.

Beal, Samuel, trans., Hui Li: The Life of Hiuen-Tsiang, 1911, Delhi: Munshiram Manoharlal, 2nd edn, 1973.

Buddhist Association of Canada, The Buddhist Liturgy, Ontario, 1983

Buddhist Text Translation Society, The Sixth Patriarch’s Sutra, San Francisco, CA: Sino-American Buddhist Association, 2nd edn, 1977.
Read the rest of this entry »

-->

Posted in பிற மொழிகள், .அ-புனைவு | Comments Off

A few pages from ‘Ten Thousand Miles Without a Cloud’ by Sun Shuyun

August 28th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: மதி கந்தசாமி

Xuanzang headed for South India in 636, after five years of study in Nalanda. His goal was to visit Ceylon.: the home of Teravada Buddhism and many of its greatest masters. On the eastern coast, he passed through Kalinga, modern Orissa: as Xuanzang would have known well, the scene of Asoka’s bloody victory which led to his shame and conversion to Buddhism. Xuanzang stayed at a seaport, a particularly lively place where ‘ merchants depart for distant countries, and foreigners, coming and going, stop on their way.’ He was struck bu the quantity of rare goods in the city, some of which would have come from as far away as Rome. For ships going out to Southeast Asia, rice, indigo, brown sugar and textiles were the more common cargoes. He might have found lodging on one of the five monasteries outside the city, right on the sea, seeing the ships sailing off. He let his thoughts wanter off with them, in the warm tropical nigvht, to ceylon. ‘Every night when the sky is clear and cloudless, a thousand kilometres to the south is Ceylon, where the precious diamond placed above the Stupa of the Buddha’s Tooth casts a dazzling light that can be seen from afar. The radiance resembles a torch hanging in mid-air.’ But he was advised by the monks not to take the sea route, which was very dangerous. He should travel overland to Kanchipuram in South India, and from there he could cross the sea to Ceylon in three days.

The journey to Kanchipuram took Xuanzang more than a year, as he frequently stopped to study with any great master he could find. I was there in one day on the Coromandel express to Madras, and another two hours by bus. The road was crowded byt the countryside still fitted his description: “The soil is fertile and finely cultivated, and produces abundance of grain. There are also many flowers and fruits.’ Through the window I could see lush paddy fields hemmed by palms and every now and then white-washed houses studded with a profusion of pink, red and yellow flowers. The bus entered town along a few ordinary shopping streets, except that above the shops loomed the gopurams, the towers, of its great temples. Xuanzang noted that the place was famous for ‘precious gems and other articles’. But today the main sale was silk, or Chinamshuka, the Sanskrit name as I fondly remembered. Kanchipuram silk was known throughout India and there was plenty of it here, in shop after shop and street after street, rolls of it, in every color you can imagine: pale lime next to cerise, livid purple and gold, like jewels and baubles displayed row on row.

Xuanzang felt very much at home here and stayed for several months. Kanchipuram was the capital of the Dravida kingdom, which boasted over a hundred monasteries and 10,000 monks. The people courageous, honest, truthful, and esteemed learning and learned men. But what drew Xuanzang even more to Kanchipuram was the memory of Dharmapala, who was born to a noble family here. He was Shilabadra’s teacher. Xuanzang had studied at the feet of Shilabhadra for five years, received the most profound teaching, and finally understood Yogacara. The wisdom had come down from this man, to whom Yogacara and he owed a great debt. He was particularly influenced by Dharmapala’s commentaries on the Yogacara school of thought. On his return to China, he used them as the main source for The Doctrine of Mere Consciousness, his synthesis of the major arguements of Yogacara; the work became the key text of this school in China and Japan.

—–
—-
—-

As I was about to leave the Kamakshi Temple, another group of pilgrims came up to Shankara’s shrine. This time they were saying a short prayer, perhaps one of the beautiful hyms Shankara wrote. When I read these hyms, I was struck by how Buddhist they soud: ‘We wallow in our ignorance as in mire. Our life on earch, snared in the cycle of bith, old age and death, is but vanity and sorrow. Glory be to those who see this bondage for what it is, cut the knot with the sword of knowledge, and stand firm in their wisdom.’ Perhaps Buddhism was not dead after all. It has lived on and its influence can be flet in all aspects of Indian life, reaching even into the deepest recesses of the Hindu mind. I remember I was puzzled wehen I read this bold claim in a study of Buddhist culture in India during the seventh and eighth centuries: ‘Every Hindu is a Buddhist, inspite of all outward appearances to the contrary. I began to realise what it meant.

It was sad, however, not to find any trace of that Buddhist past in this once great Buddhist city. I thought of Xuanzang’s disappointment here too. He was waiting for ships to sail for Ceylon, but none was leaving for some time. Then one day he discovered why from a group of monks who has just arrived from there. Their King has recently died, and a severe famine was ravaging the country. The best monks had all fled. If he had any questions, he could ask them. He did just that, devoting a whole chapter of his Recod to Ceylon based on what the monks told him, and then joined them on their pilgrimage to the North

Extracts from: ‘Ten Thousand Miles Without a Cloud. One woman’s search for her roots.’
Sun Shuyun
Harper Collins Publications

-->

Posted in பொது, பிற மொழிகள், .அ-புனைவு | Comments Off

Ten Thousand Miles Without a Cloud - Sun Shuyun

August 28th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: மதி கந்தசாமி

எனக்குப் பொதுவாக பயண நூல்கள் மிகவும் பிடிக்கும். அதுவும் எனக்குப் பிடித்த இடங்களுக்குப் பயணம் செய்து எழுதியிருந்தால் குதூகலமாக இருக்கும். அப்படி இந்தப் புத்தகம் சீனப் பெண் ஒருவரால் அவரது வேர்களை நோக்கிச் செல்லும் பயணம் என்று மேலோட்டமாக பார்த்ததில் புரிந்துகொண்டு வீட்டிற்கு எடுத்துவந்தேன்.


நன்றி: The Age

நான் நினைத்தபடி Sun Shuyun என்னும் சீனப்பெண் அவரது வேர்களை நோக்கிப்போகும் பயணமே இந்தப் புத்தகம். ஆனால், அந்த வேர்களை Sun Shuyun எங்கே எப்படித் தேடுகிறார் என்பதில்தான் விஷயமே இருக்கிறது.

முதலில் சுன் ஷ¤யுன் பற்றிக் கொஞ்சம். சீனாவில் அறுபதுகளில் பிறந்த சுன் ஷ¤யுன் பீஜிங் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, பிறகு ஆக்ஸ்·போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க ஸ்காலர்ஷிப் கிடைத்துப் போனவர். தற்போது பிபிசி, Channel 4 மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்காக விவரணப் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.

சீனாவின் ரெட் ஆர்மியில் வேலை செய்யும் தகப்பனுக்கு மூன்றாவது பெண்ணாகப் பிறந்த சுன் ஷ¤யூனின் இளமைப்பருவம் அவ்வளவு சிலாக்கியமானதாக இருக்கவில்லை. தனது ஆற்றாமையை மூன்றாவது பெண்ணை அடித்துத் துன்புறுத்தி குறைத்துக்கொண்ட தகப்பனாரும், கவனித்து அன்பு பாராட்ட முடியாத குடும்ப அங்கத்தினரும் இருந்தபோது சுன் ஷ¤யூனை அரவணைத்தவர் அவரது அம்மம்மா. அந்தக்காலத்தில் பிறந்த பல சீனர்களைப்போல இறைநம்பிக்கை இல்லாமல் வளரும் சுன் ஷ¤யூனுக்கு பாட்டியின் நடவடிக்கைகள் சிரிப்பையூட்டுகின்றன. பாட்டி வழிபடும் புத்தர் பற்றியும் அவரின் இறைவழிபாடும் சுன் ஷ¤யூனிற்குப் புரியவில்லை. புரிந்துகொள்ளவும் சுன் ஷ¤யூன் முயலவில்லை. ஆனாலும் சிறுவயதில் நடந்த விஷயங்களெல்லாம் அவரது மனதின் ஒரு மூலையில் அவருக்குத் தெரியாமலே இருந்திருக்கிறது. கல்வி கற்பது ஒன்றே முன்னேறுவதற்கு உதவும் என்று உற்சாகப் படுத்திய பாட்டியின் வழிகாட்டலோடு பீஜிங் பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்று ஆக்ஸ்·போர்டுக்கு வந்தார் சுன் ஷ¤யூன். அங்கேதான் அவருக்குத் தன்னுடைய சீனக் கலாச்சாரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது.

அப்போதுதான் பாட்டியின் இறை நம்பிக்கை குறித்த நினைவுகளெல்லாம் சுன் ஷ¤யூனிற்கு வருகின்றன. பாட்டி அடிக்கடி சொல்லிக்கொண்டே இருக்கும் Monkey King பற்றிச் சிந்திக்கிறார். Monekey King, ஒரு குரங்கும் பன்றியும் பிக்குவாக விரும்பும் ஒரு மனிதனும் ஒரு புத்தபிக்குவோடு இந்தியாவிற்குச் சென்று அங்கேயிருந்து புத்தமத சூத்திரங்களைப் பெற்றுவரும் கதை. இந்தக் கதை சிறுவர்களுக்கான கதையாக அறுபதுகளில் புழங்கியது. அந்த புத்த பிக்கு ஒன்றுக்கும் லாயக்கில்லாதவராக, அமைதியான ஆனால் பலமில்லாத சிறுமதி படைத்தவராக சித்தரிக்கப் பட்டிருந்தார். நல்லது கெட்டது தெரியாத அந்த பிக்குவின் உடலை உண்டால் மோட்சம் கிடைக்குமென்பதால் பேய்பிசாசுகள் அவரைச் சாப்பிட முயற்சித்தபடி இருக்கின்றன. ஆனால், அவரோடு இருக்கும் குரங்கு அப்படியெல்லாம் நடக்காமல் புத்தபிக்குவைக் காப்பாற்றுகிறது. அத்தோடு நிக்காமல் புத்தபிக்கு தேடிச்சென்ற சூத்திரங்களையும் அந்தக் குரங்கே புத்தபிக்குவிடம் சேர்ப்பிக்கிறது.

பாட்டி கொடுத்த காமிக் புத்தகத்தை மாவோவின் இராணுவத்தில் இருக்கும் தகப்பனாரிடம் குழந்தை சுன் ஷ¤யூன் காட்டுகிறாள். அவரோ, இது நல்ல புத்தகம். சேர்மன் மாவோவுக்கு மிகவும் பிடித்த கதை இது. ஒரு கவிதைகூட இயற்றியிருக்கிறார் என்று கூறுகிறார். பாட்டியிடம் Monkey Kingஇல் வரும் புத்தபிக்கு, குரங்கு, புத்தர் மற்றும் சூத்திரங்களைப் பற்றி சுன் ஷ¤யூன் கேட்கிறாள். சூத்திரங்களைக் குரங்கு கொண்டு வந்து புத்தபிக்குவிடம் கொடுத்தது பற்றி விசாரிக்கும் சுன் ஷ¤யூனிடம் பாட்டி, உண்மையில் அப்படி நடக்கவில்லை. உண்மையில் அந்தப் புத்தபிக்கு தனியே சென்று திரும்பினார் என்று சொல்கிறார். உங்களுக்கு எப்படி இவ்வளவு தெரியும் என்று கேட்க, தன்னுடைய கிராமத்தில் இருந்த புத்தபிக்குவிற்கு Master Xuanzangஐப் பிடிக்கும் என்றும் அவரைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறார் என்றும் பாட்டி பதில் சொல்கிறார். பாட்டி சொன்னதைப்பற்றி யோசிக்கவில்லையென்றாலும் அவர் சொன்னதெல்லாம் சுன் ஷ¤யூனின் மனதில் இருந்திருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஆக்ஸ்·போர்ட் பல்கலைக்கழகத்தில் சந்தித்த இந்திய மாணவனொருவர் சுன் ஷ¤யூனிடம் பேசும்போது பழைய ஞாபகங்கள் திரும்ப வருகின்றன.

அந்த இந்திய மாணவன், எனக்கு சீனாவைச் சேர்ந்தவர் ஒருவரைத் தெரியும் என்று சொல்கிறான். நண்பர்கள் யாரேனுமா என்று கேட்டு இல்லையென்றதும் சேர்மன் மாவோ’வைக் குறிப்பிடுகிறானா என்று கேட்கிறார் சுன் ஷ¤யூன். இல்லையில்லை என்று சொல்லும் அந்த மாணவன் Xuanzang என்று சொல்கிறார்.

‘ஆமாமாம். Monkey Kingஇல் வரும் புத்தபிக்கு அவர். Monkey King சீனாவில் மிகவும் பிரபலம். நல்ல கதை அது.’

‘Xuanzang இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானவர். இந்தியாவின் சிறந்த நண்பர் அவர். எங்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும். மிகச்சிறந்த மனிதரவர். எங்களுடைய வரலாற்றைப் பாதுகாத்து எங்களுக்குத் திருப்பிக்கொடுத்தவர் அவர்’

என்று அந்த மாணவன் சொல்லிக்கொண்டே போக சுன் ஷ¤யூனுக்கோ பயங்கர ஆச்சரியம். தாங்கள் ஒரே ஆளைப்பற்றியா பேசிக்கொள்கிறோம் என்று நினைக்கிறார். பள்ளிக்கூடத்தில் Xuanzang அவரது பயணங்களைப்பற்றி எழுதிவைத்தார் என்று எங்கோ படித்த ஞாபகம் சுன் ஷ¤யூனுக்கு வருகிறது. Xuanzang எழுதிய ‘The Record of the Western Regions’ புத்தகத்தை நினைவு கூர்ந்த சுன் ஷ¤யூன், தான் அந்தப் புத்தகத்தைப் பார்த்ததோ படித்ததோ இல்லையென்று நினைவுகூர்கிறார். அந்தப்புத்தகத்தைத் தேடி நூலகத்திற்குச் செல்லும் சுன் ஷ¤யூனுக்கு ‘The Life of Xuanzang’ என்ற புத்தகம் கிடைக்கிறது. Xuanzangஇன் மாணவர் Hui Ling எழுதிய புத்தகம் அது. கூடவே ‘The Record of the Western Regions’ புத்தகமும் கிடைக்கிறது.

Xuanzang பற்றிய விஷயங்களைத் தேடிச் சேகரிக்கும் சுன் ஷ¤யூன், தன்னுடைய பாட்டியையும் அடிக்கடி நினைவு கூர்கிறார். பாட்டி சொன்ன விஷயங்களில் பல உண்மையானவை என்று உணர்கிறார். ஒரு கட்டத்தில் நூலகங்களிலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் Xuanzangஐ முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது என்று புரிந்துகொள்கிறார் சுன் ஷ¤யூன். ‘Walk then thousand books; walk ten thousand miles.’ என்ற சீனப்பழமொழியை நினைவுகூர்ந்த சுன் ஷ¤யூன், Xuanzangஇன் வழித்தடத்தில் செல்ல முடிவு செய்கிறார்.

இந்தப் புத்தகம், சுன் ஷ¤யூன் Xuanzangஇன் வழித்தடத்தில் செல்வதையே கூறுகிறது. சுன் ஷ¤யூனிற்கு இந்தப் பயணம் வெறும் புறவழித் தொடரலாக மட்டுமல்லாது அகவழிப்பயணமாகவும் இருக்கிறது. ஏறக்குறைய 16,000 மைல் தூரத்தைக் கடந்து சென்று வந்த Xuanzuangஇன் அடிச்சுவட்டில் சுன் ஷ¤யூன் சீனாவில் Xianஇல் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறார். Wuwei, Anxi, Hami, Turfan, Korla, Kucha, Aksu, Karakul, Tokmak, Tashkent, Samarkand, Bamiyan, Kabul, Peshawar, New Delhi, Mathura, Bihar மாநிலம் - Kanauj, Lumbini, Sarnath, Benares, Kushinagar, Nalanda, Bodh Gaya, Calcutta, Madras, Kanchipuram, Ajanta Multan, Kashgar, Khotan, Niya, Dunhuang, Anxi, Wuwei, Xian என்று ஒரு சுற்றுச்சுற்றி முடிக்கிறார். நடுவில் அவர் சீனா, Kyrgystan, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான்(திருட்டுதனமாக), இந்தியா என்று வந்து போகிறார்.

Huan Tsang என்று நாம் வரலாற்றுப் புத்தகங்களில் படித்த Xuanzang காலத்தில் இருந்ததுபோல பல பிரச்சினைகளை சுன் ஷ¤யூனும் எதிர்கொள்கிறார். மத்திய ஆசிய நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளை ஆங்காங்கே லேசாக் குறிப்பிடுகிறார். அதே போல பாக்கிஸ்தானில் அவரது அனுபவங்களும் சுகமானதாக இருக்கவில்லை. இந்தியாவும் அத்தனை சிறப்பாக இருக்கவில்லை. பிகாருக்கு அவர் வந்தது தேர்தல் சமயம். பல இடங்களில் அவர் விரும்பிய அளவு நேரம் செலவழிக்க முடியவில்லை. காஞ்சிபுரத்தில் புத்தமதத்தின் சுவடே இல்லையென்று வருந்துகிறார் சுன் ஷ¤யூன். [Xuanzuang காஞ்சிபுரத்தில் இருந்து இலங்கைக்குச் செல்வதாக இருந்தாராம். அந்தப் பகுதியை தனியே தட்டச்சிட்டுத் தருகிறேன்].

பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த விகாரைகளும், கோவில்களும், ஓவியங்களும் மனிதர்களால் சீரழிக்கப்படுவது குறித்து விரிவாக எழுதியிருக்கிறான் சுன் ஷ¤யூன். அவரது இயலாமையும் கோபமும் படிக்கும் நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

Xianஇல் பயணத்தை முடித்துக்கொண்ட சுன் ஷ¤யூன் தன்னுடைய சொந்த ஊருக்குச் செல்கிறார். அங்கே, அவருடைய பாட்டியின் கல்லறையில் அவரது இந்தப் பயணம் முடிகிறது. அல்லது இன்னொரு தளத்தில் ஆரம்பமாகிறது என்றுதான் சொல்ல வேண்டும். படிக்கும் நமக்கும் அப்படியே.

குறிப்புகள்:

புத்தகத்தின் சில பக்கங்களை The Guardianஇல் படிக்கலாம்.

சென்னையில் சுன் ஷ¤யூன்

-->

Posted in பிற மொழிகள், .அ-புனைவு | Comments Off

மாயா அஞ்செலௌவின் சமையல் புத்தகம்

August 24th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: மதி கந்தசாமி

என்னிடம் ஒரு பழக்கம் சமைக்கிறேனோ இல்லையோ சமையல் குறிப்புகளையும் சமையல் புத்தகங்களையும் படித்துவிடுவேன். அதுவும் சமையல்குறிப்புகளோடு வேறு விஷயங்களையும் சேர்த்துத் தந்தால் மிகவும் குஷியாகிவிடுவேன். அப்படி சமையல் புத்தகங்களில் எனக்குப் பிடித்தது Madhur Jaffreyயின் புத்தகங்கள் மற்றும் தெற்காசிய சமையல் புத்தகங்கள். சமீபத்தில் நூலகத்தில் ஒரு புத்தகத்தைப் பார்த்ததும் எடுத்துவிட்டேன். காரணங்கள் இரண்டு.

எழுதியவர்: Maya Angelou

புத்தகத்தின் தலைப்பு: Hallelujah! the welcome table: A lifetime of memories with recipes

அந்த ‘a life of memories with recipes’ என்ற வரி யோசிக்காமல் கொள்ளாமல் புத்தகத்தை எடு எடு என்று சொன்னது. :)

Maya Angelouவைப் பற்றி நிறைய எழுதலாம். எனக்கு மிகவும் பிடித்த பெண்களில் ஒருவர். கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர், இயக்குநர் என்று பல திறமைகள் கொண்ட மாயா எழுதிய ஒரு கவிதையை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். அமெரிக்க ஜனாதிபதிகளில் இருவரே அவர்களுடைய பதிவியேற்பு விழாவில் கவிதை பாடுமாறு கவிஞர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். முதலாவது ஜனாதிபதி - ஜோன் கென்னடி. கவிஞர் - ரோபர்ட் ·ப்ரொஸ்ட்.

இரண்டாவது ஜனாதிபதி - பில் கிளிண்டன். கவிஞர் - மாயா அஞ்செலௌ.

அந்தக் கவிதை இதோ. அந்தக் கவிதையிலிருந்து கடைசிப் பகுதியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

Lift up your faces, you have a piercing need
For this bright morning dawning for you.

History, despite its wrenching pain,
Cannot be unlived, and if faced
With courage, need not be lived again.

Lift up your eyes upon
The day breaking for you.

Give birth again
To the dream.

Women, children, men,
Take it into the palms of your hands.

Mold it into the shape of your most
Private need. Sculpt it into
The image of your most public self.
Lift up your hearts
Each new hour holds new chances
For new beginnings.

Do not be wedded forever
To fear, yoked eternally
To brutishness.

The horizon leans forward,
Offering you space to place new steps of change.
Here, on the pulse of this fine day
You may have the courage
To look up and out upon me, the
Rock, the River, the Tree, your country.

No less to Midas than the mendicant.

No less to you now than the mastodon then.

Here on the pulse of this new day
You may have the grace to look up and out
And into your sister’s eyes, into
Your brother’s face, your country
And say simply
Very simply
With hope
Good morning.

மாயா அஞ்செலௌ’வின் தன்னம்பிக்கை, எனக்கு மிகவும் பிடித்த விஷயம்.

ம்ம்ம்.. கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பேன். இப்பதிவு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குப் போவோமா?

‘Hallelujah! the welcome table: A lifetime of memories with recipes’ தலைப்புக்கேற்றபடி ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது. தன்னுடைய பாட்டியின் சமையலோடு ஆரம்பிக்கிறார் மாயா அஞ்செலௌ. அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கறுப்பினத்தவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், வறுமையிலும் ஒவ்வொருவரும் எப்படி சமாளித்தார்கள், விருந்தினரை போதும் போதும் என்று சொல்லும்படி உபசரித்தார்கள் என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவர்களுக்கு மாமிச உணவு எவ்வளவு பிரதானமாது. மாமிசம் அவ்வளவாகக் கிடைக்காத நாட்களிலும் கிடைத்த இறைச்சி வகைகளை மரக்கறியோடு சேர்ந்து சமைத்து சமாளித்தார்கள் என்று பார்க்கும்போது நம் உணவுப்பழக்க வழக்கங்களுக்கும் ஏனைய கலாச்சாரங்களுக்கும் இருக்கும் வித்தியாசங்களைப் பார்க்க முடிகிறது. தெற்காசிய நாடுகளிலும் மரக்கறிகளில் கொஞ்சமாவது இறைச்சி சேர்த்து சமைக்கிறார்கள். அதனால்தான் அந்த ஊர்களுக்குப் போகும் நம்மூராட்கள் சிரமப் பட வேண்டியிருக்கிறது. மச்சமொன்றுமே இல்லையென்று கொண்டு வரும் உணவில்கூட ஒயிஸ்டர் சாஸ், ·பிஷ் சாஸ் என்று நம்மாட்களைக் கதிகலங்க வைக்கிறார்கள்.

பொதுவாகவே அமெரிக்க தென்மாநிலத்தவர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமுள்ளவர்களாக இருப்பார்கள். வாரமொரு முறை கட்டாயம் சர்ச்சுக்குச் செல்பவர்கள் என்ற பிம்பம் இருக்கிறது. அதிலும் கறுப்பினத்தவர்கள் உற்சாகத்தோடு பாட்டுப்பாடி கடவுளைக் கொண்டாடுபவர்கள். மாயா அஞ்செலௌ, தங்களுடைய Christian Methodist Episcopal Chruchக்கு வந்த வெளியூர் பாதிரியார் தங்கள் வீட்டு வந்த நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக விவரித்திருக்கிறார். பாதிரியார் வருகைக்காக, வழக்கமாகவே நன்றாக சமைக்கும் மாயாவின் பாட்டி அசத்தலான விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். பாதிரியார், குழந்தைகளோடு போட்டியிட்டுக்கொண்டு அவர்களுக்கும் கொடுக்காமல் பாட்டியின் சமையலில் ‘விளையாடியிருக்கிறார்.’ சாப்பாட்டு மேஜையில் நடந்துகொள்ளும் முறையைப் பாட்டியிடமிருந்து கற்ற குழந்தைகளைத் திகைக்க வைத்த பாதிரியார் சென்ற பிறகு குழந்தைகளுக்கென்று தனியாக எடுத்து வைத்திருந்த உணவைக் கொடுத்து தேற்றியிருக்கிறார் மாயாவின் பாட்டி.

பெரும்பாலும் பாட்டியின் சமையலைப் பற்றியே பேசியிருக்கிறார் மாயா. புத்தகத்தின் பிற்பகுதியில் அவருடைய அம்மா, அண்ணன் மற்றும் நண்பர்களைப் பற்றிச் சொல்லி அனுபவங்களையும் சமையற்குறிப்புகளையும் பகிர்ந்துகொள்கிறார். மாயா, தன்னை ஏமாற்றிய காதலனைப் பற்றிச் சொல்லி, அவனைப் பிரிந்த அன்றைக்கு அவன் வீட்டில் சாப்பிட்ட ருசியே இல்லாத Banana Puddingஐ அன்றைக்கே தன் வீட்டில் சமைத்து தானும் மகனும் சாப்பிட்ட கதையும் இருக்கிறது.

பெரும்பாலான சமையற்குறிப்புகள் படிக்க நன்றாக இருந்தாலும் சமைப்பதென்பது என்னைப்போன்றவர்களுக்கெல்லாம் இடுப்பொடிக்கும் வேலை. மாயா கொடுத்திருக்கும் tamale சமைக்க ஓரளவு சுலபமென்றாலும் கடையில் வாங்கிவிடலாம் என்று தோன்றுகிறது. என்றைக்காவது சமைத்தால் உங்களைக் கட்டாயம் கூப்பிடுகிறேன் ஈழநாதன். ;)

Rockfeller Foundation அழைப்பின்பேரில் பதினைந்து கலைஞர்களோடு Bellagio, இத்தாலிக்குப் போன மாயா அங்கேயும் ஒரு தடவை சமைக்கிறார். Thanksgiving அன்று Turkey சமைப்பதற்கான சமையற்குறிப்பு தெரியுமா என்று சமையலறையில் இருந்து ஒருவர் வந்து கேட்க மாயா தெரியும் என்கிறார். பிறகுதான், தானிருக்கும் சூழ்நிலை அதற்கு உகந்ததல்ல என்று உணர்கிறார். இருந்தாலும் மாயா ஆஞ்செலௌ சமையலறைக்கே செல்கிறார். அங்கேயிருக்கும் chef ஆறடி உயரமுள்ள கறுப்புப் பெண்மணியை எதிர்பார்க்கவில்லை. அவரை இன்னொரு சமையற்காரரைப் பார்த்துக்கொள்ளுமாறு சொல்கிறார். மாயா எதையும் கண்டுகொள்ளாமல் சமையலில் இறங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவரது சமையலின் மணம் எல்லோரின் கவனத்தையும் ஈர்க்கிறது. முடிக்கும்போது தலைமைச் சமையல்காரரே மாயாவின் சமையலைப் பாராட்டுகிறார்.

இத்தாலி, இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்விட்ஸர்லாந்து என்று பல நாடுகளிலும் பெற்ற அனுபவங்களை மாயா பகிர்ந்துகொள்கிறார். கடைசியாக அவர் முடிப்பது ஓப்ராவுக்குப் பிடித்தமான Suffocated Chicken. ஓப்ரா பிரபலமாகுவதற்கு முன்பே அவரைச் சந்தித்ததைப் பகிர்ந்துகொள்ளும் மாயா ஆஞ்செலௌ, ஓப்ரா எப்படி தன்னைக் கவர்ந்தார் என்பதையும் தான் அவரின் வளர்ச்சியை படிப்படியாக பார்த்ததையும் கூறி Smothered Chicken என்ற சமையற்குறிப்பையும் கொடுக்கிறார். ஒரு முறை தன் வீட்டுக்கு வந்த ஓப்ராவிற்கு இரவுணவாக Smothered Chicken சமைத்து அடுத்த நாட்காலைவேளை என்ன சமைக்கலாம் என்று பார்த்துக்கொண்டிருந்தபோது வந்த ஓப்ரா Smothered Chickenஐயே கேட்டு வாங்கிச் சாப்பிட்டு அதற்கு Suffocated Chicken என்று பெயர் வைத்தராம்.

இவ்வளவு எழுதிவிட்டு ஒரு சமையற்குறிப்புக்கூட கொடுக்கவில்லை என்றால் நன்றாக இருக்குமா?

இந்தப் புத்தகத்திலேயே மிகவும் சுலபமான சமையற்குறிப்பு.

Chocolate Fudge

சர்க்கரை(சீனி) - 3 கப்

பால் - 3 கப்

Corn சிரப் - 2 மேஜைக்கரண்டி

Semisweet சாக்கலேட் துண்டுகள் - 6 அவுன்ஸ்

பட்டர் - 3 மேஜைக்கரண்டி

வனிலா - 1 டீஸ்பூன்

Pecans - 1 கப்(தேவையென்றால்)

1. 8×8 பேக்கிங் Panஇல் பட்டர் தடவி வைத்துக்கொள்ளுங்கள்.

2. பெரிய கடாயில் அல்லது பாத்திரத்தில் சீனி, பால், Corn Syrup, மற்றும் சாக்கலேட்டை சுட வையுங்கள்.

3. நன்றாக கொதித்ததும், நல்ல குளிர்த்தண்ணீர் டம்ளரில் ஒரு துளியை விடுங்கள். சாக்கலேட் கலவை ஒரு சிறிய பந்துபோல உருண்டால் நல்ல பதத்திற்கு வந்துவிட்டது என்று அர்த்தம். அடுப்பில் இருந்து எடுத்துவிடுங்கள். இல்லையென்றால் இன்னும் கொஞ்ச நேரம் கொதிக்க விடுங்கள். மறுபடியும் மேலே சொல்லியிருக்கும் பந்து போல உருள்கிறதா என்று சோதியுங்கள்.

4. அடுப்பில் இருந்து எடுத்ததும் வைத்திருக்கும் பட்டர் மற்றும் வனிலா எஸ்ஸென்ஸைச் சேருங்கள். ஆறவிடுங்கள்.

5. கை பொறுக்கும் சூட்டு ஆறியதும், பெரிய கரண்டியால் நன்றாகச் சேருங்கள். முட்டையடிப்பதுபோல அடித்தாலும் சரி. எல்லாம் நன்றாகச் சேருமாறு அடித்த பிறகு pecan nuts வேண்டுமென்றால் சேருங்கள்.

6. பட்டர் பூசி வைத்திருக்கும் தட்டில் ஊற்றி நன்றாக ஆறவிடுங்கள்.

7. நன்றாக அறியதும் சிறு துண்டுகளாக வெட்டி ஓரிரு துண்டங்களை உங்களுக்கு வைத்துக்கொண்டு மீதியை மான்ரியலுக்கு Fed-exஇல் அனுப்பி வையுங்கள். ;)

-->

Posted in பிற மொழிகள், .அ-புனைவு | Comments Off

The Memoirs of Protima Bedi

July 18th, 2006 by புத்தகவாசம்

அசல் பதிவுக்குச் செல்ல இங்கே சுட்டுக: நிர்மலா

சென்ற முறை சென்னை சென்றிருந்த போது கண்ணில் பட்ட புத்தகம். கறுப்பு வெள்ளையில் அட்டை பூராவும் சிரிக்கும் ப்ரொதிமாவின் க்ளோசப் முகம்… பெரிய சிவப்புப் பொட்டுடன். அன்றைய வாங்கும் கோட்டா ஏற்கனவே முடிந்து விட்டிருந்தது. வாங்கிய லிஸ்டில் memoirs of a geisha ஏற்கனவே இருந்ததில் இதை அப்போதைக்கு விட்டு விட்டாலும் மிஸ் பண்ணியது உறுத்திக் கொண்டிருந்தது. (அதை இன்னும் படிக்கவில்லை என்பது வேறு விஷயம்!)

சமீபத்தில் கொல்கத்தா காலேஜ் தெருவில் பழைய புத்தகக் கடையில் மறுபடியும் கண்ணில் பட்ட போது யோசிக்க வேண்டியிருக்கவில்லை. விலை வேறு ரொம்ப குறைவாக. (இந்த புத்தகங்களையெல்லாம் யார் பேப்பர்காரருக்கு போடுகிறார்கள்? ஏன்?!) பின் அட்டையில் நீல நிற அங்கியும் மொட்டை அடித்து சற்றே முளைத்த முடியோடு ப்ரொதிமாவும். பக்கத்தில்

‘ I have broken every single rule that our society has so carefully constructed. I have known no barriers. I have done precisely what I bloody well felt like doing and never given a damn. I have flunted my youth, my sex, my intelligence, and I have dont it shamelessly. I have loved many, been loved by some…’

இதை வாசித்த பிறகு இந்த புத்தகத்தை படிக்க ஒரு வாகான தருணத்திற்கு காத்திருக்க வேண்டியதாகப் போயிற்று.

வாய்த்தது இந்த முறை சென்னை பயணத்தின் போது. முதல் வகுப்பின் நான்கு இருக்கையில் இரண்டு பேர் கடைசி வரை ஏறவேயில்லை. ஏறிய ஒருவரும் புத்தகமும் கையுமாக ஒரு வார்த்தை கூட பேசப்போகும் அறிகுறியில்லாத என்னைப் பார்த்து படுக்கையை விரித்தவர் தான். குறட்டையைத் தவிர வேறு சத்தமில்லை! ராத்திரி படுக்கப் போகுமுன் ஏனோ அடுத்த கேபினுக்கு மாறிக் கொண்டார்! எதிர்பாராமல் வாய்த்த இந்த தனிமை இந்த புத்தகத்தோடு இன்னும் ஒன்றிப் போக வசதியானது.

ப்ரொதிமாவால் தொகுக்கப் பட்டது. அவருடைய மகள் பூஜா பேடி இப்ராஹிம் முயற்சியால் வெளிவந்திருக்கிறது. சிக்கல்கள் நிறைந்த குழந்தைப் பருவம், பள்ளி வாழ்கை, வேகம் நிறைந்த வாலிப வயது , பேடியுடனான லிவ் இன் ரிலேஷன்ஷிப்… ஆரம்பமே நிறைய ஆச்சர்யங்களோடு.

தடுமாற்றங்கள் நிறைந்த… கவன ஈர்ப்புக்கு போராடும்… சலனங்களோடு இயல்பாக பயணிக்கும்… குழந்தைகளுக்கு அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் நிறைந்த அம்மாவாக… இருபத்தி ஆறு வயதில் ஒடிசி கற்றுக் கொள்ள ஆரம்பித்தது… நேசித்த ஆண்கள்… நேசிக்கப் பட்டது… தனி ஆளாய் நிருத்யாகிராம் அமைய போராடியது… மகனை இழந்தது… நாற்பத்து சொச்சம் வயதில் கூட யாருக்கோ காதலியாய் இருந்தது…

சென்னையில் இறங்கும் போது புத்தகம் முடிந்து விட்டது. ப்ரொதிமாவுடன் என் பயணமும். ஏறக்குறைய என் அம்மாவின் வயது இவருக்கு. இருவருடைய வாழ்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது எனக்கு ப்ரொதிமாவுடையது பிடித்திருந்தது.

-->

Posted in பிற மொழிகள், .அ-புனைவு | Comments Off

« Previous Entries