-->

About the Site:

  • புத்தகம், புத்தகம், புத்தகம்..

Archives




தமிழில் எழுத:

தமிழ் விக்கிபீடியா

logobig.jpg

சிற்றிதழ்கள்

ஜே.ஜே: சில குறிப்புகள் - 1

February 20th, 2005 by இரா.முருகன்

மதிக்கு நன்றி.

இந்தக் கலந்துரையாடலை நடத்திப் போகும் முன், ‘to keep us all at the same page (literally too!) -

என்னிடம் இருக்கும் பதிப்பு -

நூல் : ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’

வெளியீட்டாளர் : காலச்சுவடு பதிப்பகம்

பதிப்பு எண் : ஆறாவது பதிப்பு

வெளியீடு : செப்டம்பர் 2004

பக்கங்கள் : 184

இந்தக் கலந்துரையாடலுக்கு நான் ஏற்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் :

1) இந்தப் புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டும்போது செப்டம்பர் 2004 பதிப்பிலிருந்து பக்க எண்கள் தரப்படும். இந்தப் பக்க எண்கள் முந்திய பதிப்புகளில் மாறி இருக்கலாம். எனவே பக்க எண்ணோடு கூடவே அத்தியாய எண்ணும் தரப்படும். அதை வைத்து மேற்கோள் எங்கிருந்து என்று பழைய பிரதி வைத்திருப்பவர்களும் எளிதில் கண்டுகொள்ளலாம்.

2) மேற்கோளின் முதலில் வரும் சில சொற்களும் பின்னர் ‘……..’ என்ற குறிப்பும் தொடர்ந்து மேற்கோளின் இறுதி வரிகளும் மட்டும் குறிப்பிடப்படும். முழுமையாகத் தட்டச்சு செய்யும் வேலையைக் குறைப்பதற்காகவே இந்த ஏற்பாடு.

3) புத்தகம் தற்போது கைவசம் இல்லாத நண்பர்களில் யாராவது முன்னர் படித்த நினைவோடு கலந்து கொள்ள வரும்போது, இந்த வரிகளில் சொல்லப்பட்டது மறந்து போயிருந்தால், அவர்களுக்கு விவாதத்துக்கு இடையே, பங்கு பெறும் வேறு யாராவது அந்த வரிகளை முழுமையாகத் தட்டச்சு செய்து அளித்து உதவலாம்.

4) புத்தகத்தை முதலிலிருந்து கடைசி வரை சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு படிப்போம். ஏழு அல்லது எட்டு வார இறுதிகளில் இதை நிறைவு செய்யத் திட்டம். இந்த வாரம் இந்தப் பகுதி என்று அறிவிக்கப்படும் (உதாரணம் ‘அத்தியாயம் எட்டும் ஒன்பதும்’). அடுத்த வாரம் வரை அந்தப் பகுதி விவாதிக்கப்படும். அந்தப் பகுதி பற்றிய விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துச் சொல்லும்போது அந்தப் பகுதியையும், அதற்கு முந்திய பகுதிகளையும் பற்றிச் சொல்லலாம். ஆனால் அடுத்து வரப்போகும் பகுதி பற்றிப் பேசாமல் இருந்தால் நலமாக இருக்கும் - குவியம் மாறாமல் இருக்கும்.

5) ஒவ்வொரு வாரமும் நான் சில பக்கங்களிலிருந்து (வரிசை மாறாமல் இருக்கும் இது) சில மேற்கோள்களைக் காட்டி வினாவாகவும், உரத்த சிந்தனையாகவும், விமர்சித்தும், சிலாகித்தும் சொல்லக் கூடும். மற்றவர்கள் இவற்றையே வெட்டியும் ஒட்டியும் பேச வேண்டும் என்றில்லை. ஆனால் அந்த வாரத்துக்கான லட்சுமண ரேகையைத் (விதி எண் #4 காண்க) தாண்டக்கூடாது. அவ்வளவுதான்!

6) சு.ரா எழுதிய வேறு புத்தகங்கள், அந்தந்த வாரப் பகுதியைப் படிக்கும்போது தமிழ், பிறமொழி இலக்கியங்களில் ஒத்த சிந்தனையுடைய, முற்றிலும் எதிர் சிந்தனை கொண்ட பகுதிகள் பற்றி எல்லாம் பேசலாம்.

7) ஜே.ஜே படிக்காதவர்கள் மேற்குறிப்பிட்ட விதி எண் # 6-ன் படி ஆட்டத்தில் அனுமதிக்கப்படுவார்கள் :-) மற்றபடி, அவர்கள் படிக்காத ஜே.ஜே பற்றி விவாதிக்க மாட்டார்கள் என்பது எனக்கு சர்வ நிச்சயமாகத் தெரியும்.

அத்ரயே உள்ளு. ஜே.ஜேவைச் சந்திக்கப் போகலாமா (அடுத்த கடிதத்தில்)?

அன்புடன்,
இரா.மு

-->

Posted in அலசல்-பழையது |

One Response

  1. தமிழ் வலைப்பதிவு » சுந்தர ராமசாமி நினைவாக.. Says:

    […] ஜே.ஜே. சில குறிப்புகள் - 1 […]

Leave a Comment

Please note: Comment moderation is enabled and may delay your comment. There is no need to resubmit your comment.