அறிமுகம்

பெயர்: சந்திரமதி கந்தசாமி
இடம்: கனடா
இணையத்தளம்: http://mathy.kandasamy.net
வலைப்பதிவுகள்:
Musings: http://mathy.kandasamy.net/musings
Movietalk: http://mathy.kandasamy.net/movietalk

இணையத்தமிழ் 1999-ஆம் ஆண்டு அறிமுமாகியிருந்தாலும் தமிழ் இணையத்தினுள் நான் நுழைந்தது 2001-இல். விகடன்.காமில் ‘கோணல் பக்கங்கள்’ எழுதிக்கொண்டிருந்த சாரு நிவேதிதாவுடன் விவாதிப்பதற்காகத் தொடங்கப்பட்ட யாகூ குழுமத்தில் சேர்ந்தேன். 2001 செப்டம்பர் 4-இல் நண்பர்கள் சிலருடன் ‘மரத்தடி’ யாகூ குழுமத்தைத் தொடங்கி குழுமத்தின் உரிமையாளர் மற்றும் மட்டுறுத்துனராக 2005 ஜனவரி வரை இருந்தேன். இந்தக் காலகட்டத்தில் கற்றுக்கொண்டது நிறைய. சந்தித்த நண்பர்களும் ஏராளம்.

தமிழ்வலைப்பதிவுகள் 2003இல் பிரபலமாகத் தொடங்கின. 2003 மே மாதம் ப்ளொக்-ஸ்பாட்டில் இரண்டு வலைப்பதிவுகளைத் தொடங்கினேன். ஜூன் 2003-இல் தமிழ்வலைப்பதிவுகளை ஓரிடத்தில் பட்டியலிடுவதற்காக http://tamilblogs.blogspot.com. முதலாவது தமிழ் வலைப்பதிவு பட்டியல் அது.

ஜூலை 2003இல் வலைப்பூ என்னும் வலைப்பதிவைத் தொடங்கினேன். அப்போது எழுதியது இங்கே:

This journal for Tamil Bloggers can act as the meeting point for all Tamil Bloggers. One activity I have in mind is bringing together the Tamil Bloggers and each blogger could provide something exclusive to this journal. We could bring in non-bloggers as well and request them to write for us. (I am thinking of Tamil Techies, and learned people here)

Will elaborate in Tamil later. Please do share your views and suggestions about this journal blog.

வலைப்பூ வலைப்பதிவு, ப்ளொக்-ஸ்பாட்டில் .நெட்-க்க நகர்ந்தது. அங்கிருந்து தமிழ்மணம் தொடங்கப்பட்டபோது நட்சத்திரமாக உருமாறியது.

தமிழ்வலைப்பதிவு பட்டியல் மற்றும் வலைப்பூவில் உதவியாக இருந்த காசி, தமிழ்மணம் ஆரம்பித்தபோது நானும் அங்கு அவருக்கு உதவியாக இருந்தேன். இப்போது TMI நடாத்தும் தமிழ்மணம் மற்றும் பூங்காவில் அங்கம் வகிக்கிறேன். தமிழ்மணம் மற்றும் பூங்காவினை நிர்வகிக்கும் TMI-இலிருந்து மார்ச் 5, 2007 அன்று வெளியேறிவிட்டேன்.

யாகூ குழுமத்தினூடாக தமிழ் இணையத்தில் நுழைந்த நான், வலைப்பதிவுகளில் ஆர்வத்துடன் ஈடுபட முக்கிய காரணம் வலைப்பதிவுகளின் கட்டற்ற சுதந்திரத் தன்மை. வலைப்பதிவுகள் வருவதற்கு முன்பிருந்த கட்டுப்பாடுகள், வலைப்பதிவுகளின் வருகைக்குப்பிறகு தளர்ந்துபோயின. பல விதமான குரல்கள், எவ்வித கட்டுப்பாடுமின்றி இணையத்தில் ஒலிக்கத் தொடங்கின. இம்மாதிரியான சுதந்திர ஊடகம் மக்களிடையே பிரபலம் ஆவதற்கு ஆரம்பத்தில் சில முன்னெடுப்புகள் தேவையாயிருந்தன. அம்மட்டில் அணில்போல சிலவற்றைச் செய்திருப்பதில் திருப்தி. ஆயினும் நாம் செல்லவேண்டிய தூரம் நீண்டது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விதயம்.

பிடித்த விதயங்கள் என்று பார்த்தால்: எதுதான் பிடிக்காது என்று சொல்லவேண்டும். எதையும் ஒரு முறை முயற்சி செய்துபார்த்துவிடும் குணம் என்னுடையது.

வந்த இடத்தில் படிக்க இரண்டு கவிதைகள்.

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

சந்திரமதி - பாரதியார்

பச்சைக் குழந்தை யடி கண்ணிற்
பாவை யடி சந்திரமதி
இச்சைக் கினிய மது; - என்றன்
இருவிழிக்குத் தே நிலவு;
நச்சுத்தலைப் பாம்புக் குள்ளே - நல்ல
நாகமணி யுள்ள தென்பார்;
துச்சப்படு நெஞ்சிலே - நின்றன்
சோதி வளரு தடீ!

பேச்சுக் கிடமே தடி! - நீ
பெண்குலத்தின் வெற்றி யடி!
ஆச்சரிய மாயை யடி! - என்றன்
ஆசைக் குமரி யடி!
நீச்சு நிலை கடந்த - வெள்ள
நீருக்குள்ளே வீழ்ந்தவர் போல்,
தீச்சுடரை வென்ற வொளி - கொண்ட
தேவி! நினை விழந்தே னடி!

நீலக் கடலினிலே - நின்றன்
நீண்ட குழல் தோன்று தடி!
கோல மதியினி லே - நின்றன்
குளிர்ந்த முகங் காணு தடி!
ஞால வெளியினி லே - நின்றன்
ஞான வொளி வீசுதடி!
கால நடையினி லே - நின்றன்
காதல் விளங்கு தடி!

  • You Avatar
    -


Creative Commons License