தமிழ் வலைப்பதிவு

காலம் இதழில் வெளியான லஷ்மி ஹோம்ஸ்ட்ரோமுடனான நேர்காணல்
நேர்காணல்: மு. நித்தியானந்தன்

தமிழின் நவீன எழுத்துக்களைத் தனது நேர்த்தியான ஆங்கில மொழிபெயர்ப்புக்களின் மூலம் உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டுசென்ற சாதனையை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் கடந்த இரு தசாப்தங்களாக நிகழ்த்தி வருகிறார். புதுமைப்பித்தன், மௌனி, சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ந. முத்துசாமி, அம்பை, பாமா, இமையம் ஆகிய தமிழின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளை இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் தமிழர் அல்லாத வாசகர்கள் அறிந்துகொள்வதற்கான சாளரங்களை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் திறந்துவிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதத்தின் ஓர் அழகிய, இதமான வெய்யில் மின்னிக்கொண்டிருந்த காலைப்பொழுதில் லண்டனிலிருந்து மேற்கே விரியும் அழகிய வெளிகளையும், பச்சைப்பசேல் என்ற நிலத்தோற்றத்தையும் ரசித்தபடி மூன்று மணிநேரக் கார்ப் பயணத்தின் பின் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோமின் நோரிச் (Norwich) இல்லத்தைச் போய்ச்சேர்ந்தோம். பலமுறை சென்ற வீடுதான் அது. இந்தமுறை ‘காலம்’ இதழுக்கான விசேட நேர்காணலுக்;காகச் சென்றிருந்தோம். வ. பவகரன், மு. புஷ்பராஜன், இ. பத்மநாப ஐயர் ஆகியோர் இந்த நேர்காணலின்போது உடனிருந்தார்கள். லக்ஷ்மியின் ஐந்து பெரிய அறைகளைக் கொண்ட அந்த வீடு முழுவதும் புத்தகங்களால் நிரம்பி வழிகிறது.  லக்ஷ்மியோடு அவரது கணவர் மார்க் ஹோம்ஸ்ட்ரோம் இனிய புன்னகையுடன் எங்களை வரவேற்றார். அவர் சமூக மானிடவியலில் கலாநிதிப் பட்டம் (Ph.D.) பெற்று, கிழக்கு அங்கிலியாப் பல்கலைகக் கழகத்தில் (University of East Anglia)) மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். இந்தியாவில் கள ஆய்வுகளை மேற்கொண்டு ஆங்கிலத்தில் நூல்களை எழுதியிருக்கிறார். லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம் பேட்டிகள், மேடைகள், விளம்பரங்கள் என்பனவற்றிற்கு அப்பாற்பட்ட எளிமைகொண்டவராகத் திகழ்பவர். மிகுந்த சங்கோசத்துடன் இந்தப் பேட்டிக்கு இணங்கினார் என்றாலும் ஓர் ஈடுபாட்டுடன் இந்த உரையாடலைத் தொடர்ந்தார் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

கேள்வி: உங்களின் கல்விப் பின்னணி பற்றி முதலில் பேசுவது நல்லது என்று நினைக்கிறேன்.

பதில்: எனது ஆரம்பக் கல்வி பெங்களூரில் அமைந்தது. அப்போது பெங்களூர், சென்னை மாநிலத்தின் கீழ் இருந்த காலனித்துவ காலம். அப்போது பெங்களூர் கன்ரோன்மன்ற் பகுதி முழுவதுமே தமிழ் சார்ந்ததாகத்தான் இருந்தது. நான் மிகச்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பித்துவிட்டேன் என்றாலும் அதற்குச் சமமான தமிழ்ப் பயிற்சியும் எனக்கு பெங்களூரில் கிடைத்ததைச் சொல்லவேண்டும். மிகச்சிறந்த தமிழ் ஆசிரியர்கள் எங்களுக்குத் தமிழ்ப் பாடத்தைக் கற்பித்தார்கள். கம்பனையும் சிலப்பதிகாரத்தையும் சிறப்பாகக் கற்பித்தனர்.  எனது இன்ரமீடியற் பாடத்திட்டத்திற்கு ஆங்கிலத்துடன் தமிழையும் நான் ஒரு பாடமாகக் கொண்டிருந்தேன். எங்களது இந்த இலக்கிய ஆர்வத்திற்கு எங்களது குடும்பப் பின்னணி பெருமளவு காரணமாக அமைந்தது. எனது தந்தை சமஸ்கிருதத்திலும், ஒப்பியல் சமயத் துறையிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எனது சகோதரி சமஸ்கிருதத்தை நன்கு கற்று, பாளி மொழியில் மிகுந்த பாண்டித்தியம் கொண்டவராகத் திகழ்கிறார். ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்ற நான், எனது பட்டப் படிப்பை முடித்த பின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழத்தில் எனது முதுமானி (M.A.) பட்டத்திற்கான பயணத்தைத் தொடர்ந்தேன். பாரம்பரிய ஆங்கில ஆராய்ச்சிமுறைக்கு மாறாக, ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களை எனது ஆராய்ச்சிப்பொருளாக நான் எடுத்தபோது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வியப்படைந்தது என்றே கூறவேண்டும். எனது ஆங்கிலத்துறைப் பேராசிரியர் ஓர் இரவு விருந்துபசாரத்தின்போது, ஆர். கே. நாராயணன் என்ற எழுத்தாளர் பற்றி லக்ஷ்மி ஆராய்ச்சி செய்யப்போவதாகக் கூறுகிறார். அந்தப் பெயரை யாராவது கேட்டிருக்கிறீர்களா என்று அங்கு இருந்தவர்களிடம் வினாவினார்.  நல்லவேளையாக அங்கிருந்த ஒருவர் நான் ஆர். கே. நாராயணனின் Bachelor of Arts என்ற நாவலை வாசித்திருந்ததாகக் கூறி, எனது மரியாதையைக் காப்பாற்றினார். அறுபதுகளில் இந்திய வாழ்க்கையை ஆங்கிலத்தில் சித்தரித்த முக்கிய மூலவர்களாக முல்க்ராஜ் ஆனந், ராஜா ராவ், ஆர். கே. நாராயணன் ஆகிய மூவரும் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறார்கள். இந்த மூவரின் எழுத்துக்களால் கவரப்பட்ட நான், ஆர். கே. நாராயணனின் படைப்புக்களை ஆய்வுக்கு எடுத்தபோது இந்திய இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்ட ஒரு பேராசிரியர், Oxford School of Oriental Studies என்ற கல்லூரியின் சார்பாக எனது மேற்பார்வையாளராக அமைந்தார்.

கேள்வி: ஆர். கே. நாராயணனின் ஆராய்ச்சி குறித்த உங்களது ஆய்வேடு நூலாக வெளிவந்திருக்கிறதா?

பதில்: ஆம். அந்த நூல் வெளியாகிப் பல வருடங்களாகிவிட்டன. அந்த நூல் இப்பொழுது எங்கும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. இப்போது அந்த நூலை நான் வாசிக்க விரும்புவேனா என்று எனக்குச் சொல்லத்தெரியவில்லை. நான் அந்த ஆய்வைத் தொடங்கியபோது இந்திய ஆங்கில எழுத்துக்களைப் பற்றி முன்னோடி ஆய்வுகள் எதுவும் நடைபெற்றதில்லை. உண்மையில் முற்றிலும் ஒரு புதிய தரத்தில் எனது ஆராய்ச்சியை தொடங்கினேன் என்று நான் கூறுவேன். இந்த ஆய்வையொட்டி ஆரம்பகாலத் தமிழ் நாவல்களை நான் வாசிக்க ஆரம்பித்தேன். ‘கமலாம்பாள் சரித்திரம’;, ‘பத்மாவதி சரித்திரம்’ போன்ற நாவல்கள் என் கவனத்தை ஈர்த்தன. தமிழ் இலக்கியத்துடன் தொடர்ந்து, இந்தியாவில் பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களிலும் அப்போது நான் ஆர்வம் கொண்டிருந்தேன். இந்த வாசிப்பில் இருந்துதான் ஆங்கில மொழிபெயர்ப்பில் தீவிரம் கொள்ள ஆரம்பித்தேன். ஏ. கே. ராமாநுஜத்தின் தமிழ் இலக்கியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எனக்கு இத்துறையில் உத்வேகம் ஊட்டின.

நான் முதலில் மொழிபெயர்த்த தமிழ்ச் சிறுகதை அம்பையின் ‘மஞ்சள் மீன்’ என்ற சிறுகதையாகும். Virago என்ற வெளியீட்டகத்திற்காக இந்தியப் பெண்களின் தேர்ந்த சிறுகதைகளை தொகுத்து The Inner Courtyard என்ற சிறுகதைத் தொகுப்பு, ஆங்கிலத்தில் வெளியான எனது முதல் நூலாகும்.  இந்த நூல் இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் மூலந்தான் அம்பை எனக்கு அறிமுகமானார்.  அவரது ‘சிறகுகள் முறியும்’ என்ற முதலாவது சிறுகதைத் தொகுப்பை அடுத்து, ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ என்ற சிறுகதைத் தொகுப்பை ‘க்ரியா’ வெளியிட்டிருந்தது.  அம்பையின் மொழிபெயர்ப்பை அடுத்து, பாமாவின் ‘கருக்கு’ என்ற நாவலும் மொழிபெயர்ப்பில் செழுமையான அனுபவங்களைச் சேர்த்துள்ளது.  தமிழில் எழுந்த தலித் இலக்கிய நூல்கள் இந்திய வாழ்க்கையின் புதிய பரிமாணத்தை எனக்கு உணர்த்தின. இமையத்தின் ‘கோவேறு கழுதை’ என்ற நாவலை நான் மிகுந்த ஆர்வத்துடன் மொழிபெயர்த்திருந்தேன். மினி கிருஷ்ணன் பாமாவின் ‘கருக்கு’ நாவலை மொழிபெயர்க்குமாறு கேட்டபோது அந்த மொழிபெயர்ப்பில் நான் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டேன். ‘கருக்கு’ நாவல் மொழிபெயர்ப்பு எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது என்று சொல்லவேண்டும். ‘கருக்கு’ நாவல் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது, அது இந்தியாவிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அம்பையும் பாமாவும் இன்று தமிழ்நாட்டிற்கு வெளியே அதிகம் பேசப்படும் பெண் எழுத்தாளர்களாகத் திகழ்கிறார்கள் என்றால், அதற்கு இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கள்தான் ஆதாரமாக அமைந்தன என்று கூறலாம்.  ‘கருக்கு’ நாவல் ஒரு தலித் பெண்ணின் கோபத்தையும் வலியையும் நேரடியாக, அந்த மண்ணின் மணத்தோடு பேசும் நாவலாகும்.

கேள்வி: தலித் இலக்கியம் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: மராத்திய தலித்துகளிடமிருந்து ஊட்டம் பெற்ற தலித் இலக்கியம், இந்தியத் தேசிய அளவில் எழுந்துள்ள எதிர்ப்பு இலக்கிய வடிவமாகும். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழில் தனித்த ஓர் இலக்கியச் செல்நெறியாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் இதுகாலவரை தமிழில் நிலவி வந்த இலக்கிய நியமங்களுக்குப் பெரும் சவால்களை விடுத்துள்ளது. தலித் மக்களின் வாழ்க்கை பற்றிய இந்தப் புதிய விவரணங்கள் தமிழ் வாசகர்களுக்குப் புதியதோர் உலக நோக்கினைத் தந்துள்ளன. மறுபுறம், இலக்கண அமைதி, மரியாதையான மொழிப்பயன்பாடு போன்ற நியமங்களுக்கு மாறாகத் தலித் மக்களுக்கேயுரிய மொழிவழக்கு, செலவடை, நாட்டார் வழக்கு ஆகிய அம்சங்களைக்கொண்டு தலித் இலக்கியம் தமிழிற்குப் புதிய பரிமாணங்களைத் தந்துள்ளது. பாமாவின் ‘கருக்கு’, ‘சங்கதி’ ஆகிய இரு படைப்புகளும் ஆங்கில மொழிபெயர்ப்பின் வாயிலாக இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் முன்னெடுத்துச் செல்லப்பட்டிருக்கிறன.

கேள்வி: நவீன தமிழ்ப் படைப்புக்கள் எந்த அளவிற்குத் தமிழர் அல்லாதவர்கள் மத்தியில் அறிமுகமாகி இருக்கிறது?

பதில்: துரதிஷ்டவசமாக இல்லை என்றே கூறவேண்டும். உலகத் தரத்திற்கு இணையாக வைத்துப் பேசக்கூடிய எம் தமிழ்ப் படைப்பாளிகள் இன்னும் வெளியுலகிற்குத் தெரியவரவில்லை என்ற ஏக்கம் எனக்கு எப்போதும் இருக்கிறது. புதுமைப்பித்தன், மௌனி, அசோகமித்திரன், சுந்தர ராமசாமி போன்ற நவீன தமிழ் எழுத்தின் மூலவர்கள் இன்னும் வெளியுலகிற்குத் தெரியாதவர் களாகத்தான் இருக்கிறார்கள். வங்காள மொழி இலக்கியத்திலும் உருதுமொழி இலக்கியத்திலும் உள்ள சிறந்த எழுத்தாளர்களின் பெயர்கள் உலக அரங்கில் பரிச்சயம் மிக்க பெயர்களாக இருக்கும் அதேவேளையில் தமிழின் மிக உன்னத எழுத்தாளர்கள் இன்னும் தெரியவராமல் இருப்பது நாம் மிகுந்த கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம் என்று கருதுகிறேன்.

கேள்வி:  தமிழின் நவீன எழுத்தில் பரிசோதனைகளை மேற்கொண்ட மௌனியின் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். மௌனியின் கதைகள் மொழிபெயர்ப்புக்கு ஒரு சவாலாக அமைய வில்லையா?

பதில்: உண்மைதான்.  மௌனியின் எழுத்து சற்றே பூடகமானதும் கவித்துவப் பாங்கானதுமாகும்.  தன்னுடைய மன உத்வேகத்தை வெளிப்படுத்துவதற்குத் தமிழ்மொழி போதுமானதாக இல்லை என்றுகூட மௌனி குறைப்பட்டுக்கொண்டிருக்கிறார். அவரது வசனநடை தனித்துவமானதும் வித்தியாசமானதுமாகும். அவருடைய பல வாக்கியங்கள் perhaps, maybe ஆகிய அர்த்தம் தொனிக்கும் ‘போலும்’ என்று முடிவதைக் காணலாம்.  வாழ்க்கைக்கும் சாவுக்கும் கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை மங்கலாக்கும் எழுத்து அவருடையது. தமிழின் புனைகதை இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உந்தித்தள்ளிய ஓர் அற்புதமான எழுத்தாளராகவே மௌனியைப் பார்க்கிறேன். இதனைவிட அசோகமித்திரனும் தமிழில் மிக அற்புதமான சிறுகதைகளை வடித்திருக்கிறார் என்றே கூறுவேன். அசோகமித்திரனின் எழுத்துக்களை மொழிபெயர்ப்பதில் இரண்டு, மூன்று மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளார்கள் என்றாலும், அவரது ‘தண்ணீh’; என்ற நாவலை மொழிபெயர்த்தது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய அனுபவம் என்று கருதுகிறேன். சுந்தர ராமசாமியின் நாவல்களில் ‘குழந்தைகள் பெண்கள்; ஆண்கள்’ எனக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறுவேன். தமிழ்மொழியைக் கையாள்வதில் சுந்தர ராமசாமி ஒரு தேர்ந்த சிற்பியைப்போலச் செயற்பட்டிருக்கிறார். அவரது நாவல்களையும் கவிதைகளையும் சிறுகதைகளையும் மொழிபெயர்க்கும்போது அவருடன் நான் மேற்கொண்ட உரையாடல்கள் அவரின் மகத்தான ஆளுமையை என்னில் பதியச்செய்துள்ளது. ‘குழந்தைகள் பெண்கள்; ஆண்கள்’ என்ற நாவலின் மொழிபெயர்ப்பை சுந்தர ராமசாமி உயிருடன் இருந்தபோதே முடித்துவிட்டிருந்தேன் என்றாலும் அதனை அச்சில் காண்பதற்கு இன்னும் சிலகாலம் காத்திருக்க வேண்டும்போல் தெரிகிறது.

கேள்வி: தமிழ் எழுத்துக்களின் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கு இந்திய அளவில் அல்லது ஐரோப்பிய அளவில் எந்தளவு அங்கீகாரம் கிடைத்துள்ளது?

பதில்:  இந்திய மொழிகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் அண்மைக்காலங்களில் பெருமளவில் வெளிவந்தவண்ணமுள்ளன. இந்தியாவில் பல வெளியீட்டு நிறுவனங்கள் இந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளில் தீவிரமாகவே உழைத்துவருகின்றன.  Oxford University Press (OUP)> Macmillan, Orient Longman, East West Press, Penguin> Katha, Kali for Women ஆகிய வெளியீட்டகங்கள் இந்தத் துறையில் ஆர்வம் காட்டிவருகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பல்கலைக்கழக மட்டத்தில் இந்த மொழிபெயர்ப்புக்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. சிக்காகோ பல்கலைக்கழகத்தின் ஏ. கே. ராமாநுஜன், நோமன் கட்லர் போன்றோரது பெருமுயற்சி காரணமாக இந்திய இலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கு மிகச்சிறந்த வரவேற்புக் காணப்படுகின்றது.  அமெரிக்காவில் இடம்பெற்ற எழுத்தாளர்களின் பட்டறை ஒன்றில் புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’ என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் நான் வாசித்தபோது அந்த அரங்கு மிகுந்த அமைதியுடன் அக்கதையை ஆர்வத்துடன் கேட்டது. மிக அற்புதமான கதை இது, என்று அந்த அரங்கில் குழுமியிருந்த ஆங்கில எழுத்தாளர்கள் பாராட்டினார்கள். தமிழில் மிகச்சிறந்த எழுத்துக்கள் பெருமளவில் ஆங்கிலத்தில் வெளியாகவேண்டிய தேவை உள்ளது. பெருமளவு மொழிபெயர்ப்புக்கள் கிடைக்கும்போதுதான் நவீன தமிழ் இலக்கியம் பற்றிய சித்திரம் ஒன்று உலக வாசகர்களுக்குக் கிடைக்கக்கூடியதான சூழல் உருவாகும். இந்தப் பணி மிகுந்த உழைப்பையும் தீவிர அர்ப்பணிப்பையும் ஈ:டுபாட்டையும் கோரி நிற்கிறது. தமிழில் இன்று மிகச் சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். மேற்குலகின் வாசிப்பிற்கு உகந்த வகையில் இம்மொழிபெயர்ப்புக்களை மேற்கொள்வதும் அவசியமாக அமைகிறது.

பத்தாண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் புகழ்பெற்ற Heinemann பதிப்பகத்தினர் இந்திய நாவல்களை ஆங்கிலத்தில் வெளியிடும் திட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். முதலில் ஆறு இந்திய நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடும் திட்டத்தின் ஒரு பகுதியாகத் தமிழில் அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்ற நாவலை நான் ஆங்கிலத்தில்  மொழிபெயர்த்தேன். திட்டமிட்டபடி ஆறு நாவல்கள் வெளியாகின எனினும், அவை போதுமான அளவிற்கு ஆங்கில வாசகப் பரப்பில் வரவேற்பைப் பெறாததால் அவர்களின் பாரிய மொழிபெயர்ப்புத் திட்டம் கைவிடப்பட்டமை மிகப்பெரிய துரதிஷ்டம் என்றே கூறவேண்டும்.

கேள்வி: ஈழத்துக் கவிதைகளை மொழிபெயர்ப்பதில் உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வீர்களா?

பதில்: ஈழத்து அரசியலும் இலக்கியமும் எனக்கு மிக அண்மையில் பரிச்சயமானதொன்றாகும்.  பத்மநாப ஐயர் மூலமாகவே ஈழத்துக் கவிதைகளில் எனக்கு இந்த நெருக்கம் ஏற்பட்டது.  ஈழத்திற்குப் பயணம் செய்து ஈழத்துத் தமிழ் ஆய்வாளர்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்கு அவராலேயே கிடைத்தது. ஈழத்தின் பெண் எழுத்தாளர்களின் கவிதைகள் எனது அக்கறையைப் பெரிதும் ஈர்த்தன.  ஈழத்துக் கவிதைகளை மொழிபெயர்ப்பது, அவற்றின் அரசியல் பின்னணியில் பார்க்கும்போது கவலை தரும் ஒன்றாகும். ஈழத்தின் கணிசமான பெண் எழுத்தாளர்களின் கவிதைகளை மொழிபெயர்த்த அனுபவம் எனக்கு மகிழ்ச்சி தருவதாகும்.

கேள்வி: மொழிபெயர்ப்புக்களை புதிய சிருஷ்டி முயற்சியாக நோக்குகிறீர்களா?

பதில்:  மொழிபெயர்ப்பு இயந்திரீகமாகச் செய்யும் ஒன்றல்ல. ஒரு மொழியின் அர்த்த சாயல்களை, வேறுபாடுகளை நுணுகி விளங்கி, மூலநூலுக்கு விசுவாசமாக நின்று வேறொரு மொழியில் பேசும் முயற்;சி;;. ஒரு புதிய சிருஷ்டியை ஆக்குவதுபோலத்தான்.  மூலநூலினுடைய உள்ளார்ந்த குரலையும் நடையையும் மற்றுமொரு மொழியில் சேதாரம் இல்லாமல் கொண்டு சேர்ப்பது என்பது ஒரு மொழிபெயாப்ப்பாளரின் முன்னுள்ள சவாலாகும்.  ஒரு மொழிபெயர்ப்பாளன் ஒரு கண்ணாடிபோலச் செயற்படுவதில்லை. மூலநூலினை நன்கு கிரகித்து அதற்கு விளக்கம் தரும் ஒருவராகவும் அவர் அமைகிறார். மொழிபெயர்ப்பாக்கம் என்பது ஒரு புதிய சிருஷ்டியாகவே அமைந்துவிடுகிறது.

கேள்வி:  இந்திய மொழிகளின் மொழிபெயர்ப்புக்கள் இந்தியாவில் எந்தளவு முக்கியத்துவம் பெற்றுவருகின்றன?

பதில்:  மொழிபெயர்ப்புக்கள் பெருமளவில் வெளியாகிக்கொண்டிருக்கும் அதேநேரத்தில் இன்னும் மொழிபெயர்ப்புக்கள்மீது தீவிரமான அக்கறை காட்டப்படவில்லை என்ற ஒரு கருத்தும் நிலவி வருகிறது. இந்தியாவில் இருந்து மிகச்சிறந்த மொழிபெயர்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும். இந்தியாவின் இந்த மொழிபெயர்ப்புக்களின் வாசகப் பரப்பு எத்தகையது என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.  மொழிபெயர்ப்புக்களின் தாரதம்மியம் ஒருபுறமிருக்க, மொழிபெயர்க்கப்பட வேண்டிய இலக்கிய ஆளுமைகள் பற்றியும், மொழிபெயர்ப்புக்கள் எவ்வாறு வாசிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் ஆய்வுகள் தேவை.  பல்வேறு மொழிகள் பயில்கின்ற இந்தியா, மொழிபெயர்ப்புத் துறையில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.  மிகச்சிறந்த இந்திய எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்கள் உலகிற்கு இன்னும் தெரியாவதவர்களாவே இருக்கிறார்கள். தேர்ந்த எழுத்தாளர்களின் சிறந்த மொழிபெயர்ப்புக்கள் இல்லை என்பது மட்டும் ஒரு காரணமல்ல. வாசகப் பரப்பிற்கு எடுத்துச்சென்று இந்த எழுத்தாளர்களுக்குரிய அறிமுகத்தையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தர வேண்டிய பணியில் பிரபல வெளியீட்டு நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை என்பதும் ஒரு முக்கிய குறைபாடாகும்.

கேள்வி: புலம்பெயர்ந்த தமிழர்களின் மத்தியில் இந்தத் தமிழ் எழுத்துகளின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்?

பதில்: இது சிறிது சுவாரஷ்யமான கேள்விதான். பல்கலைக்கழக மட்டத்திலும், ஆராய்ச்சி நோக்கிலும் தலித் மக்கள், பெண்ணிய எழுத்துக்கள் என்ற அடிப்படையிலும், ஒப்பியல் இலக்கிய அடிப்படையிலும் இந்த மொழிபெயர்ப்புக்களுக்கு ஒரு வரவேற்பு உண்டு என்பது உண்மை. மௌனி சிறுகதைகளின் எனது மொழிபெயர்ப்பைப் பார்த்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து மௌனியின் பேத்தி மிகுந்த வியப்புடன் எனக்கு தெரிவித்த பாராட்டினை நான் மனதில் கொள்கிறேன். புலம்பெயர்ந்த நாடுகளில் ஆங்கிலத்தை முதல்மொழியாகக் கொண்டுள்ள இளம் தலைமுறையினர், தமிழ் இலக்கியத்தை ரசிப்பதற்கும், தமிழ் மொழியில் ஈடுபாடு காட்டுவதற்கும் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் பெரிதும் துணைபுரியும் என்றே நான் கருதுகிறேன்.  லண்டனிலும் கனடாவிலும் நான் மேற்கொண்ட கவிதை மொழிபெயர்ப்புப் பட்டறைகள் இளம் தலைமுறையினர் மத்தியில் ஆங்காங்கே துளிர்த்துவரும் அக்கறையின் சாட்சியாக அமைகின்றன.

நன்றி: காலம்

ShareThis

‘உதிரிப்பூக்கள்’ கடைசிக்காட்சியைப்பற்றி மரத்தடிக்காரர் எஸ்.பாபு
தமிழ் இணையத்தினூடாக நான் பெற்றது நிறைய.  அதில் முதலாமிடம் மரத்தடி.  மரத்தடி குழுமத்தில் பல சுவாரசியமான நபர்களைச் சந்தித்திருக்கிறேன்.  அங்கேதான் எனக்குப் பலப்பல விதயங்கள் அறிமுகமாயின.  அதில் மிகவும் குறிப்பிடத்தக்கது தமிழ்க்கவிதைகள்.  எனக்குப்பிடித்த பெரும்பாலான கவிதைகளை, கவிஞர்களை ‘தமிழில் நவீன கவிதைகள்’ என்ற தொடரின்மூலம்  எஸ்.பாபு அறிமுகம் செய்துவைத்தார். அப்போது கனடாவிலிருந்த அவர், இந்தியா  திரும்பவிருப்பதாக மடலொன்றில் தெரிவித்திருந்தார்.  அதற்குப்பிறகு சில வருடங்களாக அவரைக்க்காணவேயில்லை.  பழைய நினைவிருப்பவர்கள் எங்கேயாவது சந்தித்தால், இவரைப்பற்றியும் இவருடைய தொடரைப்பற்றியும் பேசுவதுண்டு. இன்றைக்கு, வழமைபோல பிரகாஷின் வலைப்பதிவில் அவர் கொடுத்திருக்கும் சுட்டிகளினூடாக சிலரைப் படிக்கப்போனேன். சுட்டிகள் இருக்குமிடத்திற்கு அனிச்சையாகப் போய்க்கொண்டிருந்தபோது எஸ்.பாபு என்ற பெயர் தெரிந்தாற்போல இருந்தது.  பார்த்தால் பாபுதான். 2005இல் பிரகாஷ் ‘உதிரிப்பூக்கள் பற்றி எழுதியிருந்தற்கு நீண்ட பின்னூட்டம் எழுதியிருந்தார்.  பிரகாஷிடம் அனுமதியெல்லாம் வாங்காமலேயே அந்தப் பின்னூட்டத்தைத் திருடிக்கொண்டு வந்துவிட்டேன். :)

பாபு சொல்லியிருப்பதைப்போல உதிரிப்பூக்களை  ஒவ்வொரு காட்சியாக வருணிப்பாரென்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

எஸ்.பாபு எழுதியது:

எல்லொருக்கும் அன்புடன்,

நான் எண்ணும் பொழுது…பாடல் அழியாத கோலங்கள் திரைப்படத்தில் தான். மரத்தடி.காம் இணையதளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு அழியாத கோலங்கள் திரைப்பட விமர்சனம் எழுதியிருக்கிறேன். விருப்பமுள்ளவர்கள் படித்துவிட்டு கடிதம் எழுதவும். உதிரிப்பூக்கள் பற்றிய இந்தப் பதிவு மேலோட்டமானது தான். கடைசி காட்சியில் ஊர் மக்கள் “குதித்துச் செத்துப் போ” என்றெல்லாம் மிரட்டுவதாக குறிப்பிட்டிருப்பது தவறு. கடைசி காட்சிகளில் விஜயன் பேசுகிற வசனத்தைத் தவிர வேறு வசனமே கிடையாது. செண்பகம் மானபங்கம் (கற்பழிப்பு அல்ல என்பதுதான் மற்ற படங்களிடமிருந்து இந்தப் படத்தை வித்தியாசப்படுத்துகிறது)செய்யப்பட்ட செய்தி ஊர் சனங்களிடம் பரவுவது இளையராஜாவின் பிண்ணனி இசையில் சொல்லப்பட்டு விடுகிறது. பிறகு ஊர் திரண்டு விஜயனை வீட்டில் மடக்கிப் பிடிக்கிற காட்சி. அப்போதும் வசனம் கிடையாது. பிறகு திடீரென வெறிச்சோடிப் போன ஆள் அரவமில்லாத தெருக்கள் காட்சிப்படுத்தப் படுகிறது. அப்போது பிண்ணனி இசைகூட இல்லை. இதன் தொடர்ச்சியாக மேள தாளம் முழங்குவது போல் பிண்ணனி இசையில் விஜயன் முன்னே நடக்க ஊர் பின் தொடர்கிறது. ஆற்றுக்கு அருகில் மேட்டுப் பகுதிக்கு வந்தவுடன் இசை நிற்கிறது. விஜயன் ஆற்றைப் பார்க்கிறார். திரும்பி ஊர் சனத்தைப் பார்க்கிறார். அதில் ஒருவர், கீழே இறங்கச் சொல்லும் விதமாக “ம்ம்..” என்று மட்டும் சொல்கிறார். அப்போதுதான் விஜயனை ஊர் மக்கள் மிரட்டி ஆற்றில் இறங்க வைக்க அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் அந்த வினோதமான மரண தண்டனை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களுக்கு (நமக்கு) தெரியவருகிறது. ஊர் சனங்களிடம் இரண்டு வரி பேசிவிட்டு, அவர்களிடம் அனுமதி பெற்று, பிள்ளைகளிடம் இரண்டுவரி பேசி விட்டு ஆற்றில் இறங்குகிறார் (விஜயனுக்கு நீச்சல் தெரியாது என்பது படத்தில் ஆரம்ப காட்சி ஒன்றிலேயே சொல்லப்பட்டு விடுகிறது என்பதும் அவருக்கு நீச்சல் தெரியாது என்ற காரணத்துக்காகத்தான் ஊர் சனங்கள் இந்த தண்டனையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் புரிதலுக்கு விட்டுவிடுகிறார் மகேந்திரன் என்பதை நுட்பமாக இங்கே கவனிக்க வேண்டும்). விஜயன் ஆற்றில் இறங்கத் தொடங்கியதும் காமிரா ஊர் சனங்களை நோக்கித் திரும்புகிறது. இப்போது மற்றொரு நுட்பமான காட்சியமைப்பு -பள்ளிக்கூட வாத்தியார்கள் மட்டும் (கல்வி அறிவு உள்ளவர்கள்)சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு விஜயன் ஆற்றில் இறங்குவதை தடுக்க முன்னேறுகிறார்கள். அவர்களை மற்றவர்கள் வலுக்கட்டாயமாக தடுக்கிறார்கள். வசனமே கிடையாது. மரண தண்டனைக்கு எதிரான தனது அபிப்பிராயத்தை அந்தக் காலத்திலேயே அமைதியாக முன்வைத்திருக்கிறார் மகேந்திரன். சில நொடிகளில் காமிரா மீண்டும் ஆற்றைக் காட்டுகிறது. விஜயன் இறங்கிய தடம் தெரியாமல் ஆறு சலசலத்து ஓடுகிறது. காமிரா டாப் ஆங்கிளில் மேலே ஏறும் போது, விஜயனின் பிள்ளைகள் மட்டும் (அஞ்சு, காஜா செரீப்) கைகோர்த்துக் கொண்டு அப்பா குளிக்கச் சென்ற ஆற்றைப் பார்த்தபடி ஆற்றங்கரையோரமாக மெல்ல ஓடுகிறார்கள். காட்சி உறைகிறது. உதிரிப்பூக்கள் என்ற எழுத்துக்கள் தோன்றுகின்றன. படம் நிறைவடைகிறது. கடைசிக் காட்சிகளைப் பற்றி மட்டும் சொல்ல இவ்வளவு இருக்கிறது சாமி…சாதாரணமாக விமர்சனத்தை முடித்து விட்டீர்கள். நேரம் கிடைக்கும்போது முழுப்படத்தைப் பற்றியும் நுணுக்கமாய் ரசித்தவற்றை எழுதுகிறேன்.

ஆனந்த விகடன் பத்திரிக்கை, பட விமர்சனங்களுக்கு மார்க் போடத் துவங்கியதிலிருந்து இதுவரை அதிக மதிப்பெண் பெற்ற படம் உதிரிப்பூக்கள் தான் (64 மார்க்) என்பது கூடுதல் செய்தி.

அன்புடன்

எஸ். பாபு

மரத்தடியில் எஸ்.பாபு எழுதியவை

பிரகாஷின் வலைப்பதிவில் நானிட்ட பின்னூட்டம்.

//எஸ்.பாபு,

நலமா? உங்களைத் தேடிக்கொண்டிருந்தோம்/கொண்டிருக்கிறோம். தெரியுமா? நீங்கள் வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் உடனே ஒன்றைத் தொடங்குங்களேன்.

முன்பு ராயர் காப்பிக்கிளப்பில் சோலாறிசை ஒவ்வொரு காட்சியாகத் தொடராக எழுதியிருந்தார்கள். அதுபோல உதிரிப்பூக்களைப்பற்றி எழுதுவீர்களென்று எதிர்பார்க்கிறேன். கடைசிக்காட்சியை நீங்கள் விவரித்தவிதமே அருமையாகவிருக்கிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிறுவயதில் பார்த்ததை நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது உங்களுடைய விவரிப்பு.

உங்களை மறுபடியும் இணையத்தில் பார்த்ததில் சந்தோஷம். :)

–மதி//

ShareThis

பெண்களுக்கான பெண்களாலான கட்சி கிராமத்துச் சிறுமிகளின் சிந்தனையும் சிறுவர்களின் எதிர்வினையும், சிவகாமியினூடாக
‘ஆணும் பெண்ணும் சமமா?’’ என் கேள்வி அங்கே குழுமியிருந்தவர்களிடம் எவ்வித இடறலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உடனே அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் உடனே சிறுமிகள் மத்தியில் ‘சமம், சமம்’ என இரண்டு முறை குரல்கள் ஒலித்தன. ஆனால் சிறுவர்கள் ஏதும் பேசாமலிருந்தனர். இது சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்னுள்.

‘‘என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?’’ சாம்பலைக் கிளறியது போலிருந்தது என் கேள்வி.

‘‘என்ன பேசாம இருக்கீங்க?’’ பூட்டுத் துவாரத்தில் சாவியைத் திருகுவது போல் திரும்பவும் என் குடைச்சல் ஒலித்தது.

‘‘அவங்க சொல்றது சரிதான் டீச்சர். ஆனா…’’

‘‘என்ன ஆனா? ஆவன்னா?’’ எனது ஆவன்னாவினால் சற்றே பயந்த சிறுவர்கள், ‘‘ஆனா அவங்க சுதந்திரமா இல்லையே’’ என்ற ஒரு சிறுவனின் குரலால் தங்களை வெளிப்படுத்தினார்கள்.

பரவாயில்லையே என்று வியந்து கொண்ட நான் விபரங்கேட்டேன்.

‘‘பின்னே என்ன டீச்சர், அவங்க சாயந்தரம் ஆனா வீட்டுக்குள்ளே அடைஞ்சி டி.வி. சீரியல் பாக்கிறாங்க. எங்களைப் போல வெளியே வந்து வெளையாட மாட்டேங்குறாங்களே!’’ சிறுவன் ஒருவன் சொல்லவும், மற்ற சிறுவர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

உடனே ஒரு சிறுமி எழுந்து ‘‘நாங்களா வெளியே விளையாட மாட்டேங்குறோம். எங்களை வெளியே விளையாட விட்டாத்தானே? எங்களுக்கு சு£தந்திரமே இல்ல’’ என்றார்கள். மற்ற சிறுமிகள் ஆமோதித்தனர்.

‘‘ஒருவேளை பெண்கள் மட்டும் விளையாட கிராமத்திலே விளையாட்டுத்திடலும் அதற்கான உபகரணங்களும் இருந்தால் பெண்களும் விளையாடுவார்கள்தானே?’’

சிறு விதையைப் போட்டு வைத்தேன். எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான_ குறிப்பாக இளம் பெண்கள் விளையாடுவதற்கான_ இடத்தையும் அவர்களின் வகைவகையான விளையாட்டுக்களையும் பற்றி நான் கற்பனை செய்யத் துவங்கினேன் என்பது வேறு விஷயம்.

‘‘எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான இடங்களை யார் ஏற்படுத்தித்தர முடியும்?’’ நான் கேட்டேன்.

‘‘அந்தந்தப் பள்ளிக்கூடங்கள்’’

‘‘அவன் சொல்றது தப்பு டீச்சர். அரசாங்கம்தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.’’

சரியான விடை சொல்லிய சிறுமியைப் பாராட்ட ஒரு ‘சபாஷ்’ உடன் ஒரு பத்து ரூபாய்த்தாள் பரிசளிக்கப்பட்டது. பரிசு பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கியதாக நான் எண்ணிக்கொண்டேன்.

‘‘எந்த அரசாங்கம் இதுவரை பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்து அக்கறையுடன் செயல்பட்டுள்ளது?’’ என் கேள்வி குழப்பத்தை _ அதாவது மத்திய அரசாங்கமா அல்லது மாநில அரசாங்கமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணினேன். ஆனால் குழப்பமேயில்லாமல் மாணவிகளிடமிருந்து பதில் வந்தது.

எந்த அரசும் இதுவரை பெண்கள் குறித்து அக்கறையுடன் செயல்படவில்லை என்பது அவர்கள் பதிலாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் ஆச்சரியப்படுத்தியது. பெண் குழந்தைக் கல்வி உதவித் திட்டம், திருமண உதவித்திட்டம், பேறுகால உதவித்திட்டம், விதவைகள் பென்ஷன் திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் திட்டம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு திட்டம், வரதட்சனை ஒழிப்புச் சட்டம், சிசுக்கொலை தடுப்புச்சட்டம், விவகாரத்து ஜீவனாம்சத்திற்கான சட்டம், ஆண் பெண் சமக்கூலி சட்டம், மற்றும் சமீபத்திலான குடும்ப வன்முறைச் சட்டம் ஆகிய இத்தனைச் சட்டங்களும் பல்வேறு திட்டங்களும் இயற்றப்படும் சிறு பெண் குழந்தைகள் சிந்தனையில் தாங்கள் போதுமான அளவு அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதை எண்ணினேன். இவையாவும் ஆண் பெண் சமத்துவத்தையும், பெண் சுதந்திரத்தையும் அளித்து விடவில்லை என்பதை அவர்களது புரிதல் உணர்த்தியது.

‘‘எந்த அரசும் பெண்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றால் பெண்களே ஆட்சி செய்யும்போது பெண்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்பலாமா?’’

ஆம் என்றார்கள் அனைத்து மாணவிகளும்! சிறுவர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர்.

‘‘பெண்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றால் பெண்களுக்கான தனி அரசியல் கட்சி வேண்டுமே? பெண்கள் தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியைத் துவங்கினால் எப்படியிருக்கும்?’’

விளையாட்டாய்க் கேட்டேன் அவர்களிடம்.

‘‘ரொம்ப சூப்பரா இருக்கும்!’’ சந்தோஷத்துடன் ஆரவாரத்துடன் சிறுமிகள் கோஷமிட்டனர்.

‘‘அடேயம்மா’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்.

‘‘என்ன பசங்களா, எல்லோரும் மௌனமா இருக்கீங்க? பெண்கள் அரசியல் கட்சியைத் துவக்கினால் எப்படியிருக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே?’’

அவர்கள் விடாது மௌனம் காக்கவே, சிவப்புக் கலர் சட்டை அணிந்திருந்த பையனை எழுப்பிவிட்டேன். சிவப்பு முற்போகின் வண்ணமல்லவா? அவன் எழுந்தான். அவசரமான குரலில்,

‘‘நாடு நாசமாப்பூடும்’’ என்றான். எல்லா சிறுவர்களும் கைதட்டினார்கள், அவனுடை வெளிப்பாட்டை ஆதரித்து.

நாசமாய்ப்போகிற அந்த எண்ணத்தை ஆதரித்து விளக்கம் கேட்க விரும்பாமலும், சிறிய குழந்தைகளை மேலும் கேள்விகள் அல்லது விளக்கங்கள் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்பதினாலும் மாணவிகளை நோக்கி கேள்விகளை எறிந்தேன்.

‘‘ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பெண்கள் தனி அரசியல் கட்சி துவங்கினால் எல்லாப் பெண்களும் அதில் உறுப்பினர்கள் ஆவார்களா?’’

‘‘ஓ. நிச்சயமா டீச்சர்’’ கோரஸ்.

‘‘சரி, உங்களுக்குப் போதிய அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்காகத்தானே தனி அரசியல் கட்சி துவக்குகிறீர்கள், வாருங்கள் உங்களுக்கு அதிகாரம் தருகின்றோம் என்று இப்போதிருக்கும் அரசியல் கட்சிகள் அழைத்தால் போய்விடுவீர்களா?’’

‘‘சத்தியமாக மாட்டோம்.’’

இவர்கள் என்ன சிறுமிகளா அல்லது அரசியல் மாணவிகளா என்று எனக்கு நம்புவதற்குக் கடினமாக இருந்தது. உடனிருந்த கலையரசன் சற்று பதற்றத்துடன் ‘‘அம்மா கேட்கிறாங்களேன்னுதானே நீங்க இப்படி பதில் சொல்றீங்க? உண்மையைச் சொல்லுங்க’’ என்றார்.

‘‘உண்மையைத்தான் சொல்கிறோம்.’’

‘‘அப்போ பெண்களுக்கான அரசியல் கட்சியைத் துவக்கிடலாம்னு சொல்லுங்க’’ என்று ஏமாற்றத்துடன் ஆசிரியர் ஒருவர் கூறினார்.

‘‘சார், பெண்களுக்கான அரசியல் கட்சியை ஆண்கள் துவக்க முடியாது.’’ அவர்களில் ஒரு பெண் எழுந்து உரத்த குரலில் கூறினாள்.

ஆசிரியர் கப்சிப்.

‘‘சரி, பெண்கள் கட்சியில் ஆண்கள் இருக்கலாமா?’’ என்னுடைய கேள்விக்கு முதலில் முடியாது என்றும் பிறகு நல்ல ஆண்களை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பதில் வந்ததும் அவர்கள் பதிலில் ஆண்களையும் அரவணைக்கும் தாய்க்குணம் வெளிப்பட்டதால்,

‘என்ன பசங்களா, பெண்கள் தங்கள் கட்சியைத் துவக்கி விட்டார்கள். உறுப்பினராக சேர்வதற்குத் தயாரா?’’ என்று அவர்களை நோக்கி ஆவலுடன் கேட்டேன்.

‘‘செத்தாலும் அந்தக் கட்சியில் நாங்கள் சேரமாட்டோம்.’’ இப்படி சிறுவர்கள் உறுதியுடன் கூறினார்கள்.

சமூக ஏற்றத்தாழ்வுகளோடு ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளும் விஷமூட்டிய வித்துக்களின் முளைகள் போல் வீரியத்துடன் வளர்ந்து வந்திருக்கின்றன என்றெண்ணி வியப்பும் வருத்தமுங் கொள்ளாதிருக்க இயலவில்லை என்னால்.

பதினைந்து வயதிற்குற்பட்ட சிறுமி _ சிறுவர்களிடையே இப்படிப்பட்ட எண்ணங்கள் என்றால் பெரிய விருட்சமாகி அனுபவத்தில் கிளைத்த வேர்களில் எத்தனை உரமிருக்கும்?

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யாறுக்கு அருகேயிருக்கும் ஊரொன்றில் வேறொரு வேலையாகப் போன சிவகாமி, பள்ளி மாணவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியதன் சாராம்சந்தான் மேலே  இருப்பது.  தொடர்ச்சியை  ஏப்ரல் மாத தீராநதியில் படிக்கலாம். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு பள்ளிக்கூடத்திலும் இதே கேள்விகளும் பதில்களும் மேலே  இருப்பதுபோலவே இருந்ததாக சிவகாமி சொல்கிறார்.

இஸ்ரேல்,  போலந்து, க்ரீன்லாந்து போன்ற நாடுகளில் பெண்களுக்கான கட்சி என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் உருவானாலும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை.  சில வருடங்களுக்குப்பிறகு அந்தக் கட்சிகள் இருந்த சுவடே  தெரியாமற்போனது.

ஆனாலும், மேலே  அந்தச் சிறுமிகளின் சிந்தனை யோசிக்க வைக்கிறது இல்லையா.  எங்கே ஒரு மூலையில் இருக்கும் கிராமத்துச் சிறுமிகள் இவ்வளவு தெளிவுடன் இருப்பது நம்பிக்கை  கொடுக்கிறதுதான்.

ShareThis

உலகிற்குத் தமிழகம் தந்த கொடையாம் திருவாளர் வெங்கட் சாமிநாதன் திருவாய் மலர்ந்தருளியது
சுட்டி

//உலகிற்கு தமிழ் நாடு தந்தது என்ன? தனது என்று கர்வம் கொள்வது என்ன? தமிழ் நாட்டின் தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று தம் இருப்பை ஸ்தாபித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல டாக்டர்கள் உண்டு. மற்ற பல்வேறு துறையினரும் உண்டு. அவர்கள் வேலை தேடிச்சென்றவர்கள். அல்லது வேலை தேடிப் பிழைக்க விரட்டப்பட்டவர்கள். இருப்பினும் அவர்கள் அவ்வத் துறை வல்லுனர்களாக தமக்குப் பெருமை தேடிக்கொண்டவர்கள். நிறையப் படித்தவர்கள். அவர்களுக்குக் கிடைப்பது சன் டிவி. சன் டிவி தான் கிடைக்கிறது என்பதனால் அதைச் சொன்னேன் ஆனால் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாமே ஒரே பாமர ரகம் தான். அதை சகித்துக்கொள்ள ஒரு உணர்வு மரத்த நிலை இருந்தால் தான் சாத்தியம். அதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களில் பலரை தமிழ் மணம் போன்ற வலைப் பதிவு திரட்டிகளில் இணையங்களில், அவரவர் தனித்த வலைப் பதிவுகளில், அவர்களது பின்னூட்டங்களில், பார்க்கலாம். இவ்வளவு படித்தவர்கள் எப்படி இப்படி ஒரு மூர்க்கத்தனமாக, பாஸிஸ மனத்தினராக இருக்கிறார்கள், அயல் மண்ணிலும், தம் சொந்த மண்ணின் துவேஷங்களை, அழுக்குகளை அங்கும் ஏன் சுமந்து செல்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும். டை கட்டிய, டாலரும் யூரோவும் சம்பாதிக்கும் மூர்க்க மனங்கள், பாமரர்கள். சற்றுக் கூட நுண்ணிய உணர்வு என்பதே அறியாதவர்கள். இவர்கள் ஒரு அபூர்வ கலைவை. B.Tech. M.Tech பட்டம், டாலர்/யூரோ சம்பாத்தியம், பென்ஸ் கார், ஆனால் நம்மூர் பேட்டை ரவுடி பேச்சும் எழுத்தும், கே. வீரமணி சிந்தனைகள், ரஜனி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசனை, இவை எல்லாம் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஒரு அபூர்வ கலவை.! எப்படி சாத்தியம் ஆயிற்று? நான் 1960-ல் சொன்ன வார்த்தைகளை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். செல்வமும் கல்வியும் பொருள் வளம் தான் தரும். கலை உணர்வை, சிந்தனை வளத்தைத் தந்து விடாது மனித உன்னதத்தைத் தந்து விடாது.//

என்ன சொல்றது. ஏது செய்யறது. வாயடைச்சுப்போயிருக்கேனாக்கும்!

இதெல்லாம் அப்படியே வர்ரதுதான்ல!

Jokes apart. இந்தப் பந்தியில் மட்டுமல்ல, இந்தக் கட்டுரை முழுவதுமே கொப்பளிக்கும் வன்மம் ஆச்சரியமாகத்தானிருக்கிறது. இந்தளவு தொட்டாஞ்சிணுங்கியாகவா இருப்பார்கள்? இணையம் சுதந்திரமானதுதானென்றாலும், வலைப்பதிவுகள் வரமுதல் தமிழில் எந்தளவு சுதந்திரம் இருந்ததென்பதைப் பலர் அறிவார்கள். வலைப்பதிவுகள் என்ற சுதந்திர ஊடகத்தில் பல கருத்துகள் ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் அவனது அனுபவங்களினூடாக வெளிப்படுத்தப்படுகிறது. அப்படிப் பேசப்படும் விதயங்கள் பெரும்பாலான வாசகர்களிடம் நல்லதொரு அதிர்வை உருவாக்குகிறது. அதையெல்லாம் புறங்கையால் ஒதுக்கித் தள்ளுவதோடு மட்டுமில்லாமல், இந்த நல்ல விதயங்களையும் ஒதுக்கி விட்டு, மூர்க்க மனங்கள், பாமரர்கள என்றெல்லாம் சொல்லும் இவரையும் இவரைப்போன்றவர்களையும் உலகிற்குத் தமிழகம், தமிழ்த்தாய் அளித்த கொடையென்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு தெம்மாங்கு பாடுவோம் மக்களே.

ShareThis

டித் பிரான் (செப்டம்பர் 27, 1942 – மார்ச் 30, 2008)
அதென்னமோ தெரியாது நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படங்கள். குறிப்பாக நாட்டின் போக்கையே மாற்றிய சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்கள் என்றது இரண்டே இரண்டு படங்கள்தான் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும்.

ஒன்று அல்ஜீரிய விடுதலைப்போரினைச் சித்தரிக்கும் ‘Battle of Algiers’. இரண்டாவது கம்போடிய நாட்டுப்பிரச்சினைகளைக் காட்டிய ‘Killing Fields’. இரண்டு படங்களுக்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றனதான். முதலாவது, மேற்கத்தேய நாடு ஒன்றிலிருந்து அடிமைப்பட்டுக்கிடந்த நாட்டு மக்கள் ஒன்றிணைந்து விடுதலை வாங்கிய வரலாற்றை, விடுதலை கிடைத்த சில வருடங்களில் சுடச்சுடச் சொல்லிச்சென்றது. இதைவிடச் சிறப்பாக ஒரு நாட்டின் விடுதலைக்கான போரினை, பிரச்சினைகளைச் சொல்லிவிட முடியுமா என்று தெரியவில்லை. இன்றைக்கு இந்தப் படத்தினைப்பற்றிப் பேச வரவில்லையென்றபடியால் இன்னொரு நாளைக்கு ஒத்திவைத்துவிட்டு முக்கியமான ஒற்றுமையொன்றைப் பார்ப்போம். Battle of Algiers படத்தினை இயக்கியவர் ஜில்லோ பொன்டகொர்வோ என்ற இத்தாலிய இயக்குநர். இவர், இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் விடுதலைப்போராட்டங்களைச் சித்தரிக்கும் படங்களை எடுத்தார். எல்லாவற்றிலும் நேர்த்தியை மிகவும் விரும்பும் ஜில்லோ பொன்டகொர்வோ மிகக்குறைவான படங்களையே எடுத்திருக்கிறார்.

கில்லிங் ஃபீல்ட்ஸ் படத்தையும் ஜில்லோ பொன்டகொர்வோவையே எடுக்குமாறு தயாரிப்பாளர்கள் கேட்டார்களாம். ஏதோவொரு காரணத்தினால் அவர் மறுத்துவிட ரோலண்ட் ஜோஃப் இயக்கியிருக்கிறார். கில்லிங் ஃபீல்ட்ஸ் படமும் கம்போடியாவில் பொல்பொட் கொடுமை விளைவிக்கத் தொடங்கிய சில காலத்தில் வெளியான படம்.

எழுபதுகளின் தொடக்கத்தில் வியட்நாம் போரின் தாக்கங்கள் அண்டைநாடான கம்போடியாவிலும் பரவத்தொடங்கிவிட்டிருந்தது. பல வெளிநாட்டுப்பத்திரிகையாளர்கள் கம்போடியாவின் தலைநகரத்திலும் தங்கியிருந்தார்கள். அவர்களில் நியூயார்க் பத்திரிகையின் நிருபரான சிட்னி ஷான்பேர்க்கும் ஒருவர். இந்த வெளிநாட்டுப்பத்திரிகையாளர்களுக்கு உள்ளூர்க்காரர்கள் உதவி மிகவும் அவசியமாகவிருந்தது. சிட்னிக்குப் பல விதங்களிலும் உதவியாக இருந்தவர் டித் பிரான் என்ற கம்போடிய பத்திரியாளர். இவர், பல சமயங்களில் மொழிபெயர்ப்பாளராகவும் வேலை செய்தார். 1973இல் அமெரிக்க விமானமொன்று தவறுதலாக கம்போடியாவில் குண்டு பொழிந்ததை இவர்கள் இருவரும் வெளியுலகத்திற்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

நிலமை கொஞ்சம் கொஞ்சமாக மோசமாகிறது. பலர் தங்களுடைய தொடர்புகளைப்பயன்படுத்தி நாட்டிலிருந்து வெளியேறுகிறார்கள். டித் பிரானும், சிட்னி ஷான்பேர்க்கின் தொடர்புகளைப்பயன்படுத்தி தன்னுடைய குடும்பத்தை வெளியேற்றுகிறார். அவரும் வெளியேறக்கூடியதாகவிருந்தும் போகாமல் பிற வெளிநாட்டுப்பத்திரிகையாளர்களுடன் செய்திகளைச் சேகரிக்கிறார். ஒரு கட்டத்தில் கைமர் ரூஜ்ஜிடமிருந்து இந்தப் பத்திரிகையாளர்களைக் காப்பாற்றப் பெரும்பாடு படுகிறார். அவர்களாலேயே கைதும் செய்யப்படுகிறார். கைது செய்யப்பட்டது, பிற கம்போடிய மக்களுடன் நாட்டுப்புறத்துக்கொண்டு செல்லப்பட்டு வயல்களில் வேலை செய்விக்கப்படுகிறார். பலவிதமான கொடுமைகளுக்கும் ஆளாகிறார்.

டித் பிரான் பலவித சித்திரவதைகளுக்கும் ஆளாகிக்கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவில் சிட்னி ஷான்பேர்க், டித் பிரானின் விடுதலைக்கால பல்வேறு அமைப்புகளைத் தொடர்புகொண்டபடி இருக்கிறார்.

இங்கே நான் விரிவாகச் சொல்லப்போவதில்லை. விரும்பியவர்கள் விக்கிப்பீடியாவிலிருந்து தெரிந்துகொள்ளலாம். அல்லது கில்லிங் ஃபீட்ல்ஸ் படத்தைப் பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/The_Killing_Fields_(film)

கில்லிங் ஃபீல்ட்ஸ் திரைப்படத்தில் சிட்னி ஷான்பேர்க்காக நடித்தவர் சாம் வாட்டர்சன். டித் பிரானாக நடித்தவர், அப்போது அமெரிக்காவில் கம்போடிய அகதிகளுக்காக வேலை செய்துகொண்டிருந்த டாக்டர் ஹெய்ங் எஸ். ங்கோர்(Haing S. Ngor). இவருடைய அனுபவங்களும் ஏறக்குறைய டித் பிரானின் அனுபவங்களைப்போலவே இருந்தன.

தொழில்முறை நடிகரல்லாத Haing S. Ngor மிகச்சிறப்பாக நடித்து/வாழ்ந்து 1985ம் வருடத்திற்கான சிறந்த துணைநடிகர் விருதினையும் பெற்றார். இவரையும் இவருடைய நடிப்பையும் கில்லிங் ஃபீல்ட் இயக்குநரும் பிற நடிகர்களும் சிலாகிப்பதை கில்லிங் ஃபீல்ட்ஸ் படத்துடன் வரும் இறுவட்டில் பார்க்கலாம்.

படத்தில் பலரது கவனத்தையும் அனுதாபத்தையும் ஈர்த்த Haing S. Ngor 1996ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலஸ்ஸில் கொலை செய்யப்பட்டார். என்ன காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டார் என்ற காரணம் இன்னமும் அவ்வளவு தெளிவாக இல்லை.

http://www.dithpran.org/reader.htm

http://www.haingngorfoundation.org

இரண்டு நாட்களுக்கு முன்னர், நியூஜேர்சி மாநிலத்தில் டித் பிரான் தம்முடைய அறுபத்தைந்தாவது வயதில் மரணமடைந்தார்.

அமெரிக்காவிற்கு வந்தபிறகு நியூயார்க் பத்திரிகையில் புகைப்படப்பிடிப்பாளராக வேலை செய்த டித் பிரானுக்கென்று அந்தப் பத்திரிகை உருவாக்கியிருக்கும் சிறப்புப்பக்கம்.

http://topics.nytimes.com/top/reference/timestopics/people/d/dith_pran/index.htm

டித் பிரான் தொடர்பான சில சுட்டிகள்:

http://www.guardian.co.uk/world/2008/apr/01/cambodia.pressandpublishing

http://en.wikipedia.org/wiki/Dith_Pran

http://www.dithpran.org

ShareThis

ரிச்சர்ட் பர்ட்டன், டைலன் தோமஸ் & வொக்ஸ்வாகன்
<object width="425" height="355"><param name="movie" value="http://www.youtube.com/v/JIIr0R8oTSg&hl=en"></param><param name="wmode" value="transparent"></param><embed src="http://www.youtube.com/v/JIIr0R8oTSg&hl=en" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="355"></embed></object>

Richard Burton, Dylan Thomas & Volkswagon

ShareThis

யாகூவின் தயவில் சிங்காரச்சென்னையின் வரைபடம் தமிழில்
Yahoo Maps Chennai

சந்தொஷமாயிருக்கு.

சென்னை மட்டுமில்ல. தமிழ் நாடு முழுக்க சுத்திப் பார்த்திட்டேன்!

ShareThis