குறிப்பு:
[இந்த இடுகையில் எழுதியிருக்கும் விதயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று பல மாதங்களாகவே யோசித்து வந்திருக்கிறேன். ஆனால், சிலதைப் பேசும்போது சொந்தக் கதையெல்லாம் பேசவேண்டியிருந்தபடியால் தயக்கமாக இருந்தது. And I hesitated a bit because this topic is very close to my heart and I feel quite passionate about it. People who know me, know all about how I would jump from topic to topic (sometimes simultaneously). அதனால வாசிக்கிறவங்க புரிஞ்சுக்கிறமாதிரி எழுதணும்னும் தள்ளிப்போட்டுக்கிட்டு இருந்தேன். ஆனா, இன்னிக்கு ஜெயஸ்ர், ரிலையன்ஸ் பிரெஷ் பத்தி எழுதியிருந்ததைப் படிச்சதும் அவங்களுக்குப் பின்னூட்டமாகத்தான் எழுத ஆரம்பிச்சேன். பிறகு கடிதமாக மாறியது, இப்போ இங்க இடுகையாக. தொடக்கம் கொஞ்சம் வெட்டியிருக்கேன். மிச்சமெல்லாம் அப்படியேதான் இருக்கு.
உங்களுடைய அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டால் மகிழ்வேன். (இங்கே பின்னூட்டமாகவோ அல்லது உங்களின் வலைப்பதிவில் இடுகையாகவோ). பிறருக்குப் பயனளிக்கிறதோ இல்லையோ எனக்குப் பிரயோசனமாகவிருக்கும். ]
என்னோட ‘விருந்து’ பதிவில எழுதணும்னு நினைச்சிருக்கேன். பாப்பம். இப்போதைக்கு என்னோட jumbled thoughts உங்ககூட.
இந்த வரு்ஷம், சில தீர்மானங்கள் எடுத்துக்கிட்டேன். அதுக்கு சமையல் வலைப்பதிவுகளும் ஒரு காரணம். கூடவே கடந்த பல மாதங்களாக ஊடகங்களில் வந்துகொண்டிருக்கும் செய்திகளும் பார்த்த சில திரைப்படங்கள் + டாகுமெண்டரிகளும், படித்த சில புத்தகங்களும் காரணம்.
தீர்மானங்கள்னு சொன்னேனில்லையா. முக்கியமான தீர்மானம். மே ஜூன் மாதத்தில இருந்து முடிஞ்சவரை எல்லா காய்கறிகளையும் விவசாயிகள் சந்தையில வாங்கணுங்கிறது. முடிஞ்சளவு அதைச் செய்யவும் செய்தேன். ஒவ்வொரு வாரமும் ஒரு நடை போயிட்டு வந்தேன். தோட்டமொண்ணுத்துக்கும் போய் கத்தரிக்காய், தக்காளி, பச்சை மிளகாய்னு வாங்கிட்டு வந்தோம். சிற்சில தவிர்க்க முடியாத நம்ம ஊர் காய்கறிகளை இந்திய-இலங்கைக் கடைகளில் வாங்கினேன். சாதாரண காலத்திலயே சூப்பர் மார்க்கெட்டில காய்கறி வாங்கிறதில்லைங்கிறதால அதில பிரச்சினையிருக்கல.
பொதுவாப் பார்த்தீங்கன்னா கியூபெக் மாகாணம் விவசாயிகள் நிறைய இருக்கிற இடம். பால், தயிர் சீஸ் எல்லாம் இங்க நிறைய உற்பத்தி செய்வாங்க. கியூபெக் விவசாயிகள் பத்தி ஒரு பிரெஞ்சு டாகுமெண்டரி பார்க்கக்கிடைச்சது. அங்காங்க பேசுற வி்ஷயம் முழுக்கப் புரியலைன்னாலும் பெரிய பெரிய கம்பெனிகள்லாம் தங்களுக்கு ஏத்தபடி சட்டங்களை உருவாக்கி சின்னச்சின்ன விவசாயிகளையெல்லாம் எப்படிப் படுத்திக்கிட்டிருக்காங்கன்னு பார்க்க முடிஞ்சது. இப்ப ரொம்பப் பிரபலமான வி்ஷயம் ஆர்கானிக் உணவுங்கிறது. நல்ல வி்ஷயம்தான். இல்லைங்கல. ஆனா, இதை வைச்சு பெரிய பெரிய கம்பெனியெல்லாம் காசு பார்த்துக்குது. சட்டதிட்டங்களும் சிலது நல்லதுதான். ஆனா, ஆர்கானிக்னு சொல்லி விக்கிறதுக்கு சர்ட்டிஃபிகெட் எல்லாம் வாங்கிக்கணும். அந்த சர்ட்டிஃபிகெட் வாங்குறதுக்கு எல்லா விவசாயிகளுக்கும் பொருளாதாரம் இடம் குடுக்கிறதில்ல. அதனால நிறையப் பேரு அந்த சர்ட்டிஃபிகெட் இல்லாம விற்க முயற்சிக்கிறாங்க. வருமானம் குறைவு.
பால் உற்பத்தி இங்க அதிகம்னு சொன்னேனில்லையா. டாகுமெண்டரில பார்த்த ஒரு விவசாயின் அனுபவம் ரொம்ப மனவருத்தமா இருந்தது. அவரால செர்ட்டிஃபிகெட் வாங்குறதுக்கு முடியல. அந்தப் பாலை கூட்டுறவுக்குழுமத்தில குடுக்கலாம்னா அதுக்கும் நிறையத் தடை செஞ்சு வைச்சிருக்காங்க. சீஸ் செய்யலாம்னா அதுக்கும் தடை. மக்களுக்கு நல்லதுக்குத்தான்னாலும் அந்தக் காலத்தில இப்படியெல்லாம் சட்டதிட்டங்கள் இருந்ததான்னு கேள்வி வருது. கடைசில பாரல் கணக்கில நூத்துக்கணக்கான பாலை நிலத்தில கொட்டினாரு.
கியூபெக்கில முக்கியமான இன்னொரு வி்ஷயம். maple syrup. பணக்கார கம்பெனிகள் அங்கயும் கைய வைச்சிட்டாங்க. சின்னச்சின்ன உற்பத்தியாளர்கள் எல்லாம் சேர்ந்து செயற்பட முடியாதபடி சட்டதிட்டங்கள். ஒரு கட்டத்தில சிறு உற்பத்தியாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம். சாலையில் போற வாகனங்களை நிறுத்தி எல்லாத்துக்கும் அவங்க உற்பத்தி செஞ்ச மேப்பிள் சிரப்பைக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. சுற்றுலாப் பிரயாணிகள் வாங்கிற அழகழகான போத்தல்கள்ல இருந்து ஒரு பவுண்ட் எடை இருக்கிற can வரைக்கும் குடுத்தாங்க. அவங்க அதையெல்லாம் விற்கிறதுக்கு அனுமதியில்ல. மாதக்கணக்கா வேலை செஞ்சு விற்க முடியலைன்னா, யோசிச்சுப்பாருங்க. அந்த டாகுமெண்டரியிலயே அரசாங்கம் நடத்தின விசாரணையையும் காட்டினாங்க. மேடையில ஒரு நாலைஞ்சு பேர் இருந்துட்டு பயங்கர நாட்டாமை. முழுக் கேலிக்கூத்து! my heart went out to them.
emotional decisionதான். ஆனா, எனக்கு முழுக்க முழுக்க சந்தோ்ஷமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் சந்தைக்குப் போயிட்டு வர்ரப்ப ஒவ்வொரு இஞ்சா, வானத்தில பறக்கிறமாதிரி உணர்வு. ;) ஒளிவட்டம் மட்டுந்தான் இல்ல. :D
மரக்கறிகள் பத்தி இன்னும் நிறையப் பேசலாம். கனடாவிலயும் அமெரிக்காவிலயும் காய்கறித் தோட்டங்களும் பெரிய பெரிய கம்பெனிகளைப்போல நடத்தப்படுது. இங்க மட்டுமில்ல, கனடா, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு காய்கறிகள் ஏற்றுமதி செய்யிறதுக்காக தென்னமெரிக்கா, கரிபியன் தீவுகள் போன்ற இடங்களிலயும் பெரிய பெரிய தோட்டங்கள் உருவாக்கி நடத்தப்படுகின்றன. கலிஃபோர்னியாவில் இருக்கிற காய்கறித்தோட்டங்கள் பற்றித் தெரியும்னு நினைக்கிறேன். சீனக் காய்கறிகள் எல்லாம் பெரும்பாலும் கலிபோர்னியாவில் இருந்துதான் வருகின்றன. ஆனாலும், எனக்கு சீன உணவு+ தெற்காசிய உணவு பிடிக்குங்கிறதால சீனக்கடைகளில் இந்த மரக்கறிகளை வாங்குகிறேன்.
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கனடாவில் தட்ப வெட்ப நிலை கொஞ்சம் நல்லா இருக்கிற மாகாணம். ஆனா, இப்ப பனிக்காலத்தில அங்க நிறையப் பனிப்புயல். பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலதான் berry தோட்டங்கள் நிறைய இருக்கின்றன. பெரும்பாலான தோட்டங்கள் சீக்கியர்களுக்குச் சொந்தமானவை. குடும்பமே வேலை செய்யும். மொன்ரியலுக்குப் பக்கத்தில சில பெர்ரித் தோட்டங்கள் இருக்கிறபடியா ஓரிரு முறை போய் சாகுபடி செய்துவிட்டு வருவோம். அதேமாதிரித்தான் ஆப்பிளும்.
பல தலைமுறைகளாக விவசாயம் செய்துவந்துகொண்டிருந்தவர்கள், நிறைய வேலை குறைந்த வருமானம் காரணமாக எல்லாவற்றையும் விற்க முற்படுகிறார்கள். அந்த நிலங்களை இந்த நாட்டுக்கு குடியேறிய பல நாட்டு மக்களுக்கு விவசாயத்துக்கு குடுக்கிறதைப் பத்திப் பேசிட்டு இருக்காங்க. சமீபத்தில் படித்த ஒரு செய்தி - http://www.uoguelph.ca/news/2007/09/project_aims_to_1.html ருவாண்டாவில விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் ஒருவர், ஆப்பிரிக்க மக்கள் உண்ணும் உணவு வகைகளை விவசாயம் செய்வதைப் பற்றிப் பேசியதையும் ஓரிடத்தில் கேட்டேன். மொன்ரியலைச் சுற்றியிருக்கும் சில தோட்டங்களில் சில மரக்கறிகளைக் கடந்த சில வருடங்களாகப் பயிர் செய்கிறார்கள். படு உறைப்பான மிளகாய் போன்ற, இங்கேயே பல தலைமுறைகளாக வாழும் மக்கள் தொட்டுக்கூட பார்க்காத செடிகள் எல்லாம் வளர்க்கிறார்கள். பயத்தங்காய், வெண்டிக்காய் போன்றவற்றையும் சில தோட்டங்களில் வளர்க்கிறார்களாம். அடுத்த வருடம் போகணும்.
இப்படி சுற்றி இருக்கும் காணிகளில் பல உணவுப்பொருட்களை உற்பத்தி செய்தாலும் இங்கே இருக்கிற பெரும்பாலான சூப்பர் மார்க்கெட்டுகள் அந்தக் காய்கறிகளை வாங்குவதில்லை. சில சூப்பர்மார்க்கெட்டுகளில் வாங்குகிறார்களாம். என்னால் முடிந்தது, அந்த சூப்பர் மார்க்கெட்டுகளில் மட்டுமே எனக்குத் தேவையான பிற பொருட்களை வாங்கிக்கொள்வது. நூற்றுக்கணக்கான டாலர்கள் செலவழிக்கப் போவதில்லை. உண்மைதான். ஆனால், நான் செலவழிக்கும் பத்து இருபது டாலர்களாவது இந்த மாதிரியான சூப்பர் மார்க்கெட்டுகளுக்குப் போகட்டுமே என்ற எண்ணந்தான். என்னை மாதிரி இன்னும் ஒரு பத்து இருபது பேராவது இருக்க மாட்டார்களா. சிறு துளி, பெரு வெள்ளம்! இதுதான் நான் யோசிச்சு வைச்சிருக்கிறது.
எனக்குத் தெரிஞ்சு நிறையப் பேர் walmart கடைக்குப் போறதில்ல. என்னுடைய கியூபெக் நண்பர்கள் சிலர் சொல்லித்தான் எனக்கு முதலில் தெரியும். பிறகு டொராண்டோவில் தெரிந்தவர் ஒருவரின் பதினேழு வயது மகன், வால்-மார்ட்டுக்குப் போகக்கூடாது என்று குடும்பத்தினரையும் மற்றவர்களையும் வற்புறுத்தி வைத்திருப்பது தெரிந்தபோது ஆச்சரியங்கலந்த சந்தோ்ஷமாக இருந்தது. முசுடு என்று பலரும் சொல்லும், பெரிதாக யாருடனும் பேசாத அந்தப் பையனைக் கொஞ்சம் பேச வைத்து சினேகம் வைத்துக்கொள்ள முக்கிய காரணமாகவும் இருந்தது. ஈழத்தவர் பலரும் பெரிதாக ஆர்வம் காட்டாத archeology படிக்கத் தொடங்கியிருப்பவனைப்பற்றி இன்னொரு நாள் சொல்றேன். வால்மார்ட்டை இவனும் பலரும் புறக்கணிக்க முக்கியமான காரணம், வால்மார்ட்டின் கொள்கைகள். கியூபெக்கில் தொழிற்சங்கங்கள் மிக முக்கியமானவை. தொழிற்சங்கள், இந்தச் சமூகத்திற்குத் தேவை என்பது என்னுடைய கருத்து. வால்மார்ட்டில் தொழிற்சங்கங்கள் அமைக்க அனுமதி இல்லை. அப்படியும் ஒருமாதிரி சட்டதிட்டங்களுக்கு ஏற்றபடி போய் தொழிற்சங்கம் அமைக்க முற்பட்டபோது அதை நைச்சியமாக உடைத்தது நிர்வாகம். தொழிலாளர்களுக்கு பல வசதிகளைச் செய்துகொடுக்க பெரும்பாலான நிறுவனங்கள் சுணங்குவார்கள். வட அமெரிக்கா போன்ற நாடுகளில் செய்து கொடுத்தாலும் தெற்காசியா, மெக்சிகோ போன்ற நாடுகளில் எந்தவொரு வசதிகளும் இல்லாமல் உழைப்பைச் சுறண்டிக்கொள்ளுவார்கள். இப்ப Shock Doctrineங்கிற புத்தகத்தால் மிகவும் பிரபலமாகி இருக்கும் மொன்ரியலைச் சேர்ந்த Naomi Klein, ‘No Logo’ன்னு ஒரு நல்ல புத்தகம் எழுதியிருக்கார். அதில லோகோக்களின் மோகம்+ கம்பெனிகள், நடப்புகள் பற்றியெல்லாம் நிறையத் தெரிந்துகொள்ள முடியும்.
இத்தனை சொன்னாலும், நான் இன்னும் சில பொருட்கள் வாங்க வால்மார்ட்டுக்குப் போகிறேன். தவிர்க்க முடியாத தருணங்கள் அவை. holier than thou மனப்பாங்கு இல்லை. பெரும்பால தமிழர்கள் அவர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க வால்மார்ட்டிற்குத்தான் போகிறார்கள். அதற்கு மிகவும் முக்கியமான காரணம். பொருளாதாரச் சூழ்நிலை.
எங்கயோ தொடங்கி எங்கயோ வந்திட்டேன்னு நினைக்கிறேன். இதுதான் என்ர பிரச்சினை. ரிலையன்ஸ் ஃபிரெஷ்்ஷுக்குத் திரும்புறதுக்கு முன்னாடி ஒரேயொரு வரி இந்த GM உணவுவகைகளைப்பற்றி. ஆந்திராவைச் சேர்ந்த விவசாயிகளின் தற்கொலையின் போதுதான் நம்மூர்ல இதைப்பத்தி நிறையத் தெரிய வந்தது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு வகைகளைப்பற்றியும் நாம பேசணும். இங்கே சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் தானியங்களையோ, பருப்புகளையோ வாங்கி ஊற வைத்தால் முளைக்காது. என்னுடைய பிறமொழி பேசும் நண்பர்களை, இந்தியக் கடைகளில் விற்கும் பருப்புவகைகளை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். சூப்பர் மார்க்கெட் சோயா பீன்ஸ் வாங்கி முளைக்கப்போட்டுத் தோல்வியடைந்த நண்பரொருவர் இப்போது இந்தியக் கடையில்தான் சோயாபீன்ஸ் வாங்குகிறார். நம்மூரில், மரபணு மாற்றம் செய்த உணவு வகைகள் எந்தளவு பரவியிருக்கின்றன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.
இங்கே சந்தைக்குப் போய் மரக்கறிகள் வாங்கும்போதும் தேவையானவற்றைப் பொறுக்கி எடுத்து கடைக்காரருடன் பேசும்போதும் சென்னையில் காய்கறி வாங்கியதுதான் நினைவில் வந்து போகும். அங்கயும் ஒரு அண்ணாச்சி கடைதான். இப்ப முழுக்க முழுக்க மாறிடுச்சு கேள்விப்பட்டதும் வருத்தமாக இருந்தது. கடைக்குப் பக்கத்தில் கூரை வேய்ந்த இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளும் கீரைகளும் இப்பவும் கண்ணில் நிற்கின்றன. பிறகுபிறகு கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்கியதும், கீரை வாங்குவதற்காகவே திருவேற்காடு+மாங்காடு கோயில்களுக்கு வீட்டாருடன் போனதும். சரி, சரி பிரசாதத்துக்குந்தான். ;)
சென்னையில் ஸ்பென்சர்காரர்கள் ஃபூட்வேர்ல்ட் தொடங்கியபோது வேடிக்கை பார்க்கப் போயிருந்தோம். ஆனால், பெருவாரியான மக்களுக்கு அவரவர் வீடுகளுக்கு அருகேயிருக்கும் கடைகளுக்குப் போய் உணவுப்பொருட்கள் வாங்கிவிட்டு, அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து தரும் வசதி கூடவே இன்னும் சில வசதிகள் இருந்தபடியால் மளிகைக்கடைகள் அத்தியாவசியமாக இருந்தன. நீல்கிரிஸ் போன்ற சில கடைகளில் சிற்சில பொருட்கள் சிறப்பாக இருந்தபடியால் சிலர் அவற்றிற்குப் போய்வந்தபடி இருந்தார்கள்.
சிறு வியாபாரிகளின் தேவையைப்பற்றி நல்லதொரு இடுகை படித்த நினைவிருக்கிறது. (மா.சி.? ) சுட்டி தேடிக்கொண்டு வருகிறேன்.
இங்கே யோசிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விதயம். Diversity. அந்தக் காலத்தில் கம்பு, வரகு, சாமை, அதுயிதுவென்று பல்வேறு வகையான தானியங்களை மக்கள் உண்டு வந்திருந்திருக்கிறார்கள். இப்போது எல்லோரும் அரிசி + கோதுமை என்று மாறிவிட்டோம். இதில் எனக்கு foodblogsதான் உதவியாக இருக்கின்றன. அவற்றை வாசிக்கத் தொடங்கியதில் இருந்து நானும் சில வித்தியாசமான தானியங்கள்+உணவுப்பொருட்களை வாங்கத் தொடங்கியிருக்கிறேன். இதைப்பற்றி விரிவாகப் பிறகு.
இப்போது இங்கே பனி பெய்யத் தொடங்கியிருக்கிறது. அதனால், சந்தையின் பரப்பளவு சுருங்கிவிட்டது. ஆனாலும் இப்போதும் முடிந்த அளவு அங்கே போய்த்தான் வருகிறேன். என்ன ஒன்று, தனித்தனியாக வைத்திருக்கும் கடைகள், விவசாய சந்தை, சந்தையைச் சுற்றி இருக்கும் கடைகள் என்று போகும்போது கொஞ்சமே கொஞ்சம் அலுப்பாகத்தான் இருக்கிறது. ஒரேயிடத்தில் வாங்கக்கூடிய பொருட்களை இப்படிக் கொஞ்சம் சுற்றித்திருந்து வாங்க வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொள்ளும்போது ஏன் அப்படி வாங்க வேண்டியிருக்கிறது என்பதை நினைவில் நிறுத்திக்கொள்கிறேன்.
சிறு துளி, பெரு வெள்ளம்!