என்னைச்சுற்றி - 1 • 03.14.07
Nearly all men can stand adversity, but if you want to test a man’s character, give him power - Abraham Lincoln.
இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களூர்ப்பத்திரிகையில் வந்த சொற்றொடர்.
-0-
மாஹேர் அரார் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இல்லையென்றால் இங்கேயும் இங்கேயும் படிக்கலாம்.
மாஹேர் அராருக்கு நிகழ்ந்த அநீதி குறித்து பாராளுமன்றத்தில் நடந்த விசாரணைகளைத் தொடர்ந்து RCMP கமி்ஷனர் கிலியானோ சக்கர்டெல்லி (Guiliano Zaccardelli) பதவி விலகினார். பாராளுமன்றத்தில் RCMP கமி்ஷனர் விசாரணையை எதிர்கொண்ட முறை கேவலமாக இருந்தது. கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், சுற்றிவளைத்து பதிலல்லாத பதில்கள் (அதாங்க non-answers) சொன்னதும், முன்னுக்குப்பின் முரணாகப் பதில்கள் சொன்னதும் என்று பல சொதப்பல்கள். இம்மாதிரிப் பதில்சொல்வதற்கு Zaccardelliஐத் ஒரு தொடர்பாடல் நிறுவனந்தான் தயார் செய்ததாம். ஒட்டாவாவைச் சேர்ந்த McLoughlin Mediaஐ Zaccardelliஐப் பயிற்றுவிக்க RCMP ஏற்பாடு செய்ததாம். McLoughlin Media, அரசியல்வாதிகளையும் கம்பனி முதலாளிகளையும் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கவும் பிரச்சினைகளின்போது ஊடகங்களின் கேள்விகளுக்கு பதில்சொல்லவும் பயிற்சி கொடுக்கும் நிறுவனம். பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டால் எப்படிப் பதில்சொல்வது என்பதில் தங்களுக்குப் பயிற்சி கொடுக்காத காரணத்தினால் McLoughlin Mediaஇனை அணுக வேண்டி வந்தததாக RCMPயின் உதவி கமி்ஷனர் பேர்னீ கொர்ரீகான் சொல்கிறார்.
கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டியதுதானே. அதற்குப் பயிற்சியென்று ஒன்று தனியாகத் தேவையா என்று கேட்கிறீர்களா? உண்மைதான்! அதற்காக RCMP எவ்வளவு செலவளித்தது தெரியுமா? ஒரு மணித்தியாலத்துக்கு 400 டாலர் கட்டணத்தின் அடிப்படையில் 25,000 டாலர்கள் செலவு. அத்தனையும் மக்கள் பணம்.
கனேடிய ஆடிட்டர் ஜெனரெல் ்ஷீலா ஃப்ரேசர், பல தடவைகள் RCMPஇன் செலவுகளைக் கண்டித்திருக்கிறார். கடைசியாக, அலுவலகப்பணத்தில் ஆயிரக்கணக்கான டாலர் மதிப்புள்ள cow-boy பாணி சப்பாத்து வாங்கியதற்காக Zaccardelli வறுபட்டார்.
-0-

நன்றி:ivakkak.com
Dog Sledding. Mushing.
Cuba Gooding Jr. நடித்து 2002இல் வெளியான Snow Dogs படத்தைப் பார்த்திருந்தீர்களென்றால் மேலேயிருக்கும் இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் புரியும்.
Mushing பற்றி விக்கிபீடியாவில் - http://en.wikipedia.org/wiki/Mushing
வருடத்தில் பல வருடங்கள் பனியால் சூழப்பட்டிருக்கும் ஆர்ட்டிக் கண்டத்தில் இடத்துக்கிடம் மாறுவதற்கு, பொருட்களை எடுத்துவர என்று எல்லாவற்றிற்கும் Sledஇல்தான் பயணிக்க வேண்டும். இப்போது, பலரும் Snowmobilesகளைப் பயன்படுத்துகிறார்கள். Snowmobileஐப் ‘பனியூர்தி’யென்று சொல்லலாமோ? கனடாவில் கியூபெக் மாகாணத்தின் வடக்குப்பகுதியும் வருடத்தில் பல மாதங்கள் பனியால் சூழப்பட்டிருக்கும். அங்கே வாழும் இனுயிட் மக்களில் பலர் பனியூர்திகளையே பயன்படுத்துகிறார்கள். ஆனால், பழைய பழக்கங்களை விடாமல் கடைப்பிடிக்க வேண்டுமென்று சிலர் முயலுகிறார்கள். அவர்களில் சிலரின் முயற்சியினால் கடந்த சில வருடங்களாக Mushing இங்கே நடக்கிறது.
பரம்பரை பரம்பரையாகப் பல ஆயிரம் வருடங்களாக ஹஸ்கி வகை நாய்களைக்கொண்டு இவர்கள் பயணிக்கிறார்கள். 1950களில் RCMPயினர் இனுயிர் மக்களின் போக்குவரத்துக்குப் பயன்படுத்தி வந்த நாய்களையெல்லாம் சுட்டுக்கொண்டார்கள். இது, இனுயிட் மக்களுக்கு இன்றும் மிகவும் மனம் வருந்தவைக்கும் விதயம். RCMPயினர் நாய்களுக்கு நோய் வந்தபடியால்தான் சுட்டுக்கொண்டதாகச் சாதித்தாலும், இனுயிட் மக்கள் அதைத் தங்களின் வாழ்க்கைமுறையினைக் குலைக்கும் நடவடிக்கையாகவே காணுகிறார்கள்.
இப்போது, இனுயிட் வாலிபர்களை வழிப்படுத்தும் வழிகளில் ஒன்றாக இதைக் காணுகிறார்கள். இனுயிட் இனத்தவரின் பழமையையும் அவர்களின் வாழ்க்கைமுறையின் நல்ல விதயங்களையும் நேரடியாக இந்த இளைஞர்கள் உணரவும் இது ஒரு வாய்ப்பாக இருக்குமென்று கருதுகிறார்கள்.
Mushing பற்றி மொன்ரியல் காசட் பத்திரிகையில் வந்த செய்தியொன்று: http://mathy.kandasamy.net/select/?p=84
வாரக்கடைசியில் வானொலியில் கேட்ட நேரடிச் செய்தியின்படி: கடந்த வருடங்களைப்போலல்லாது இவ்வருடமும் போன வரு்ஷமும் ஏரிகளில் பனி கரையத்தொடங்கியிருக்கிறதாம். அதனால் அடுத்த வருடம் கொஞ்சம் முன்கூட்டியே நடாத்தப்போகிறார்களாம். போன வரு்ஷம் போட்டி நடந்த இடம் வேறு. இந்த வரு்ஷம் இடம் வேறு. இந்த வரு்ஷம் இடத்தைக் கொஞ்சம் மேலே வடக்கே நடர்த்தியிருக்கிறார்கள். சுற்றுச்சூழல் மாசுபடல், வேறு இடங்களைவிட ஆர்ட்டிக் பிரதேசத்தில் மிகவும் அதிகமாகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. இனுயிட் இனப்பெண்களின் தாய்ப்பாலில்கூட மெர்க்குரி அளவுக்கு அதிகமான அளவில் காணப்படுகிறதாம்.
ஒரு விசயம். போட்டி இன்னமும் தொடர்ந்து நடந்தபடி இருக்கிறது. இன்னமும் முடியவில்லை.
இவக்காக் போட்டியைப்பற்றி இங்கே படிக்கலாம்.
அவர்களின் இணையத்தளத்திலிருந்து: Celebrating the Inuit Culture. Promoting the traditional way of dogsledding and hte return of pure bred Inuit Husky dongs in Nunavik.
-0-
இந்த வருசம் பனிப்பொழிவு முடிந்துபோய்விட்டதாக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது இன்னமும் முடியவில்லை என்று வானிலையாளர்கள் கூறுகிறார்கள். மொன்ரியலில் நாளைக்குக் கொஞ்சம்போல பனி பொழியும் என்று சொல்கிறார்கள். வாரக்கடைசியும் குளிராக இருக்குமாம். நல்ல வேளை, வின்டர் ஜாக்கட்டை ஏறக்கட்டவில்லை. வின்டர் ஜாக்கட், ஸ்ப்ரிங்க் ஜாக்கெட் என்று ஒரே ஜாக்கெட் மயம். எங்களைவிடுங்க. கிழக்குக்கடற்கரைப்பக்க ஆட்களான எங்களுக்கு, இந்த வரு்ஷம் பெரிதாகப் பனிப்புயலொன்றும் வீசவில்லை. முன்று நான்கு தடவை முப்பது-நாற்பது செ.மீ. பனி பொழிந்தது மட்டுந்தான். ஆனால், மேற்குக்கடற்கரையோர வான்கூவர் நகர வாசிகள்தான் படாத பாடுபட்டுவிட்டார்கள். போன டிசம்பர் மாதம், எங்களுக்கு 15 டிகிரி வெய்யில் காய்ந்துகொண்டிருந்தபோது, அவர்களுக்கு ஐந்தாறு பனிப்புயல்கள் வந்துபோயின. கூடவே வீசிய காற்று, வான்கூவர் நகரின் மையப்பகுதியை ஒட்டிய ஸ்டான்லி பார்க்கை ஒரு கை பார்த்துவிட்டிருந்தது. ஏறக்குறைய 1000 ஏக்கர் நிலப்பரப்பில் ஏராளமான மரங்களைக்கொண்ட அந்த பார்க்கின் பல மரங்கள் ஒரேயடியாக முறிந்துபோன காட்சியைப்பார்க்கும்போது வயிற்றெரிச்சலாக இருந்தது. அதில் பல மரங்களுக்கு வயது நூறு வயதுக்கும்மேல்.
இதனாலேயே, நூலகம் போயிருந்தபோது ‘Stanley Park’ என்ற தலைப்புள்ள புத்தகத்தைப் பார்த்ததும் புரட்டிப்பார்க்கச் சொன்னது. நான் எதிர்பார்த்ததுபோல அந்தப் புத்தகம் ஸ்டான்லி பார்க்கைப்பற்றிய அ-புனைவு நூலல்ல. Timothy Taylor என்பவர் எழுதியிருக்கும் நாவல் அது. இப்போதுதான் பத்துப்பக்கங்கள் அளவு வாசித்திருக்கிறேன்.
வான்கூவரில் வாழும் ஜெரெமி பாப்பியெ (Jeremy Papier) என்ற chef நாயகன். பாருங்க சமையல்காரர் என்று எழுத மனம் வரவில்லை. ஆங்கிலத்தில் சமையலைத் தொழிலாகக் கொண்டவர்களை பிரெஞ்சிலிருந்து கடன் வாங்கிய Chef என்ற சொல்லைவைத்து அழைக்கிறார்கள். எடுபிடி உதவியாளருக்குக்கூட அலங்காரமான Sous-chef என்று பெயர். தமிழில் சமையலைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கெனப் பிரத்தியேகப் பெயர் இருக்கிறதா?
Stanley Park நாவல் சுவாரசியமாக இருந்தால் இன்னொரு நாள் சொல்கிறேன்.
-0-

நன்றி:people
அஞ்சலீனா ஜோலியைப் பெரிதாகப் பிடித்ததில்லை. சில காலம் முன்புவரைக்கும். டென்சல் வா்ஷிங்கனுக்காக போன் கலெக்டர் பார்த்தபோது அறிமுகமான முகம். பிறகு கேர்ல் இண்டரப்டடுக்காக ஆஸ்கர் வாங்கியபோதும் பெரிதாக அபிப்ராய அபிமானங்கள் உருவாகியிருக்கவில்லை. தொடர்ந்து பார்த்த சில படங்களும் இவருக்காகவென்று தேர்ந்தெடுக்கவில்லை. ஆஞ்சலீனா ஜோலியைப் படங்களைத் தவிர்த்துவிட்டு செய்திகளில் இடம்பெறுவதனாலேயே அதிகம் கேள்விப்பட்ட காலம் அது. கதை சுவாரசியமாகவிருக்கிறதென்ற காரணத்துக்காகப் பார்த்த Croupier படத்துக்குப்பிறகு க்ளைவ் ஓவன் காய்ச்சல் அடித்தகாலத்தில் பார்த்த படம் ‘Beyond Borders’. படத்தைப்பற்றிப் பல கருத்துகள் இருக்கின்றன. அதனாலேயே அதைப்பற்றி எழுதவும் யோசித்ததில்லை. படத்தில் ஈழமும் ஒரு வசனத்தில் வந்துபோகும். அந்தப் படத்தில் அஞ்சலீனா ஜோலியைப் பார்த்து நக்கலடித்துமிருக்கிறேன்.

நன்றி: people
ஆனால், இப்போதைய அஞ்சலீனா ஜோலியைப் பிடித்திருக்கிறது. மிஸ்டர் ஆஞ்சலீனா ஜோலியைக் கூட பரவாயில்லை என்று சொல்லும் நிலைக்கு மனம் வந்திருக்கிறது. காரணம் ஆஞ்சலீனா ஜோலியின் உலகத்து அகதிகளைக்குறித்த அக்கறை. அஞ்சலீனா ஜோலியுடன் சேர்ந்து பாக்கிஸ்தான், கம்போடியா, தென்னமெரிக்கா என்று பல நாடுகளுக்கும் அள்ளுப்பட்டுக்கொண்டு போகும் பிராட் பிட்.
இவ்வார நியூஸ்வீக்கில் அஞ்சலீனா ஜோலியின் பேட்டி: http://www.msnbc.msn.com/id/17540069/site/newsweek
-0-
கொஞ்சம் தமிழ்ப்பதிவுகள் பக்கம் வருவோம். மாதமொரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை என்று எழுதும் பொடிச்சி, அதிசய அதிசயமாக இந்த ஒரு வாரத்தில் ஐந்து இடுகைகள் எழுதியிருக்கிறார்.
அதில் பலரும் படிக்கவேண்டும் என்று நான் விரும்பும் இடுகைகளை இங்கே சுட்டுகிறேன். கவனத்தில் கிட்டாதவர்களுக்காக..
நான் நிறையத் தெரிந்துகொண்ட இடுகை - அனீ லெனெக்ஸ் + எறித்மிக்ஸ்: இனிய கனவுகள் இவற்றால் ஆனவை
எழுத நினைத்த ஒருவரைப்பற்றிய இடுகை: கறுப்பு அல்லது வெள்ளை” என்பதற்கு இடையில்
வேண்டுகோள்கள் ஏதுமற்று - முக்கியமாக புரிந்துணர்வுச் சமத்துவபுர ஜென்டில்மென்களிடம் வேண்டுகோள்களை விடுக்காமல்: சிறுவர் இல்லங்களிலிருந்து பிள்ளைகள் வெளியேற்றம்
கட்டாயம் படிக்க வேண்டிய இடுகை. ‘முரண்வெளி’யிலிருந்து: வெளிச்சக்கூடுகள் தேவைப்படுவோர் படிக்க வேண்டிய குறிப்புகள்
[அவ்வப்போது பார்த்த, படித்த, கேட்ட விதயங்களைப்பகிர்ந்துகொள்ளவேண்டும் போலத் தோன்றும். அதைப்பற்றி யோசித்தே காலத்தைப்போக்கியும் விடுவேன். அப்படியில்லாமல் முடிந்தளவு எழுத எண்ணம்.]

