செம்பருத்தி.. செம்பருத்தி..

Posted in அனைத்து இடுகைகள், புகைப்படங்கள் on May 22, 2007

chembaruththi-9.jpg

chembaruththi-8.jpg

chembaruththi-7.jpg

chembaruththi-6.jpg

chembaruththi-5.jpg

chembaruththi-4.jpg

chembaruththi-2.jpg

chembaruththi-1.jpg

பூக்கண்டுகள் வாங்கிறதுக்காகப் போனபோது எடுத்த படங்களைத்தான் மேல பாக்கிறீங்கள். இத்தனை விதவிதமான செம்பருத்திகளைக் கண்டாலும், ஊரில இருந்த சின்ன செம்பருத்தியைத்தான் மனம் நினைச்சுப்பாக்குது. அந்தச் செம்பருத்தி மரத்தை என்ன பாடுபடுத்தியிருக்கிறன் எண்டும் யோசிச்சுப்பாத்தன். வாடி வதங்கின பூத்தொடங்கி இலைக்குள்ளால இருந்து எட்டிப்பார்க்கிற மொட்டு வரைக்கும் பிச்சுப்புடிங்கி ஆராய்ச்சி நடந்திருக்கு. விரிஞ்ச பூவின்ற இதழ்களை ஒவ்வொண்டாப் பிச்சுப் பார்க்கிறது. கோயில் அய்யர் மாதிரி கண்டாய நமாம், கிண்டாய நமாம் எண்டு மந்திரமோதிய படியே புடிங்கி எறியிறது - இதில இலைகளுக்கும் விதிவிலக்கில்ல. அடுத்த நாள் விரியப்போற மொட்டை மெதுவாப் பிரிச்சுப்பாக்கிறன் பேர்வழியெண்டு நாசமாக்கின மொட்டுகளுக்கு கணக்குவழக்கில்ல. சில மொட்டுகளை மட்டும் விட்டு வைச்சிற்று, இரவில போய் டோர்ச்லைட் அடிச்சுப் பாக்கிறது எண்டு இன்னொரு கூத்து. சனிக்கிழமைகளில அன்ரிக்கு செம்பருத்திப்பூக்களையும் இலைகளை புடுங்க உதவி செய்யிறது. அதை அவ அரைக்கேக உபத்திரவம் குடுக்கிறது இப்படி செம்பருத்தியப் பாக்கேக்க எல்லாம் ஓடிவாற அதோட சம்பந்தப்பட்ட நினைவுகள்..

Trackback URI | Comments RSS

9 Responses to “ செம்பருத்தி.. செம்பருத்தி.. ”

  1. # 1 ஈழநாதன் Says:

    கனநாள் மௌனவிரதத்தை உடைக்கவெண்டே ஒரு பதிவு போட்டிருக்கிறியள்.ஊரிலே இருக்கும் போது பூங்கன்றுகளிலே எனக்கு செம்பருத்தி-அதை நாங்கள் செவ்வரத்தம் பூ என்று சொல்லுவோம் மிகவும் பிடிக்கும்.ரோசா போன்ற வாசனை கூடின பூக்கள் இருந்தாலும் வாசனையே இல்லாத செம்பருத்திப் பூ தான் ஏதோ அண்மையான உணர்வைக் குடுக்கக் கூடியதாக இருந்தது.ஊரை விட்டு வரும்போது நான் பார்த்துப் பார்துச்(பாதி திருடிச்)சேர்த்த 20இற்கும் மேற்பட்ட செம்பருத்தி மரங்களை விட்டுவிட்டு வந்தது உண்மையிலேயே கவலை தந்த விடயம்.

  2. # 2 `மழை` ஷ்ரேயா Says:

    பூவிதழைப் பிச்சு இதழ் நரம்பு பெருக்கிற மாதிரி அதுக்குள்ள ஊதியிருக்கிறீங்களா?

    செவ்வரத்தம்பூ drinkம் ஞாபம் வருது. (அதுசரி, மாம்பழ சீசன் தொடங்கீட்டுதோ?)
    ———
    ஹலோ ஈழநாதன்.. எப்பிடி இருக்கிறீங்க?

  3. # 3 மதி கந்தசாமி Says:

    ஈழநாதன், உங்கள உண்மையா எதிர்பாக்கேல்ல. சந்தோசமாயிருக்கு, பாக்க!

    அம்மம்மாவும் செவ்வரத்தம்பூ எண்டுதான் சொல்லுறவ. நாங்களும் சில நேரம் அப்பிடிச் சொல்லுறனாங்கள்.

    எனக்கு ரோசாப்பூவில எப்பவுமே பெருசா விருப்பமிருந்ததில்ல. அதவிட மல்லிகை போன்ற பூக்கள்தான் பிடிச்சிருந்தது.

    //வாசனையே இல்லாத செம்பருத்திப் பூ தான் ஏதோ அண்மையான உணர்வைக் குடுக்கக் கூடியதாக இருந்தது//

    இத நானும் உணர்ந்திருக்கிறன் ஈழநாதன்.

    ஷ்ரேயா வாங்கப்பா வாங்க.

    செவ்வரத்தம்பூ டிரிங்க் குடிச்சதில்ல. ஆனா, கேள்விப்பட்டிருக்கிறன்.

    //பூவிதழைப் பிச்சு இதழ் நரம்பு பெருக்கிற மாதிரி அதுக்குள்ள ஊதியிருக்கிறீங்களா?//

    ஹிஹி.. பிய்க்கிற இதழெல்லாம் எதுகெண்டு நினைச்சீங்கள். ஆனா, எழுத மறந்திட்டன். நினைவுபடுத்தினதுக்கு நன்றி ஷ்ரேயா.

    மாம்பழ சீசன் தொடங்கி ஒரு 3 கிழமையாகப்போகுது. அண்டைக்கு குளிர்காலத்துக்கெண்டு ஜாம் செஞ்சனான். உங்கட நினைப்பும் வந்தது! ;)

    -மதி

  4. # 4 சக்தி Says:

    புகைப்படங்கள் அருமை

  5. # 5 கூமுட்டை Says:

    தங்களின் காமெரா எந்த மாடல் ? படங்கள் மிகவும் நன்றாக வந்துள்ளன.
    நன்றி

  6. # 6 ayyanar Says:

    மதி இருக்கிங்களா? விடுப்பெடுத்து போயிட்டிங்க என்றில்ல நினைச்சேன் :)

    புகைப்படங்களும் நினைவுகளும் அருமை

  7. # 7 மதி கந்தசாமி Says:

    சக்தி, கூமுட்டை & அய்யனார்: நன்றி!

    கூமுட்டை: (நல்ல பெயர். ;) ). இந்தப் படங்களை கைக்கடக்கமான காமெரலதான் எடுத்தேன். எச்.பியின் ஆர்607.

    அய்யனார்: உங்களையெல்லாம் நிம்மதியா இருக்கவிடுவேன்னா நினைச்சீங்க? ;)

    -மதி

  8. # 8 நாக.இளங்கோவன் Says:

    //வாடி வதங்கின பூத்தொடங்கி இலைக்குள்ளால இருந்து எட்டிப்பார்க்கிற மொட்டு வரைக்கும் பிச்சுப்புடிங்கி ஆராய்ச்சி நடந்திருக்கு. விரிஞ்ச பூவின்ற இதழ்களை ஒவ்வொண்டாப் பிச்சுப் பார்க்கிறது.//

    மதி அவர்களே,

    மிகவும் இரசித்துப் படித்தேன். மென்மையான உணர்வுகள்.

    நீங்கள் பரவாயில்லை; ஏனென்றால், நான் இந்தப் பூவைப் பறித்து அப்படியே தின்று விடுவேன் :-)
    பூவைப் பறித்து காம்பை உறிஞ்சினால்
    தேனீயிடம் தப்பித்த தேன் கொஞ்சம் இருக்கும். அதை சுவைத்துவிட்டு முழுப்பூவை அப்படியே மென்று தின்று விடுவேன் :)

    செம்பருத்தி உடலுக்கு நல்லது. தலைமயிர் வளத்துக்கு நல்லது
    என்று சொல்லுவார்கள். அதனை தேங்காய் எண்ணெயில் கலந்து
    தடவிக் கொள்வார்கள்.

    முதல் படம் மிக அழகு.

    அன்புடன்
    நாக.இளங்கோவன்

  9. # 9 samsari Says:

    மதியும் நாதனும் செம்பருத்தி பூவைக் காட்டி அழவச்சுட்டீங்களே!
    மண்ணைப் பிரிந்த மனிதன் எந்த ஊரில் கிடந்தாலும் அவன் அகதிதானய்யா! மதுரையில பொறந்து சென்னையில் வாழுற இந்த மனுஷனோட மனநிலையும் உங்க மாதிரிதான்!

Leave a Reply


  • You Avatar
    -


Creative Commons License