Archive for May 16th, 2007

வேர்ட்பிரஸ் 2.2உம் இலவச இணையத்தள வசதிகளும் இன்னபிற விதயங்களும்05.16.07

ilai.jpg

இலவச இணையத்தளங்கள்:

பெரும்பாலான தமிழ் வலைப்பதிவுகள் ப்ளாக்கர் தளத்தில் இருக்கின்றன. அதே நேரத்தில் வேர்ட்பிரஸ் செயலியைக் கொண்டு இயங்கும் வேர்ட்பிரஸ்.காம் இணையத்தளம் ஆரம்பத்ததில் இருந்து பல வலைப்பதிவுகள் அங்கே இடம் மாறியிருக்கின்றன. பல புதிய பதிவுகளும் வேர்ட்பிரஸ்.காமில் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்தத் தளத்தில் Wordpress MU பயன்படுத்தப்படுவதால் ஓரளவுக்கு மேல் மாற்றங்களை ஏற்படுத்த முடியாத நிலை. இதன் காரணமாகத் திரட்டிகளின் நிரல்களை இணைக்க முடியாமல் இருக்கிறது. இதன்காரணமாகவே, பலரும் வேர்ட்பிரஸ்ஸுக்கு மாறத் தயங்கி, என்ன வழிவகை என்று கேட்கிறார்கள்.

இப்போதைய சூழ்நிலையில் தனியாக ஒரு வளை - அதாங்க தனியாக இணையத்தளத்தில் வேர்ட்பிரஸ் நிறுவுவதன்மூலமே நமக்கு வேண்டியவற்றை நிறுவி, வேண்டிய மாறுதல்களையும் செய்ய முடியும். அப்படித் தனியாகப் போவதற்கு சிலருக்கு விருப்பம் இருந்தாலும், வேர்ட்பிரஸ்ஸைத் தனியாக நிறுவிப் பராமரிக்க இயலுமா, விரும்பும் மாற்றங்களைத் தனியாகச் செய்ய முடியுமா என்னும் குழப்பங்களும் பலருக்கு இருக்கின்றன. அப்படியானவர்கள் எங்கேயாவது ஒரு இடத்தில் வேர்ட்பிரஸ்ஸை நிறுவிச் சோதனையோட்டம் செய்து பார்க்க விரும்புவது வழக்கம்.

அம்மாதிரியானவர்களுக்கு கீழ்க்கண்ட தளங்கள் உதவலாம்.

http://www.i6networks.com

http://www.unlimitedmb.com

http://www.1majorhost.com

மாற்றம் ஒன்றே நிலையானது என்னும் தத்துவத்தின்படி, இத்தளங்கள் நாளையே செயலிழந்துபோகலாம். புதிய விதிகள் பிறப்பிக்கப்படலாம். என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். ஆகவே, இத்தளங்களிலே வலைப்பதிவுகளை உருவாக்கி நிரந்தரமாக/ஓரளவு நிரந்தமாக நடாத்த விரும்புபவர்கள், அடிக்கடி முழு இணையத்தளத்தையும் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த இணையத்தளங்களில் நான் எதையும் நிறுவி சோதனை செய்யாததால் இதைத்தவிர வேறு எந்தத் தகவலையும் கொடுக்க முடியாமலிருக்கிறது. மன்னிக்கவும்!

வேர்ட்பிரஸ் 2.2:

அதிவிரைவாக பயனர்களின் விருப்பங்களைக் கவனத்தில் எடுத்து வளர்ந்து வரும் செயலிகளில் வேர்ட்பிரஸ்ஸும் ஒன்று. சில மாதங்களுக்கு முன்புதான் வேர்ட்பிரஸ் செயலியின் மாறிய வடிவத்தைப் பயனர்களுக்கு கொடுத்தார்கள். அதற்குள் பல மாறுதல்களைச் செய்து அடுத்த பிரதி தயாராகியிருக்கிறது. புதிய வடிவத்தில், widgetகளையும் செயலியிலேயே இணைத்திருக்கிறார்கள். இவ்வசதி வேர்ட்பிரஸ்.காம் பயனர்களுக்கு இருந்தது. இப்போது தனியாக நிறுவிச் செயல்படுத்ப்பவர்களுக்கும் கிடைக்கிறது. முன்போல தனியாக சொருகுநிரல்களைத் தேடிப்பிடித்து நிறுவிக்கொண்டிருக்கத் தேவையில்லை.

http://wordpress.org
wordpress 2.2 “Getz”


புதிதாக வேர்ட்பிரஸ் செயலியை நிறுவ விரும்புபவர்களுக்கு:

இரண்டு வருடங்களுக்கு முன்பு, வேர்ட்பிரஸ் செயலியை நிறுவ விரும்புபவர்களாக உதவிக்குறிப்புகளை எழுதியிருந்தேன். அதற்குப்பிறகு மாற்றங்கள் வந்திருப்பினும் அடிப்படை விதயங்களில் பெரிதும் மாற்றங்களேற்படவில்லை. விரும்பினால், இந்த உதவிக்குறிப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

http://mathy.kandasamy.net/musings/archives/2005/05/23/194

ப்ளாக்கரில் சொந்த இணையத்தள முகவரிகள்:

ஓரளவு தொடர்ந்து வலைபதிவதென்று முடிவெடுத்துவிட்டால் முதலில் செய்ய வேண்டியது, உங்களுக்கு விரும்பிய பெயரில் இணையத்தளத்தின் பெயரைப் பதிவு செய்தல். முன்பெல்லாம் ப்ளாக்கரை அடிப்படையாகக் கொண்டு வலைபதிந்து வருபவர்கள், தாம் விரும்பிய இணையத்தளத்தின் பெயரைப் பயன்படுத்த நினைத்தால், சொந்தமாக இடம் வாங்கிக்கொண்டு அங்கே ப்ளாக்கரைப் பயன்படுத்த மட்டுமே முடிந்தது. இப்போது ப்ளாக்கர் பீட்டா வந்தபிறகு, அதில் மாற்றமேற்படுத்தியிருக்கிறார்கள். ப்ளாக்கர் தளத்திலேயே உங்களின் வலைப்பதிவை வைத்துக்கொண்டு, வலைப்பதிவின் பெயரை மட்டும் நீங்கள் விரும்பியபடி வைத்துக்கொள்ளலாம். என்ன, இணையத்தளத்தின் பெயரை நீங்கள் எங்கேயாவது விலை கொடுத்து வாங்கியிருக்க வேண்டும்.

உதா: வலைப்பதிவு.blogspot.com என்பதை இனிமேல் வலைப்பதிவு.காம் என்று காட்டலாம்.

மேலதிக தகவல்களுக்கு: Blogger Custom Domains

Posted in Wordpress, அனைத்து இடுகைகள், தமிழ் இணையம்with 4 Comments →

  • You Avatar
    -


Creative Commons License