ஏர் இந்தியா 182 (1985 குண்டுவெடிப்பு) விசாரணையில் புதிய விவரங்கள் • 05.10.07
1985ம் ஆண்டு ஏர் இந்தியா 182 விமானம் அட்லாண்டிக் சமுத்திரத்துக்கு மேலே பறக்கும்போது வெடித்துச் சிதறியது எல்லாருக்கும் தெரிந்த விதயம். விமானத்தில் பயணம் செய்த 329 பேரும் இறந்து போனார்கள். இறந்தவர்களில் 82 பேர் குழததைகள். 280 பேர் கனேடியப் பிரஜைகள்.
மொன்ரியல், கனடாவிலிருந்து புறப்பட்ட அந்த விமானம் வெடித்துச் சிதறிய துயரசம்பவம் குறித்த விசாரணை இங்கே கடந்த இருபது சொச்ச வருடங்களாக நடைபெற்று வருகின்றன. 2005ம் ஆண்டு, இந்த்க் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இருவர் தொடர்பான வழக்கில் இருவரின் மீதும் எந்தவிதமான பிழையும் இல்லை என்று தீர்ப்பும் வந்தது. அந்தச் சமயத்தில் CBC தொலைக்காட்சியில் காட்டப்பட்ட விவரணப்படம் பல கேள்விகளையும் (எனக்குள்) எழுப்பின. அதே வருடம் அயர்லாந்தில் 20 வருட முடிவில் நினைவுகூறல் நடந்தது. அதில் கலந்துகொண்ட அப்போதைய கனேடியப் பிரதமர் போல் மார்ட்டின், ஜூன் 23ஐ ‘National Day of Mourning’ ஆக பிரகடனம் செய்தார். அன்றைய தினம், கொடிகளெல்லாம் அரைக்கம்பத்தில் பறக்க வேண்டும் என்றும் சொன்னார்.
எல்லாம் சரி, ஒரு பொது விசாரணைக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்பதே ஏர் இந்தியா 182 குண்டு வெடிப்பில் உறவினர்களை இழந்தவர்களின் கோரிக்கையாக இருந்தது. இதுவரைக்கும் நடந்த விசாரணைகள் அது தொடர்பான நிகழ்வுகள் என்று ஏராளமான விதயங்கள் இருக்கின்றன. அதையெல்லாம் பற்றிப் பேசினால் இன்று பூராவும் பேசிக்கொண்டேயிருக்கலாம்.
Long Story Short.
சமீபத்தில் நடந்துகொண்டிருக்கும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கனேடியன் அரசாங்கத்திற்கு இம்மாதிரியான தாக்குதல் நடக்கவிருக்கிறது என்று எச்சரிக்கைகள் பல பல தரப்பிலிருந்தும் கிடைத்திருக்கின்றன என்பது இதில் மிகவும் முக்கியமானது. செய்தி
அதேபோல, அப்போது மிரபல் விமான நிலையத்தில் குண்டுகள் இருக்கிறதா என்று சோதனை செய்வதற்குப் பொறுப்பாளர், தான் விமானத்தைப் பரிசோதனை செய்வதற்குள் விமானம் கிளம்பிவிட்டிருந்தது என்று சொல்லியிருக்கிறார். http://www.cbc.ca/news/airindia/

