Archive for May 4th, 2007

மைக்ரோசாப்ட் யாகூவை வாங்கப்போகுதா?05.04.07

ஒரு பக்கம் கூகுள் வகைதொகையில்லாம யூடியூப், டபிள்கிளிக்-னு வாங்கிக் குவிச்சுக் கிட்டே போகும்போது இன்னொரு பக்கம் மைக்ரோசாப்ட் யாகூவை வாங்கப்போவதாக கதை அடிபடுது. 2006 தொடக்கத்திலும் இது போன்றதொரு கதை அடிப்பட்டதுதான் என்றாலும் இப்போதைய கதை கொஞ்சம் யோசிக்க வைக்குது.

பிசி மாகசீன் இணையத்தளத்திலிருந்து - Reports: Microsoft Eyeing Deal to Buy Yahoo

-0-

யாராவது கடந்த சில வருடங்களில் கூகுளின் அசுரத்தனமான வளர்ச்சி + அவர்கள் வளைத்துப்போட்டிருக்கும் கம்பனிகள் + அறிமுகப்படுத்தியிருக்கும் நுட்பங்கள் + வல்லவனுக்கு அடிபணிந்துபோகும் பாங்கு (சீனா, மஹாராஷ்டிரா) எல்லாத்தையும் கூட்டிக்கழிச்சுக் கணக்குப் போட்டுப்பார்த்திருக்கீங்களா?

என்னளவில் கூகுளை மிகக் குறைந்த அளவே பயன்படுத்தி வந்திருக்கிறேன். அவர்களின் செயலிகள் எதையும் கணினியில் இறக்காதது மட்டுமல்ல, அவர்களின் இலவச சேவைகளில் பயன்படுத்திக்கொண்டிருந்த சிலதையும் குறைத்துக்கொண்டாயிற்று. Paranoia? Maybe! ஆனால், எந்தவொரு நிறுவனமும் Godzila அளவுக்கு வளரும்போது யோசிக்க வேண்டியிருக்கிறது.

Posted in அனைத்து இடுகைகள், தமிழ் இணையம், நாட்டுநடப்புwith 6 Comments →

  • You Avatar
    -


Creative Commons License