Blog Day 2005 - வலைப்பதிவுகள் தினம் • 08.31.05
இன்று வலைப்பதிவு நாள். ஆமாம்! வலைப்பதிவுக்கும் ஒரு நாளை நிர்ணயித்துவிட்டார்கள். :)
இன்றைக்கு ஓகஸ்ட் 31. அதையே எண்களில் எழுதினால் 3108
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.
இன்றைக்கு வலைப்பதிவர்கள், 5 புது வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தி வைக்கவேண்டுமாம். அதுவும் எந்தமாதிரியான வலைப்பதிவுகள்?
What will happen on BlogDay?
In one long moment In August 31st, bloggers from all over the world will post a recommendation of 5 new Blogs, Preferably, Blogs different from their own culture, point of view and attitude. On this day, blog surfers will find themselves leaping and discovering new, unknown Blogs, celebrating the discovery of new people and new bloggers.
இவர் சொல்வதைச் செய்வது எனக்குக் கொஞ்சம் கடினமான விதயம். ஆனபடியால் கொஞ்சம் வித்தியாசமாக முயற்சிக்கப்போகிறேன்.
ஆங்கிலத்தில் நான் படிக்கும் வலைப்பதிவுகளில் ஒன்றிரண்டு
மொன்ரியலில் நடக்கும் விதயங்களைத் தெரிந்துகொள்ள - http://montreal.metblogs.com
படம் பார்க்க - http://wvs.topleftpixel.com
நல்ல பொழுதுபோக்கு - http://www.dooce.com
கதையோடு படம் பார்க்க - http://www.deliciousdelicious.com
ஒரு காலத்தில் நான் வசித்த இடங்களில் இருந்து வலைபதிகிறார்கள்/பதிந்தவர்கள் என்றமுறையில் பிடித்த வலைப்பதிவுகள்
சென்னை அமெரிக்க தூதரகத்தில் விசா கொடுக்கும் ரொய் - http://www.princeroy.org
சுனாமி வீசிய காலத்தில் நியூயோர்க் டைம்ஸில் கண்டுபிடித்த வலைப்பதிவு. யாழ்ப்பாணத்தில் இருந்து வலைபதிந்தவர் - http://www.thiswayplease.com/extra.html
சென்னையில் பலவருடங்களாக வசிக்கும் நான்சி காந்தி - http://underthefirestar.blogspot.com
எப்போது திரும்ப எழுதத் தொடங்குவார்கள் என்று அவ்வப்போது போய் எட்டிப்பார்க்கும் வலைப்பதிவுகளில் ஒன்று - http://yegammai.blogdrive.com
காத்திருந்த இன்னொருவர் சமீபத்தில் திரும்பவும் தொடங்க்விட்டார் என்று கண்டுபிடித்தேன் - http://alpha.blogdrive.com
தமிழில் புதிதாகத் தொடங்கியிருக்கும் வலைப்பதிவுகளில் எனக்குப் பிடித்தவை:
கல்வெட்டு - இரண்டு பதிவுகள்தான் படித்திருக்கிறேன். எழுத்துநடை மேலும் படிக்க வைக்கிறது. எனக்குப் பிடித்த விதயத்தை எழுதி இருப்பதாலும் பிடித்துப்போயிற்று. அதாங்க ஊர் சுத்துறது. ;)
கலையரசி - நன்றாக எழுதுகிறார். அவருடைய ‘பயணம் இது பயணம்’ பதிவு பிடித்திருந்தது. தனித்தனி பதிவுகளாக ஏன் வைத்திருக்கிறார் என்று யோசித்திருக்கிறேன். பேசாமல் ஒன்றிலேயே வைத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் weblogs.us போன்ற இடங்களில் வலைப்பதிவு தொடக்கலாமே என்று சொல்ல வேண்டும் கலையிடம். சொல்லிட்டேன். :high_five:
கமேலியோன் - பச்சோந்தி - இவருடைய புகைப்படப் பதிவு பிடிக்கும். காரணம், தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையில் அன்றாடம் நடக்கும் விதயங்கள்.
அஞ்சலி - தமிழ்வலைப்பதிவுலகில் வயதில் இளையவர். அம்மாவின் உதவியோடு வலைபதிவும் ஏழு வயதுச் சிறுமி. இதுபோதாதா? :fly:
நந்தனின் மூக்குக்கண்ணாடி - சுவாரசியமான பதிவுகள். எல்லோரும் அவருடைய ஹைதராபாத் குரங்கு நண்பர்களைப்பற்றிப் படித்திருப்பீர்கள். :evil:
ஸ்ர்காந்தலட்சுமி அருளாநந்தம் - யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றும் ஸ்ர்காந்தலட்சுமி, தற்போது லண்டனில் இருந்து பதிகிறார். விரைவில் யாழ் சென்று, மாணவர்களுக்கு வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஆர்வமாகப் பேசுகிறார்.
கி.பி.அரவிந்தன் - கி.பி.அரவிந்தனுக்கு அறிமுகம் தேவையில்லை. அவரது படைப்புகள் மதுரைத்திட்டத்தில் படிக்கக்கிடைக்கின்றன. அப்பால் தமிழ் இணையத்தளத்தை நடாத்தி வருகிறார். என்ன ஒன்று, அடிக்கடி எழுதலாம்.
சரவ் - சமீபத்தில் சென்னைக்குச் சென்ற இவர், பயண அனுபவங்களை சுவாரசியமாக எழுதி இருக்கிறார். வேர்ட்பிரஸ் டெம்ப்ளேட்டுகளை உருவாக்கும் சதீஷ் பாலசுப்ரமணியத்தின் சகோதரர் (என்று அனுமானிக்கிறேன்).
ஜெயஸ்ர்(அமெரிக்கா) - நாட்டுப்புறப்பாடல்களாகப்போட்டு அசத்திக்கொண்டிருக்கிறார். இவரை, சிறுவர் பாடல்கள் கூட்டுவலைப்பதிவிற்கு இழுத்துக்கொண்டு வரவேண்டும். :call_me:
நிரோ்ஷன் - இந்தப் பதின்ம வயது வலைப்பதிவர் ஓவியம் வரைவதிலே நல்ல திறமை கொண்டவர். அவரது ஓவியங்களை, வருங்காலத்தில் பகிர்ந்துகொள்வார் என்று நம்புகிறேன். :been_searching_4_u:
ரம்யா நாகேஸ்வரன் - இவருடைய பொதுச்சேவை மனப்பாங்கு என்னை ஈர்த்தது. இவர் இட்ட பெற்றோர் என்னும் கணவன் மனைவி பதிவும் நாராயணனின் பதிவொன்றில் இட்டிருந்த பின்னூட்டங்களும் பிடித்துப்போய்விட்டன.
மரம் - அப்படிப்போடு என்று சொல்லவைக்கும் அதிரடிப்பதிவுகளுக்கு சொந்தக்காரர். அரசியல் பேசும் பெண்கள், தமிழ் இணையத்தில் குறைவு. அதுவும் அதிரடியாக கருத்துகளை முன்வைக்கும் பெண்கள் இன்னமும் குறைவு. அந்த வகையில் ஒரு ஹாங்காங் அம்மணியை நினைவுபடுத்தியதாலேயே பிடித்துப்போய், பிறகு இவரது பதிவுகளால் என்னை ஈர்த்தவர்.
இவர்களைத் தவிர, எனக்குப் பிடித்த தமிழ்பதிவர்களை இங்கே, வலது பக்கத்தில் பட்டியலிட்டிருக்கிறேன். இன்னுமொரு நீண்ட பட்டியலை, நீங்கள் இங்கே படிக்கலாம்.
any takers?

