‘விஜயநகரம்’ கார்த்திகேயன்
‘விஜயநகரம்’ கார்த்திகேயன். வலைப்பதிவுகளில் எனக்குக் கிடைத்த ஒரு fellow history buff நண்பன். விஜயநகரத்துப் புகைப்படங்களை இவரின் வலைப்பதிவில் இரசித்ததுண்டு. ஊர் சுற்றுவதில் இவருக்கிருந்த ஆர்வத்தை, இவர் எடுத்துத் தள்ளியிருக்கும் புகைப்படங்களிலே காணலாம். Dell நிறுவனத்தில் பணிபுரிந்தமையால், அடிக்கடி வெளிநாடு சுற்றிக்கொண்டிருப்பார். இவர் எடுத்த புகைப்படங்களை, நான் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும். நாமும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, விஜயநகரம் போக வேண்டும் என்று நினைக்க வைத்த புகைப்படங்கள் அவை.
நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். உதவி என்று போனால், உடனே தன்னால் இயன்றதைச் செய்பவர். அகத்தியர் குழும மடல்களை ஒருங்கிணைப்பதில் ஆர்வமாக ஈடுபட்டவர். மடல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து தேவையில்லாதவற்றை வெட்டி, மீதியை ஒட்டிக்கொண்டிருந்தோம். அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை கடகடவென்று முடித்துவிட்டு, அடுத்த பகுதியை எடுத்துக் கொள்வார். நகைச்சுவை உணர்வுள்ளவர் என்று சொன்னேனில்லையா? ‘சோடாபாட்டில்’ பாலா, கோழி ஏன் சாலையைக் கடந்தது என்று பதிவுகளை இட்ட சமயத்தில், இவரும் தன்பங்குக்கு கோழி ஏன் சாலையைக் கடந்தது என்று எழுதியிருந்தார். அது நினைவுக்கு வந்து, போய்த் தேடினேன். மனது கஷ்டமாக இருக்கிறது. நீங்களும் படிக்க விரும்பினால்..
http://vijayanagar.blogspot.com/2004/06/iii.html
ஈஸ்வரின் வலைப்பதிவில் கார்த்தியேனின் மறைவுச் செய்தியைப்படித்ததும், ஜோக்காக இருக்க வேண்டுமே என்று உடனே நினைத்துக்கொண்டேன். Even if it’s a sick joke!
http://vijayanagar.blogspot.com/2005/08/hasta-la-vistalife.html படித்ததும் இல்லையென்று தெரிந்தது. ‘சோடாபாட்டில்’ பாலாவுக்கு எழுதியதும் உடனே பதில் போட்டிருந்தார். அதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
“fatal bike accident on friday morning in bangalore.
he was on his way to office …He skid and fell. He expired on the way to the hospital. The injury was to the chin and this somehow interfered with his breathimg leading to death.
he is survived by his mother and a younger brother.”
“please forgive me if the earlier mail was abrubt..
i dont know what to say, our circle of friends is struggling to deal with this. He was a well known guy in college and the web. The most painful thing is to inform other people looking for information as to what happened.”
கார்த்திகேயனின் அம்மாவிற்கும் தம்பிக்கும், கார்த்திக்கின் நண்பர்களுக்கும் கடவுள் மனோதிடத்தை அளிப்பாராக!


August 29th, 2005 at 12:10 pm
தகவலுக்கு நன்றி. வருத்தமாக உள்ளது.
August 29th, 2005 at 12:31 pm
மதி,
போட்டோலொக்கினூடாகத்தான் எனக்கும் அவரைத் தெரியும். வெறும் அனுதாபங்களைத் தெரிவிப்பதுமட்டுமே அவரின் குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலாக இருக்கமுடியாதென்றபோதிலுங்கூட, அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர எதையுமே செய்யமுடியவில்லை. :-(
August 29th, 2005 at 12:51 pm
கார்த்திக்கைப் பிரிந்து வாடும் அம்மாவுக்கும் தம்பிக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். தகவலுக்கு நன்றி, மதி.
August 29th, 2005 at 1:19 pm
இளம் வயதில், அதுவும் தந்தை இல்லாதவர் என தெரிகிறது :(
மனதை பிசைகிறது. கார்த்திக்கின் தாயாருக்கும்,தம்பிக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்க விரும்புகிறோம்.
வாசன் & குடும்பத்தினர்
August 29th, 2005 at 1:41 pm
மிகவும் சோகமான செய்தி இது.
அருள்
August 29th, 2005 at 2:00 pm
உங்கள் பதிவைப்பார்த்து கார்த்திகேயனின் பக்கம் சென்றேன். நீங்கள் சொன்னது போல் நல்ல நகைச்சுவை உள்ளவர் என்று தெரிகிறது. அவரது ப்ளாகில் நான் பார்த்த 2 விதயங்கள் :
1. ஒரு போட்டோவிற்கு அவர் எழுதியுள்ள குறிப்பு -
I even got the British visa the day before the blasts. But my mom denied me visa to go to London. :( (That makes me a victim of a terrorist attack, doesn’t it?)
2.’Gone with the wind; - என்றொரு தலைப்பு!
அவரது குடும்பத்தாருகும், உங்களைப்போன்ற நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
August 29th, 2005 at 2:23 pm
கார்த்திக் வலைப்ப்பூ ஆசிரியராக இருந்தபோது தன்னை இப்படி அறிமுகம் செய்துகொண்டார் -
வலைப்பூவில் இவர் எழுதியதைப் படிக்க:
http://valaippoo.yarl.net/archives/week_2004_08_01.html
-மதி
August 29th, 2005 at 2:53 pm
வருத்தத்தைத் தந்தது மதி!
August 29th, 2005 at 3:27 pm
வருத்தமான செய்தி. ஒரு துடிப்புள்ள,வாழ்க்கையை அந்தக்கணத்தில் வாழத்துடித்த ஒரு இளைஞரை இழந்துவிட்டோம் என்பது மட்டும் தெளிவாகப் புரிகின்றது :-(.
August 29th, 2005 at 3:51 pm
அவர் வலைப்பூ ஆசிரியராக இருந்து எழுதிய பதிவுகள் நினைவுக்கு வருகின்றன. வருத்தமான செய்தி.
August 29th, 2005 at 5:02 pm
கஷ்டங்க, நல்ல FRIENDLY FACE
கொஞ்சம் முன்னாடியே வந்து அவர் கூட பழகிருக்கலாம் போல இருக்கு
August 29th, 2005 at 5:24 pm
ஆழ்ந்த அனுதாபங்கள்.
August 29th, 2005 at 8:35 pm
மதி, என் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
August 29th, 2005 at 9:09 pm
what can i say, he look like ma brother :-(
hope for the family to get through this…..
August 29th, 2005 at 9:46 pm
மதி, என் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
August 29th, 2005 at 10:16 pm
மதி,
நம்பவே முடியலை.
ஆழ்ந்த அனுதாபங்கள் அவர் குடும்பத்தினருக்கும், நம் வலை நண்பர்களுக்கும்.
August 29th, 2005 at 10:51 pm
:-(
August 29th, 2005 at 11:14 pm
தொண்டுள்ளம் மிக்க அந்த இளைஞரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
எம்.கே.குமார்
August 30th, 2005 at 12:07 am
கொடுமை!
:-(
August 30th, 2005 at 12:49 am
மனமே சரியில்லை.
மதி, நீங்க குறிப்பிட்ட கார்த்திகேயனின் “கோழி சாலை கடக்கும்” பதிவு எனக்கும் மிகவும் பிடிக்கும்.
மரணத்தைத் தீர்மானிக்கும் காரணியை எனக்குப் பிடிக்கவில்லை. எத்தனை அற்பர்கள்/கெட்டவர்களிருக்க, நல்லவர்கள் இறந்து போகிறார்கள். குடும்பத்தாருக்கும் கார்த்திகேயனைத் தெரிந்த அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவன் நினைவுகள் ஆறுதலளிக்கட்டும்.
August 30th, 2005 at 2:25 pm
இவரது பதிவுகளைப் படித்திருக்கிறேன். மறைவுச் செய்தி வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது.
September 2nd, 2005 at 8:09 am
அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
September 2nd, 2005 at 9:33 am
மிகவும் வருத்தமாக இருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள்.
September 3rd, 2005 at 8:45 am
இந்தச் செய்தி மனதுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. அவரது அம்மா, தம்பிக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
September 5th, 2005 at 6:52 pm
தாமதமாக தான் இந்த செய்தியினை அறிகிறேன். அதிர்ச்சியான தகவல். என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
வரும் நாட்களை எதிர்கொள்ள தேவையான மனோ பலத்தை அவரது குடும்பத்தாருக்கு கொடுக்குமாறு ஆண்டவனை வேண்டுகிறேன்.
September 5th, 2005 at 9:45 pm
My heartfelt condolences for his family. Sad end to a good blogger.
September 6th, 2005 at 1:30 am
பதிவை படிக்க ஆரம்பித்தவுடன் , கடவுளே அதுவாக இருக்கக் கூடாது என்று படபடத்த மனது, நம்ப முடியாமல் கனத்து மரத்து விட்டது.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
September 6th, 2005 at 4:13 pm
அறிமுகம் இல்லையென்றாலும் மனதை மிகவும் கணக்கச் செய்கிறது. கார்த்திகேயனின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.
March 7th, 2006 at 2:34 am
[...] நியோவின் மறைவு குறித்த இடுகை [...]