Archive for August 29th, 2005

‘விஜயநகரம்’ கார்த்திகேயன்08.29.05

‘விஜயநகரம்’ கார்த்திகேயன். வலைப்பதிவுகளில் எனக்குக் கிடைத்த ஒரு fellow history buff நண்பன். விஜயநகரத்துப் புகைப்படங்களை இவரின் வலைப்பதிவில் இரசித்ததுண்டு. ஊர் சுற்றுவதில் இவருக்கிருந்த ஆர்வத்தை, இவர் எடுத்துத் தள்ளியிருக்கும் புகைப்படங்களிலே காணலாம். Dell நிறுவனத்தில் பணிபுரிந்தமையால், அடிக்கடி வெளிநாடு சுற்றிக்கொண்டிருப்பார். இவர் எடுத்த புகைப்படங்களை, நான் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன். கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கும். நாமும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது, விஜயநகரம் போக வேண்டும் என்று நினைக்க வைத்த புகைப்படங்கள் அவை.

நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளவர். உதவி என்று போனால், உடனே தன்னால் இயன்றதைச் செய்பவர். அகத்தியர் குழும மடல்களை ஒருங்கிணைப்பதில் ஆர்வமாக ஈடுபட்டவர். மடல்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து தேவையில்லாதவற்றை வெட்டி, மீதியை ஒட்டிக்கொண்டிருந்தோம். அவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை கடகடவென்று முடித்துவிட்டு, அடுத்த பகுதியை எடுத்துக் கொள்வார். நகைச்சுவை உணர்வுள்ளவர் என்று சொன்னேனில்லையா? ‘சோடாபாட்டில்’ பாலா, கோழி ஏன் சாலையைக் கடந்தது என்று பதிவுகளை இட்ட சமயத்தில், இவரும் தன்பங்குக்கு கோழி ஏன் சாலையைக் கடந்தது என்று எழுதியிருந்தார். அது நினைவுக்கு வந்து, போய்த் தேடினேன். மனது கஷ்டமாக இருக்கிறது. நீங்களும் படிக்க விரும்பினால்..

http://vijayanagar.blogspot.com/2004/06/iii.html

ஈஸ்வரின் வலைப்பதிவில் கார்த்தியேனின் மறைவுச் செய்தியைப்படித்ததும், ஜோக்காக இருக்க வேண்டுமே என்று உடனே நினைத்துக்கொண்டேன். Even if it’s a sick joke!

http://vijayanagar.blogspot.com/2005/08/hasta-la-vistalife.html படித்ததும் இல்லையென்று தெரிந்தது. ‘சோடாபாட்டில்’ பாலாவுக்கு எழுதியதும் உடனே பதில் போட்டிருந்தார். அதை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

“fatal bike accident on friday morning in bangalore.
he was on his way to office …

He skid and fell. He expired on the way to the hospital. The injury was to the chin and this somehow interfered with his breathimg leading to death.

he is survived by his mother and a younger brother.”

“please forgive me if the earlier mail was abrubt..
i dont know what to say, our circle of friends is struggling to deal with this. He was a well known guy in college and the web. The most painful thing is to inform other people looking for information as to what happened.”

கார்த்திகேயனின் அம்மாவிற்கும் தம்பிக்கும், கார்த்திக்கின் நண்பர்களுக்கும் கடவுள் மனோதிடத்தை அளிப்பாராக!

Posted in Miscellaneous, அனைத்து இடுகைகள்with 29 Comments →

  • You Avatar
    -


Creative Commons License