ஓர் ஆணாதிக்க ஆங்கிலப் பேராசிரியர் என்ன எழுதுவார்?..

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள் on Aug 28, 2005

நாகூர் ரூமியின் வலைப்பதிவில் அவர், சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலைப்பற்றிய விமர்சனம் என்ற ஒன்றை வி்ஷமாக உமிழ்ந்திருக்கிறார். நான் சல்மாவின் இந்த நாவலைப்படிக்கவில்லை. சல்மாவின் ஓரிரு கவிதைகள் எப்போதோ ஒரு பொழுதில் என்னை ஈர்த்ததுண்டு. அவரது பேட்டிகளில் ஓரிரு வரிகளை உண்மையாக உணர்ந்ததுண்டு. அதற்கும் அப்பால், சல்மாவின் மீது ஒரு பிடித்தம் இருந்ததில்லை.

சல்மாவின் கவிதைமொழி குறித்து எத்தனையோ பேர் எத்தனையோ தடவை என்னென்னமோ எழுதிக் குவித்துள்ளார்கள். சல்மாவின் கவிதைமொழி என்னை ஈர்க்காத அதே வேளையில், சல்மா என்னமாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்று தீர்மானிக்க முயலும் ஆட்களை கேலியாக வேடிக்கை பார்த்திருக்கிறேன். கவிதை பிடித்திருந்தால் பிடித்தது என்றும் பிடிக்கவில்லையென்றால் பிடிக்கவில்லை என்றும் சொல்லிச் செல்வதை விட்டுவிட்டு, அடடா! அதெப்படி இப்படியாக எழுதப்போயிற்று என்று கலாச்சாரக் காவலர் வேடம் பூணுகையில்/பூண எத்தனிகையில் எரிச்சல் வருகிறது!

இன்றைக்கு நாகூர் ரூமி எழுதியதில் பல இடங்களில் அவரது வன்மம் கண்கூடாகத் தெரிந்தது. படிக்கையிலேயே, அவரிடம் பயிலும் மாணாக்கர்களிடம் எத்தகைய எண்ணங்களை விதைக்கிறார் என்றும் யோசித்தேன். திறந்த மனப்பாங்கையும் சகிப்புத்தன்மையையும் ஆசிரியர்கள் தங்களிடம் வளர்த்துக்கொண்டால்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். [இதைப் படித்துக்கொண்டிருக்கும் நண்பரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?]

நாகூர் ரூமியின் பதிவைப் படித்த இரண்டு எண்ணங்கள் தோன்றின. நாவலைப்படிக்க முதலே, ஏன் இதைப் படித்தோம் என்பது முதலாவது. நாகூர் ரூமி ‘ராயர் காப்பி கிளப்பில்’ எழுதிய மடல்களையும் அவரது வலைப்பதிவையும் இதுவரை படித்ததில் விழுந்திருந்த பிம்பம் சரியானதே என்பது இரண்டாவது.

பதிவு நிரம்பவும் நாகூர் ரூமி, தன்னுடைய ஆணாதிக்க மதவாத அபத்தங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தடவை படித்ததில் மூழ்ந்த கோபமே இன்னும் தீரவில்லை. ஆனபடியால், ஒவ்வொரு வரியாக இங்கே எடுத்துக்காட்டி, பேராசிரியர் எங்கே எப்படி அவருடைய வன்மத்தை எழுத்தில் வடித்திருக்கிறார் என்று எழுதப்போவதில்லை. பொடிச்சி ஓரிரு வரிகளை எடுத்து அவருடைய கருத்துகளைக் கூறியிருக்கிறார். எதற்கும் இருக்கட்டும் என்று, அவற்றை நான் இங்கே பதிந்து வைத்திருக்கிறேன். [பொடிச்சி, தன்னுடைய HYPOCRISY பதிவில் இட பரிந்துரைக்கிறேன்.]

இரண்டுநாட்களாக நினைவில் வந்து தொலைத்துக்கொண்டிருக்கும், ‘நாக்கை பிடுங்கிக்கிறாமாதிரி நாலு கேள்வி கேக்கணும்’ என்று நினைக்க வைக்கும் வரிகள் ஏராளம் ஏராளம். ஒரு குறுக்கு வெட்டு எடுத்துக்காட்டு கீழே.

பேராசிரியர் நாகூர் ரூமி எழுதுகிறார்:

“பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்.”

இவர் பேராசிரியர்! சீஈஈஈஈ தூஊஊஊஊ…!

Trackback URI | Comments RSS

25 Responses to “ ஓர் ஆணாதிக்க ஆங்கிலப் பேராசிரியர் என்ன எழுதுவார்?.. ”

  1. # 1 மதி கந்தசாமி Says:

    பல எண்ணங்கள் வந்து போய்க்கொண்டிருந்தாலும், அவற்றையெல்லாம் எழுத்தில் வடிக்கும் மனோநிலையில் நானில்லை. நான் எழுதினாலும், இந்தமாதிரி வரும் என்று சொல்வதற்கில்லை!

    பெயரிலியின் பதிவு:
    http://wandererwaves.blogspot.com/2005/08/5.html

    மிக மிக அருமையான பதிவு. நன்றி பெயரிலி.

    தங்கமணி கச்சிதமாக சொன்னதையும் இங்கிடுகிறேன்.

    உங்கள் நம்பிக்கைகள் உங்களைப்பற்றி மட்டுமே பேசுகின்றன, உண்மைகளைப்பற்றியல்ல… - தங்கமணி.

    -மதி

  2. # 2 ராம்கி Says:

    //திறந்த மனப்பாங்கையும் சகிப்புத்தன்மையையும் ஆசிரியர்கள் தங்களிடம் வளர்த்துக்கொண்டால்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்.// மெத்தச் சரி..

    //“பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்.”//

    மன விகாரம் வெளிப்படுகிறது..

  3. # 3 ஷ்ரேயா Says:

    I was disgusted!

    //மன விகாரம் வெளிப்படுகிறது//
    very true.

  4. # 4 Thangamani Says:

    ரூமி, பேராசிரியர் என்ற வார்த்தைகள் என் மனதில் தோன்றுவித்த சில விசயங்கள்..

    1. ஜலாலுதீன் ரூமியின் சில கவிதைகள்

    2. சம்பந்தமில்லாமல் ஒரு கதை.
    ஒருமுறை ஒரு புகழ்பெற்ற குருவைக்காணச் சென்றார் ஒரு இறையியல் துறை பேராசிரியர். குருவோ உண்மையான ஞானம் அடைந்தவர். குருவின் ஞானத்தால் வியந்த பேராசிரியர், குருவை தங்கள் துறையின் (இறையியல்) தலைவராக இருக்க வேண்டிக்கொள்கிறார். அதனை குரு மறுத்துவிடுகிறார். காரணம் கேட்ட பேராசிரியரிடம் குரு சொல்கிறார், விலங்கியல் துறையின் தலைவராய் ஒரு யானையோ, சிங்கமோ வரமுடியாதது போல நான் உங்கள் (துறையின்) தலைவராக முடியாது என்று.

    நன்றி!

  5. # 5 Tulsi Gopal Says:

    //பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும்//
    ஐய்ய இது என்ன அசிங்கம்? அப்ப நாமெல்லாம் கோயிலுக்குப் போறது இதுக்காகவா?

    சீச்ச்சீ

  6. # 6 Narain Says:

    My 2 cents…
    http://urpudathathu.blogspot.com/2005/08/blog-post_28.html

  7. # 7 ஜீவன் Says:

    //“பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்.”//

    இவர் பேராசிரியர்! சீஈஈஈஈ தூஊஊஊஊ…! - மதி கந்தசாமி

    பள்ளிவாசல் சென்று இறைவனைத் தொழ பெண்களுக்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை. ஒரே ஒரு கட்டுப்பாடு தவிர. ஆண்கள் முன் வரிசையிலும் பெண்கள் பின்வரிசையிலும் இருந்த தொழ வேண்டும். இதற்கு ஆணாதிக்கம் காரணம் அல்ல. இஸ்லாத்தின் வணக்க முறை மற்ற மத வணக்க முறையை விட வேறுபாடானது.

    தொழும் அனைவரும் ஒரே திசையை நோக்கி இருக்கும் போது, பெண்கள் முன்னாள் நின்றால், கவனம் திரும்பக் கூடாது என்பதே. கடவுளைத்தொழும் இடத்தில் கவனம் சிதறக் கூடாது என்ற நோக்கமே காரணம். மற்றபடி, புனித கஃபா ஆலயத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாகவே தொழுகிறார்கள்.

    ////ஐய்ய இது என்ன அசிங்கம்? அப்ப நாமெல்லாம் கோயிலுக்குப் போறது இதுக்காகவா? சீச்ச்சீ// - Tulsi Gopal

    துல்சி கோபால்,

    நீங்கள் ‘சீச்ச்சீ’ என்றது எதற்கு என தெரியவில்லை. கோவிலில் கடவுளை வணங்கும்போது கருவறைக்கு அருகில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி வரிசையே இருக்கிறது. அங்க தட்சனம் பண்ணுபவர்கள் கூட ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவுமே பண்ணுகிறார்கள். ஒரு சில இடங்களில் வேறுபடலாம் என நினைக்கிறேன்.

    எனக்கு ரூமியைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. அவர் எழுதிய புத்தகங்களையும் படித்தில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. முஸ்லிம் பெயரில் எதைச் சொன்னாலும் அதற்கு மத உள்ளர்த்தம் கற்பிக்கப்படும். வாய்ப்பு கிடைத்தால் அவர் சார்ந்த மதமும் விமரிசிக்கப்படும்.

    உங்களில் மத நம்பிக்கையுள்ளவர்கள் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளட்டும். எந்த அளவுக்கு தாங்கள் பெண்ணுரிமை வழங்குகிறோம் என்று. கோவில் சிற்பங்களில் இல்லாத வக்கிரமா?

    வாழ்க பெண்ணுரிமை! வாழ்க எழுத்துரிமை!!

  8. # 8 Abdul Kuddus Says:

    //* திறந்த மனப்பாங்கையும் சகிப்புத்தன்மையையும் ஆசிரியர்கள் தங்களிடம் வளர்த்துக்கொண்டால்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். -மதி கந்தசாமி *//

    உடல்கூற்று இயல் ஆசிரியரிடம் ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ (விபச்சாரம் செய்பவர்களைத்தான்) கொண்டு வந்து அவர்களை நிர்வாணப்படுத்தி உடல் வெளிக்கூறுப்பற்றி விளக்கம் கேட்டால் அப்பொழுதும் சகிப்புத்தன்மை வேண்டும் என்றாக் கூறுவீர்கள்?

  9. # 9 M. Sundaramoorthy Says:

    //பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும்.//

    பெண்கள் ஆண்களை இடிப்பது தான் பிரச்சினையென்றால், வாரத்தில் மூன்று நாட்கள் ஆண்கள், மூன்று நாட்கள் பெண்கள் என்று முறைவைத்து தொழலாம். அதைவிட சிறந்தது, ஆண்கள் வீட்டிலிருந்தும், பெண்கள் பள்ளிவாசலுக்கு சென்றும் தொழலாம். பேராசிரியர் இவைப் பற்றி யோசிக்கலாமே (வெறும் யோசனைதான்).

  10. # 10 Padma Arvind Says:

    பெண்கள் அடியாருக்கு அடியாராக அல்லவா இருக்க வேண்டும். தெய்வம் தொழாள் கொழுனன் தொழுதெழுவாள் பெண்.
    எனக்கேன்னவோ நாமெல்லாம் கோவிலுக்கும் பள்ளிவாசலுக்கும் சென்று தொழுதால், தங்களின் மனம் அலைபாய்ந்துவிடுமோ என்ற அச்சமே காரணம் என்று தோன்றுகிறது.

  11. # 11 Pandi Says:

    //திறந்த மனப்பாங்கையும் சகிப்புத்தன்மையையும் ஆசிரியர்கள் தங்களிடம் வளர்த்துக்கொண்டால்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். [இதைப் படித்துக்கொண்டிருக்கும் நண்பரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?]
    //

    அதே!

  12. # 12 karthikramas Says:

    அவசியமான எதிர்ப்பு மதி. நன்றி.ஒரு விதத்தில் ரூமி தன்னை அவ்வப்போது அறிவித்துக்கொள்வதற்கு அவருக்கும் நன்றி. ;-)

  13. # 13 மதி கந்தசாமி Says:

    ராம்கி, ஷ்ரேயா, தங்கமணி, துளசி, நாராயணன், சுந்தரமூர்த்தி, பத்மா அரவிந்த், பாண்டி, கார்த்திக்ராமாஸ்: சமூகத்தில் ஆசிரியர்களாக இருக்கும் பெருமக்களே இப்படிக் குறுகிய நோக்குள்ளவர்களாக இருப்பதுதான் கோபத்துக்குக் காரணம். அதுவும் பெண் பிள்ளைகளைப் பெற்று அவர்களின் பெண் குழந்தைகளுக்கு தாத்தாவாகி இருப்பவர்கள்!

    வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஆண்களை இடிக்கத்தானே வருகிறோம்! கருத்தைக் கருத்தால் எதிர்ப்பதை விட்டுவிட்டு, இப்படிச் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. தன்னால் முடியும் என்பதனால், வன்புணர்ந்து, தன்னுடைய பலம்! என்று இறுமாப்புக் கொள்பவனுக்கும் இம்மாதிரி சொற்களால் வன்புணர்பவனுக்கும் வித்தியாசமில்லை.

    -மதி

  14. # 14 மதி கந்தசாமி Says:

    ஜீவன் & அப்துல் குத்தூஸ்:

    உங்கள் நம்பிக்கைகள் உங்களைப்பற்றி மட்டுமே பேசுகின்றன, உண்மைகளைப்பற்றியல்ல.

  15. # 15 dharumi Says:

    உங்கள் நம்பிக்கைகள் உங்களைப்பற்றி மட்டுமே பேசுகின்றன, உண்மைகளைப்பற்றியல்ல// - மதி கந்தசாமி
    - இந்த வரிகளின் சொல்லாளுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறாது.

    //* திறந்த மனப்பாங்கையும் சகிப்புத்தன்மையையும் ஆசிரியர்கள் தங்களிடம் வளர்த்துக்கொண்டால்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். -மதி கந்தசாமி *//
    - சகிப்புத்தன்மை ஒரு ஆசிரியனுக்கு வேண்டுமா என்று தெரியவில்லை. (ரொளத்திரம் வேண்டுமென்பது என் கட்சி.)ஆனால், கட்டாயம் திறந்த மனப்பாங்கு வேண்டும்.

  16. # 16 சு. க்ருபா ஷங்கர் Says:

    ஜீவன்,நீங்க என்ன எஸ்.ஜே. சூர்யாவின் தீவிர விசிறியா? அப்போ இதப் படிச்சுடுங்க: http://www.varalaaru.com/Default.asp?articleid=20

  17. # 17 ஜீவன் Says:

    [[உங்கள் நம்பிக்கைகள் உங்களைப்பற்றி மட்டுமே பேசுகின்றன, உண்மைகளைப்பற்றியல்ல.]]

    எது உண்மையல்ல?

    “பள்ளிவாசல் சென்று இறைவனைத் தொழ பெண்களுக்கு இஸ்லாத்தில் எந்த தடையும் இல்லை.” இதுவா? அல்லது

    “இஸ்லாத்தின் வணக்க முறை மற்ற மத வணக்க முறையை விட வேறுபாடானது.” இதுவா? அல்லது

    “புனித கஃபா ஆலயத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாகவே தொழுகிறார்கள்” இதுவா அல்லது

    “கோவிலில் கடவுளை வணங்கும்போது கருவறைக்கு அருகில் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி வரிசையே இருக்கிறது.”இதுவா? அல்லது

    “அங்க தட்சனம் பண்ணுபவர்கள் கூட ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவுமே பண்ணுகிறார்கள்” இதுவா? அல்லது

    “கோவில் சிற்பங்களில் இல்லாத வக்கிரமா?” இதுவா?

    உங்கள் பதிவில் எது வேண்டுமென்றாலும் நீங்கள் பதியலாம். உங்களிடம் இருப்பது “கருத்து” அல்ல “கருத்துத் திணிப்பு”

  18. # 18 மதி கந்தசாமி Says:

    //உங்கள் நம்பிக்கைகள் உங்களைப்பற்றி மட்டுமே பேசுகின்றன, உண்மைகளைப்பற்றியல்ல// - மதி கந்தசாமி
    - இந்த வரிகளின் சொல்லாளுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறாது.//

    ஸாம்/தருமி:

    எனக்கும் பிடித்திருக்கிறது. இதைச் சொன்னவர் தங்கமணி. சொன்ன இடம் இங்கே
    -மதி

  19. # 19 மதி கந்தசாமி Says:

    ஸாம்/தருமி:

    நான் இங்கே சகிப்புத் தன்மை என்று சொன்னது தீமைகளைச் சகித்துக் கொண்டு போவதை அல்ல. நான் சொன்னது, மாற்றுக் கருத்து இருந்தால், அதை நல்லமுறையில் காட்டுவது. மற்றது, தனக்கு மாற்றுக்கருத்து இருக்கிறது சொல்லி, தன்னுடைய கருத்தை நாகரீகமாகச் சொல்வது. இது சாதாரணர்களைவிட, ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம் என்று நினைக்கிறேன். அதுவும் மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மிகமிக அவசியம் என்று நினைக்கிறேன். மாணவர்களின் எண்ணங்களை சீர்படுத்துதில் மொழிகளைக் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களின் பங்கு கணிசமானது இல்லையா?

    ‘ரௌத்திரம் பழகு’ பாரதியிடம் இருந்து கற்றுக்கொண்டது.

    -மதி

  20. # 20 மதி கந்தசாமி Says:

    ஜீவன்: இங்கே என்ன பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டிருக்கிறீர்களா என்று சந்தேகமாக இருக்கிறது.

    பதிவில் கொடுத்திருக்கும் சுட்டிகளுக்குச் சென்று படித்து பிறகு சிந்தித்து அதற்குப் பிறகு எழுதுங்கள்.

    சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மேலே எழுதியிருப்பதைப் போல ‘இங்கே’ எழுத வேண்டாம். அப்படி இனிமேல் எழுதுவதை படித்து பொழுதை வீணாக்கப்போவதில்லை.

    -மதி

  21. # 21 Kannan Says:

    http://www.hindu.com/lr/2003/12/07/stories/2003120700300400.htm

  22. # 22 ஜீவன் Says:

    [[சும்மா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மேலே எழுதியிருப்பதைப் போல ‘இங்கே’ எழுத வேண்டாம்.]]

    நல்லது.

    நீங்க என்னா வேணும்னாலும் எழுதுங்க. ஜால்ரா அடிக்கிறவங்கள மட்டும் விட்டுடுங்க. மத்தவங்கள கடிச்சு குதறுங்க. நல்லா இருக்கு உங்கள் நியாயம்.

  23. # 23 Shakthiprabha Says:

    I feel a woman can write/portray what she wants or feels reg certain aspects of any society. I have not read the said novel, nor the comment by dr. rumi.

    I do feel, a woman SHOULD NOT be criticised, for writing what she wants.

    ‘Freedom to speech/write’ is for everybody to rightully use it as per their wish, as long as they dont poke their nose into others business.

    Reviewing on the presentation or eloquence is different. COMMENTING on usage of any themes or words IS not appreciable.

  24. # 24 Salma - Links « Snap Judgment Says:

    [...] தமிழ் வலைப்பதிவு » ஓர் ஆணாதிக்க ஆங்கி… உருப்படாதது: ஒற்றை தராசும், ஒரிரு வார்த்தைகளும் அலைஞனின் அலைகள்: கருப்பணி: மதத்தில் மற/றைந்தது மாமதயானை [...]

  25. # 25 சூடான இடுகைகள் - அந்தக் காலம் « Snap Judgment Says:

    [...] 2. மதி கந்தசாமி :: ஓர் ஆணாதிக்க ஆங்கிலப் பேராசிரியர் என… [...]

Leave a Reply


  • You Avatar
    -


Creative Commons License