Archive for August 28th, 2005

ஓர் ஆணாதிக்க ஆங்கிலப் பேராசிரியர் என்ன எழுதுவார்?..08.28.05

நாகூர் ரூமியின் வலைப்பதிவில் அவர், சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவலைப்பற்றிய விமர்சனம் என்ற ஒன்றை வி்ஷமாக உமிழ்ந்திருக்கிறார். நான் சல்மாவின் இந்த நாவலைப்படிக்கவில்லை. சல்மாவின் ஓரிரு கவிதைகள் எப்போதோ ஒரு பொழுதில் என்னை ஈர்த்ததுண்டு. அவரது பேட்டிகளில் ஓரிரு வரிகளை உண்மையாக உணர்ந்ததுண்டு. அதற்கும் அப்பால், சல்மாவின் மீது ஒரு பிடித்தம் இருந்ததில்லை.

சல்மாவின் கவிதைமொழி குறித்து எத்தனையோ பேர் எத்தனையோ தடவை என்னென்னமோ எழுதிக் குவித்துள்ளார்கள். சல்மாவின் கவிதைமொழி என்னை ஈர்க்காத அதே வேளையில், சல்மா என்னமாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்று தீர்மானிக்க முயலும் ஆட்களை கேலியாக வேடிக்கை பார்த்திருக்கிறேன். கவிதை பிடித்திருந்தால் பிடித்தது என்றும் பிடிக்கவில்லையென்றால் பிடிக்கவில்லை என்றும் சொல்லிச் செல்வதை விட்டுவிட்டு, அடடா! அதெப்படி இப்படியாக எழுதப்போயிற்று என்று கலாச்சாரக் காவலர் வேடம் பூணுகையில்/பூண எத்தனிகையில் எரிச்சல் வருகிறது!

இன்றைக்கு நாகூர் ரூமி எழுதியதில் பல இடங்களில் அவரது வன்மம் கண்கூடாகத் தெரிந்தது. படிக்கையிலேயே, அவரிடம் பயிலும் மாணாக்கர்களிடம் எத்தகைய எண்ணங்களை விதைக்கிறார் என்றும் யோசித்தேன். திறந்த மனப்பாங்கையும் சகிப்புத்தன்மையையும் ஆசிரியர்கள் தங்களிடம் வளர்த்துக்கொண்டால்தான் நல்லதொரு சமூகத்தை உருவாக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். [இதைப் படித்துக்கொண்டிருக்கும் நண்பரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?]

நாகூர் ரூமியின் பதிவைப் படித்த இரண்டு எண்ணங்கள் தோன்றின. நாவலைப்படிக்க முதலே, ஏன் இதைப் படித்தோம் என்பது முதலாவது. நாகூர் ரூமி ‘ராயர் காப்பி கிளப்பில்’ எழுதிய மடல்களையும் அவரது வலைப்பதிவையும் இதுவரை படித்ததில் விழுந்திருந்த பிம்பம் சரியானதே என்பது இரண்டாவது.

பதிவு நிரம்பவும் நாகூர் ரூமி, தன்னுடைய ஆணாதிக்க மதவாத அபத்தங்களை அள்ளித் தெளித்திருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு தடவை படித்ததில் மூழ்ந்த கோபமே இன்னும் தீரவில்லை. ஆனபடியால், ஒவ்வொரு வரியாக இங்கே எடுத்துக்காட்டி, பேராசிரியர் எங்கே எப்படி அவருடைய வன்மத்தை எழுத்தில் வடித்திருக்கிறார் என்று எழுதப்போவதில்லை. பொடிச்சி ஓரிரு வரிகளை எடுத்து அவருடைய கருத்துகளைக் கூறியிருக்கிறார். எதற்கும் இருக்கட்டும் என்று, அவற்றை நான் இங்கே பதிந்து வைத்திருக்கிறேன். [பொடிச்சி, தன்னுடைய HYPOCRISY பதிவில் இட பரிந்துரைக்கிறேன்.]

இரண்டுநாட்களாக நினைவில் வந்து தொலைத்துக்கொண்டிருக்கும், ‘நாக்கை பிடுங்கிக்கிறாமாதிரி நாலு கேள்வி கேக்கணும்’ என்று நினைக்க வைக்கும் வரிகள் ஏராளம் ஏராளம். ஒரு குறுக்கு வெட்டு எடுத்துக்காட்டு கீழே.

பேராசிரியர் நாகூர் ரூமி எழுதுகிறார்:

“பள்ளிவாசலில் போய் ஆண்களை இடித்துக்கொண்டு தொழவேண்டும். மிக அவசியமான தேவை அதுதான். அதற்காக ஒரு நாவல் எழுதவும் அவர்கள் தயார்.”

இவர் பேராசிரியர்! சீஈஈஈஈ தூஊஊஊஊ…!

Posted in அனைத்து இடுகைகள், கட்டுரைகள்with 25 Comments →

  • You Avatar
    -


Creative Commons License