2006 - தமிழ் வலைப்பதிவர்கள்
எழுதுவதை விட வாசிப்பதை நேசிக்கும் எனக்கு, தமிழ்மணத்தில் நிறையவே தீனி கிடைக்கிறது. புதிய பதிவுகளில், பிடித்த பதிவுகளை அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். ஒவ்வொரு மாதமும் எழுதவேண்டும் என்று நினைப்பதோடு சரி. குறைந்தது இவ்வருடம் பதிய ஆரம்பித்தவர்களில் கவனத்தை ஈர்த்த பதிவர்களை இப்போதாவது குறிப்பிட எண்ணம்.
இதுவரை எழுதிய இடுகைகள்:
http://mathy.kandasamy.net/musings/2005/11/22/293
http://mathy.kandasamy.net/musings/2006/01/20/302
http://mathy.kandasamy.net/musings/2006/04/28/376
http://mathy.kandasamy.net/musings/2006/07/19/471
http://mathy.kandasamy.net/musings/2006/08/31/495
அவ்விடுகைகளிலே குறிப்பிட்ட பதிவுகள்:
அலைகள், பாறைகள், மணல்மேடுகள் - சிறில் அலெக்ஸ் - http://muttom.blogspot.com
மடத்துவாசல் பிள்ளையாரடி - கானா பிரபா - http://kanapraba.blogspot.com
மதுரா - http://tamizhachchikal.blogspot.com
ஜெகத் - http://kaiman-alavu.blogspot.com
வ.ந.கிரிதரன் - http://vngiritharan.blogspot.com
பாம்பாட்டி சித்தன் - http://thaaragai.wordpress.com

இந்த வரிசையிலே, என் கவனத்தை ஈர்த்த புதிய பதிவர்கள் சிலர்..
கார்திக்வேலு - http://intamil.blogspot.com
யாகூ 360-இல் இவருடைய வலைப்பதிவை முதலில் பார்த்தேன். பிறமொழிக்கவிதைகள் மற்றும் ஓவியங்களைப்பற்றித் தன்பாட்டில் எழுதியிருப்பார். ப்ளொக்கர் வலைப்பதிவில் அம்மாதிரி இடுகைகளை எதிர்பார்த்துக்காத்திருக்கிறேன்.
பொன்ஸ் - http://poonspakkangkal.blogspot.com
நான் என்ன சொல்லிவிடப்போகிறேன். ;)
ராஜாவனஜ் - http://vanajaraj.blogspot.com
சரளமான நடையில் சொந்த அனுபவங்களோடு எழுதும் காத்திரமான எழுத்து. எழுத்துப்பிழைகள்தான் ஆங்காங்கே தடுக்கி விழ வைக்கின்றன.
ஜெகத் - http://kaiman-alavu.blogspot.com
இலக்கியம் பற்றியெல்லாம் அதிகம் தெரியாது என்று சொல்லிக்கொண்டே வெளுத்துவாங்கும் பதிவர். இடுகை நீளமாக இருக்கிறது என்று வரும் குரல்களைக் கேட்டு சுருக்கமாக எழுதுகிறேன் என்று தொடங்கிவிடுவாரோ என்று பயமாகவிருக்கிறது.
‘ஊரோடி’ பகீ - http://oorodi.blogspot.com
யாழ்ப்பாணத்திலிருந்து வலைபதியும் தமிழர். பயங்கர இக்கட்டான சூழலிலிருந்து வலைபதிவதன் சுவடே தெரியாதபடி எழுதுபவர். கணினி-ப்ளொக்கர் சம்பந்தமான தொழில்நுட்பக் குறிப்புகளை முயற்சி செய்து, அவற்றைப் பிறருடனும் பகிர்ந்துகொள்ளும் பாங்கு குறிப்பிடத்தக்கது. ஊரோடி என்ற பெயரில் பெருமையாக உணரவைப்பவர்.
வெட்டிப்பயல் - http://vettipaiyal.blogspot.com
சரளமான எழுத்துநடைக்குச் சொந்தக்காரர். சமூக சிந்தனை இவருடைய எழுத்தில் மிளிரும்.
MSV முத்து - http://kuralvalai.blogspot.com
சமீபத்தில் படித்த, பார்த்த, கேட்ட விதயங்களைச் சுவாரசியமாக பதிபவர்.
செந்தழல் ரவி - http://tvpravi.blogspot.com
சுவாரசியமான எழுத்துநடைக்குச் சொந்தக்காரர். இடுகைகளோடு ஒன்ற வைத்துவிடுபவர். ‘கோழி பிடித்த கதை’யிலிருந்து நண்பனைத் தேடும் இடுகைவரை இரசிக்க வைப்பவர். எல்லாவற்றையும்விட கவனத்தைக் கவர்ந்தது இவருடைய ‘வேலைவாய்ப்புப் பதிவு’.
ஆராதனா - http://aaradhana-s.blogspot.com
திருச்சியிலிருந்து பதிவெழுதும் டாக்டர். குறைவாக எழுதியிருந்தாலும் சுவாரசியமாக பல அவசியமான விதயங்களை எழுதியிருக்கிறார்.
எஸ்கே - http://kasadara.blogspot.com
மருத்துவம் சம்பந்தமான தொடர்களை எழுதும் மருத்துவர்
மங்கை - http://manggai.blogspot.com
டெல்லியிலிருந்து சமூக அக்கறை சார்ந்து எழுதும் பதிவர்
மு.கார்த்திகேயன் - http://mkarthik.blogspot.com
சொந்த அனுபவங்கள், அரசியல், சுற்றுலா மற்றும் சினிமா என்று பல்வேறு விதயங்களையும் இலாவகமாகக் கையாளும் பதிவர்
வரவனையான் செந்தில் - http://kuttapusky.blogspot.com
‘சொந்த செலவில் சூன்யம்’ என்ற பிரபலமான சொல்லாடலுக்குச் சொந்தக்காரர். தமிழிணையத்துக்கு வெளியிலும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் சொற்றொடர் அது. காத்திரமான எழுத்துக்குச் சொந்தக்காரர், பல சமயங்களில் வெறுமனே பொழுதைக் கழிப்பது வருத்தமாகவிருக்கிறது. ஆயினும் சமீப காலமாக குறிப்பிடத்தகுந்த இடுகைகளை எழுதுகிறார்.
ந்¢ர்மல் - http://sinthipoma.blogspot.com
மனதைத் தைக்கும் கவிதைகள் எழுதுபவர். அதைவிட முக்கியம், தொழில்நுட்ப, விஞ்ஞான மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளை எளிமையான மொழியில் எழுதுகிறார்.
தெக்கிக்காட்டான்/இயற்கை நேசி - http://kurangumudi.blogspot.com
துறைசார் பதிவுகளில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய பதிவு. மிகவும் அத்தியாவசியமான உள்ளடக்கம்.
தமிழ்நதி - http://tamilnathy.blogspot.com
இவரது கவிதைகளைவிட கதைகளும் கட்டுரைகளுமே என்னை அதிகம் கவருகின்றன. பல கவிதைகளில் மொழி இன்னும் இறுக்கமாக இருக்கலாமோ என்று நினைத்திருக்கிறேன்.
ரவி்ஷங்கர் - http://tamilwiktionary.blogspot.com
தொழில்நுட்ப விதயங்களை எளிய தமிழில் வழங்குபவர்
ஒரு பொடியன் - http://orupodiyan.blogspot.com
இசை, இலக்கியம், சமூகம், அரசியல் என்று பல்வேறு விதயங்களைச் சுவாரசியமாக எழுதுபவர். எழுதிய ஒவ்வொரு இடுகையும் குறிப்பிடத்தகுந்தவை.
புதுச்சேரி சுகுமாரன் - http://kosukumaran.blogspot.com
இணையத்துக்குத்தான் புதியவர்.
அசுரன் - http://poar-parai.blogspot.com
ஆணித்தரமான கருத்துகளை தெளிவான மொழியில் எழுதுபவர்
திரு - http://aalamaram.blogspot.com
பெண்கள், சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள், ஈழத்தமிழர்கள் என்று பலதரப்பட்ட மக்களின் மீதுள்ள அக்கறை வெளிப்படும் இடுகைகளை எழுதுபவர். எழுதுவதோடு நின்றுவிடாமல் செயலிலும் இறங்குபவர்.
திராவிடத் தமிழர்கள் - http://dravidatamils.blogspot.com
இவ்வருடம் தொடங்கிய கூட்டுப்பதிவுகளில் சுவாரசியமாக எதிர்நோக்க வைத்த பதிவு. ஆயினும், தொடக்கத்தில் இருந்த வேகத்தை இப்போது காணக்கிடைக்கவில்லை.
வஜ்ரா சங்கர் - http://sankarmanicka.blogspot.com
எடுத்துக்கொண்ட விதயத்தைத் தெளிவாக, மக்களின் கவனத்தில் இருக்கும்படி எழுதுபவர்.
ஆதிரை - http://ullal.blogspot.com
சமூக அக்கறை மிகுந்த பதிவர்.
தங்கவேல் - http://puliamaram.blogspot.com
சரளமான எழுத்துக்குச் சொந்தக்காரர்.
சின்னக்குட்டி - http://sinnakuddy.blogspot.com
ஈழத்துப் பழைய விதயங்களை இவரது பதிவிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
மலைநாடான் - http://malainaadaan.blogspot.com
சுவாரசியமான நடைக்குச் சொந்தக்காரர்.
லக்கிலூக் - http://madippakkam.blogspot.com
சரளமான சுவாரசியமான நடைக்குச் சொந்தக்காரர். தன்னுடைய பெயர்க்காரணத்தைச் சுவாரசியமாகச் சொன்னவர். கொஞ்சம் அலப்பறைதான். :) இப்போது காத்திரமாக எழுதிக்கொண்டிருக்கிறார் - வாட், வானொலி என்று..
வானம்பாடி கலீஸ் - http://pxcalis.blogspot.com
யாழ்ப்பாணத்திலிருந்து வலைபதியும் இன்னொருவர்.
வீரமணி - http://killukillupai.blogspot.com
அருமையான கவிதைகளுக்குச் சொந்தக்காரர். ஆடிக்கொருதடவை அமாவாசைக்கொருதடவை என்று பதிபவர்.
அகிலன் - http://agiilankanavu.blogspot.com
கிளிநொச்சியிலிருந்து பதிந்துகொண்டிருந்தவர் இப்போதிருப்பது சென்னையில். நவம்பர் மாதம் நடந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பின் நாயகன். இடுகைகளென்று பார்த்தால் வானொலி பற்றி எழுத இடுகை இன்னமும் நினைவிலிருக்கிறது.
மா.சிவகுமார் - http://masivakumar.blogspot.com
‘zha’ கணினிக் காரர். அற்புதமான எழுத்துக்கும் சிந்தனைக்கும் சொந்தக்காரர். சூரியனுக்கு டார்ச் அடிக்கிற வேலை பார்க்க விரும்பாததால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். :)
என் பார்வையில் பட்ட, கவனத்தை ஈர்த்த பதிவர்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். யாரையாவது விட்டிருப்பதாக நினைத்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள்.


December 19th, 2006 at 3:23 am
பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்துவைத்திருக்கிறீர்கள். நன்றி.
December 19th, 2006 at 4:34 am
நீங்கள் பரிந்துரைத்த புதிய வலைப்பதிவர்களின் பதிவுகள் ஒன்ரையும் விடாது படிப்பவன் நான்.
December 19th, 2006 at 9:39 am
பயனுள்ள பதிவு, மதி அவர்களே!
கானா பிரபா சொன்னது போல அனேகமாக அனைத்தும் நானும் படிப்பவையே!
ஒரே ஒரு சிறு திருத்தம்!
நான் புள்ளி வைக்காத எஸ்கே !!
புள்ளி வைத்த மூத்த பதிவர் ஒருவர் இதே பெயரில் இருப்பது முன்னமேயே தெரியாமல் போனதால் ஏற்பட்ட குழப்பம்!
மிக்க நன்றி, என்னையும் சேர்த்ததற்கு![புள்ளி இன்றி!]
December 19th, 2006 at 10:02 am
ஆமா நானும் நல்லா எழுதிறேனா?
நன்றி மதி அக்கா.
December 19th, 2006 at 10:47 am
மதி,
நிறைய புதிய பதிவர்களின் அறிமுகத்திற்கு நன்றி :)
December 19th, 2006 at 10:59 am
//நான் என்ன சொல்லிவிடப்போகிறேன். ;)//
ஒன்னும் சொல்லாம இருந்தாலே, ஹி ஹி.. நிம்மதி :)
December 19th, 2006 at 12:32 pm
இந்த சின்னக்குட்டியின் வலைப்பதிவையும் உங்கள் தெரிவுகளில் ஒன்றாய் தெரிவு செய்ததுக்கு மகிழ்ச்சி உடன் நன்றிகள்
December 19th, 2006 at 4:05 pm
எஸ்கே: மாற்றிவிட்டேன். :)
பாரதி, கானா.பிரபா, ஊரோடி பகி, விக்கி, பொன்ஸ், சின்னக்குட்டி: நன்றி!
December 20th, 2006 at 2:30 am
Thanks Madhi. Thanks for the recognition and the recommendations.
December 20th, 2006 at 6:19 am
சரளமான எழுத்து நடைக்குச் சொந்தக்காரர் என்று என்னை வர்ணித்ததற்கு நன்றி மதி கந்தசாமி அவர்களே. ஆயினும், சில விளக்கங்களை நான் அளிக்க வேண்டியுள்ளது. முதலாவதாக என் பெயர்- தங்கவேல்; தங்கவேலு அல்ல. இது பொதுவாக பலரும் செய்யும் தவறுதான். ‘டணால்’ தங்கவேலுவின் பாப்புலாரிட்டி காரணமாக இவ்வாறு நடந்துவிடுகிறது என எண்ணுகிறேன்.
இரண்டாவது, நான், நீங்கள் குறிப்பிட்டமாதிரி இந்த ஆண்டில் வலை பதியவந்தவனல்ல. 2005 அக்டோபரிலிருந்து தமிழ்ப் பதிவுகள் எழுதி வருகிறேன். பீட்டாவிற்கு மாறியதால், இந்த வருடத்தில், தமிழ்மணத்தில் மீண்டும் என் பதிவை இணைக்க வேண்டிவந்தது.
மூன்றாவது, நான் தொடர்ந்து (!?) இடுகைகள் இடும் என்னுடைய வலைப்பதிவின் முகவரி (உரல்): http://puliamaram.blogspot.com; நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் http://puliyamaram.blogspot.com அல்ல. (நடுவில் ‘y’ கிடையாது). அந்த முகவரி - நான் பீட்டாவில் அவதியுற்றபோது புதிதாகத் தொடங்கியது. தற்போது அதில் ஏதும் இடுகைகள் இடுவதில்லை. என் பழைய உரலிலேயே இடுகிறேன். இவ்விளக்கம் உங்கள் கவனத்திற்காக. நன்றி.
December 20th, 2006 at 9:57 am
தங்கவேல்: தவறுகளுக்கு மன்னிக்கவேண்டும். முதலில் பெயர், நீங்கள் சொன்னதுபோல ‘டணால்’-இன் தாக்கந்தான். :(
அடுத்தது சுட்டி: இந்த இடுகை எழுதும்போது சுட்டி தேடுக் களைப்போய்விட்டேன். பழைய இடுகைகளைக் காணவில்லையே, பீட்டாவிற்கு மாறும்போது தொலைந்துவிட்டதோ என்று யோசித்துக்கொண்டுதான் போட்டேன். தொலையவில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.
பிழைகளைத் திருத்திவிட்டேன். :)
முத்து: நன்றி.
December 20th, 2006 at 2:50 pm
[...] தமிழில் புதிதாக எழுத வந்தவர்களில், தன்னை மிகவும் கவர்ந்த வலைப்பதிவர்களைப் பற்றி எழுதுகிறார், மதி கந்தசாமி, அழகான ஓரிரு வரிக் குறிப்புகளுடன்.. [...]
December 20th, 2006 at 4:30 pm
//மலைநாடான் - சுவாரசியமான நடைக்குச் சொந்தக்காரர்.//
நெசமாலுங்களா..? :)
நன்றி!
December 20th, 2006 at 4:32 pm
பாரிஸ் - யோகனை விட்டுட்டடீங்க மதி!
December 20th, 2006 at 4:46 pm
பொன்ஸ்
செந்தழல் ரவி
எஸ்கே
மங்கை
வரவனையான் செந்தில்
மலைநாடான்
லக்கிலூக்
மதி, உண்மையாகத் தான் சொல்லுறீங்களா? இவர்கள் எல்லாம் புதிய முகங்களா? நம்ப முடியவில்லை.இவர்கள் எல்லாம் எழுதுவதைப் பார்த்தால், பல கால எழுத்து அனுபவம் உள்ளவர்கள் மாதிரிக் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான திறமைசாலிகளின் பதிவுகளை வாசிக்க கிடைத்தது என் யோகம்.
இவர்களின் பதிவுகள் மூலம் நான் கற்றுக் கொண்டது ஏராளம். அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
அதுவும் தமிழ்மணத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான மதியிடம் இருந்து பாராட்டுப் பெறுவதென்றால் சும்மாவா? குத்து வாங்கினாலும் மோதிரக் கையால் குத்து வாங்கவேணும் எண்ட மாதிரி:)
December 20th, 2006 at 4:48 pm
//வெட்டிப்பயல் - http://vettipaiyal.blogspot.com
சரளமான எழுத்துநடைக்குச் சொந்தக்காரர். சமூக சிந்தனை இவருடைய எழுத்தில் மிளிரும்.//
நம்ம வலைப்பதிவையும் போட்டு பெருமைப்படுத்திட்டீங்க. அதுவும் சமூக சிந்தனைனு சொன்னது ரொம்ப மகிழ்ச்சியை அளிக்கிறது.
December 20th, 2006 at 5:11 pm
/* என் பார்வையில் பட்ட, கவனத்தை ஈர்த்த பதிவர்களைப்பற்றி எழுதியிருக்கிறேன். யாரையாவது விட்டிருப்பதாக நினைத்தால் பின்னூட்டத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள் */
ஓம், மதி முக்கியமான ஒரு புதிய பதிவரை விட்டுவிட்டீங்கள்.
வேறை ஆர்? நான் தான்! என்னை விட்டு விட்டீங்கள் :)) சும்மா!!
எம் தொழில் வாசிப்பதும் , பின்னூட்டம் எழுதுவதுமே!
நன்றி.
December 20th, 2006 at 6:55 pm
சூப்பர் லிஸ்ட்…. அப்டியே Blog Roll அ போட வேண்டிய லிஸ்ட்…
அடுத்த வருஷமும் இதே மாதிரி பட்டியல் போடுவீங்கள்ள…. ஹி…ஹி…
December 20th, 2006 at 10:25 pm
நன்றி
December 20th, 2006 at 10:37 pm
மதி,
தரமான தொகுப்பு !
பாராட்டுக்கள்
December 20th, 2006 at 11:54 pm
மலைநாடான்: வலைப்பதிவுகளுக்குத்தான் நீங்கள் புதியவரென்பதை உங்களுடைய இடுகைகள் சொல்கிறன. அநியாயத்துக்கு அடக்கவொடுக்கமா இருக்கிங்கப்பா! :)
யோகன்-பாரீஸ் பற்றிக் குறிப்பிட்டதற்கு நன்றி மலைநாடான். அவரை நல்லதொரு பின்னூட்டக்கராராகத்தான் நினைவிருக்கிறது. அது என்னுடைய தவறாகவும் இருக்கலாம். நினைவூட்டியதற்கு நன்றி. நேரங்கிடைக்கும்போது அவருடைய பதிவைப் படிக்கவேண்டும்.
வெற்றி: நல்லாயிருக்கப்பு. ;)
வெட்டிப்பயல், ஜி, நிர்மல் & கோவி.கண்ணன்: நன்றி!
December 21st, 2006 at 6:39 am
nan eppadi eludugirane
December 21st, 2006 at 11:19 am
pazhaiya bloggers paththi solla maatteengalaa?
December 26th, 2006 at 5:02 am
நன்றி மதி…நம்ப முடியவில்லை
‘என்னையும்’ பாராட்டியதற்கு நன்றி
இது என் புத்தாண்டு பரிசாக ஏற்றுக்கொள்கிறேன்…
December 28th, 2006 at 4:40 am
நான் அலப்பறையா?
நற….. நற… நற….