திரைப்பார்வை
	<language>en</language>
சினிமா, தமிழ் சினிமா: ஒரு தொடரோட்டம்
		<description>சினிமாவைப்பற்றிய தன் எண்ணங்களை அருமையாக எழுதிய நாகார்ஜுனனுக்கும் அதைத் தொடர் விளையாட்டாக்கிய பிரகாஷுக்கும், என்னையும் இதில் இழுத்துவிட்ட பரத்துக்கும் நன்றி!
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?
எந்த வயதில் என்பது தெரியாது. மிகவும் சிறிய வயதில் கொழும்பில் திரையரங்கில் படம் பார்க்கப்போவோம் என்று வீட்டில் சொல்லித்தெரியும். கூடவே, பிறகு பிறகு தொலைக்காட்சியில் பார்க்கும் பாடற்காட்சிகள் ஏதேனும் முன்பு பார்த்ததுபோல இருக்கும். ...</description>
Salinui chueok [Memories of Murder] (2003)
Se7en படத்தைப்போல இதுவுமொரு தொடர்கொலைகளைப்பற்றிய கொரியத் திரைப்படம். Bong Joon-Ho இயக்கியிருக்கிறார். இப்போது தொலைக்காட்சிகளெங்கும் பரவிக்கிடக்கும் காவல்துறை விசாரணைத்தொடர்களைப்போலவே இந்தப் படமும் சிறுநகரத்து போலீசாரைத் தொடர்கிறதென்றாலும்,  இயக்குநரின் அணுகுமுறை  படத்தை  வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. சின்னச்சின்னக் காட்சிகளினூடாக 80-90களின் கொரிய சமூகத்தை,  அரசாங்கத்தை, காவல்துறையை அறிமுகம் செய்து செல்கிறார். இந்தக் காட்சிகள், இந்தப் படத்தைத் தவறவிடக்கூடாததாக ஆக்குகிறது.  </description>
Riri Shushu no subete [All About Lily Chou-Chou] (2001)
A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை  முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது.  ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல.  படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். </description>
Away from Her (2007)
சில வருடங்களுக்கு முன்பு தோழியொருவரின் பெற்றோர்கள் நாங்கள் வசித்த நகரத்திற்கு வந்திருந்தார்கள். தோழியைப்போலவே  அருமையாகப் பழகக்கூடிய அவர்களை எல்லோருக்கும் பிடித்துப்போய்விட்டது. அன்ரி மட்டும் அவ்வப்போது பேசியதையே ஒரு ஐந்து நிமிடங்களுக்குப்பிறகு திரும்பவும் சொல்வார்.  ஆரம்பத்தில் என்ன செய்வது என்று குழப்பமாக இருந்தது. அன்ரிக்கு அல்செய்மர் நோய் ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது என்றும் அதன்காரணமாக சில சமயங்களில் சொல்வதையே  திரும்பிச் சொல்வார் என்றும் இன்னும் சில சமயங்களில் செய்த ...</description>
பீஜிங்க் ஒலிம்பிக் போட்டி -  ஐந்து குறும்படங்கள்
		<description>பீஜிங்க் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் முன்னெப்போதையும்விட மிகவும் அதிகமாகக் கை வைக்கும் சீன அரசாங்கத்தின்மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன.  அதைப்போலவே,  உலகத்தின் தொழிற்சாலையாக சீனாவை வைத்துக்கொண்டு வாய்கிழியப்பேசும் உலகநாடுகள் மீதும் நிறையவே விமர்சனங்கள் உள்ளன. 
இதெல்லாம் ஒருபக்கமிருக்க,  உலகப் புகழ்பெற்ற ஐந்து இயக்குநர்கள் பீஜிங்க் ஒலிம்பிக் போட்டியை  முன்னிட்டுத் இயக்கிய ஐந்து குறும்படங்களைப் பார்க்கலாம்.  சீன அரசாங்கத்தின் விசேஷ ...</description>
Into the Wild (2007)
சின்ன வயதில் நமக்கிருக்கும் ஆசைகளில் பலதை நாம் வளர வளர மறந்துவிடுகிறோம்.  சில ஆசைகள் நம்மோடே  வருகின்றன.  அதேபோல அந்த வயதுகளில் நாம் மிகவும் முக்கியமாகக் கருதிய விதயங்களையெல்லாம்கூட தொலைத்துவிடுகிறோம்.  இது பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தும்.  எனக்கும்கூட.  ஆனால், ஒருசிலர் தாங்கள் விரும்பியதைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். அதேபோல நமக்கு இருந்த ideologyக்களையும் பலர் கைவிட்டுவிட மிகச்சிலர் அவற்றைச் செயற்படுத்துகிறார்கள்.
இன்றைக்குப் பார்த்துவிட்டு வந்த Into ...</description>
Who’s Afraid of Virginia Woolf (1966)
போன வாரம், மார்க்குவெஸ்ஸின் 'Love in the time of Cholera' திரைப்படமாக வெளியாகியது. மார்க்குவெஸ்ஸின் கதை, படமாக்கப்படுகிறது என்ற செய்தி கேள்விப்பட்டதும் முதல் ஏமாற்றம் படம் ஆங்கிலம் பேசும் என்பது. அடுத்தடுத்த ஏமாற்றங்கள் திரைக்கதை அமைப்பது தென்னாப்பிரிக்கரொருவர் என்பதும் இயக்குநர் ஹாரிபொட்டர் படங்களிலொன்றை இயக்கிய ஆங்கிலேயர் Mike Newell என்பது. முக்கியமான வேடமொன்றில் Javier Bardem நடிப்பதொன்றுதான் கொஞ்சம் சுவாரசியமானதொன்றாக இருந்தது. எப்படியோ, படம் கடைசியாக போன வெள்ளியன்று ...</description>
Chaos (2001)
சில திரைப்படங்கள் முற்றிலும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன. மிகவும் சுவாரசியமாக, ஒன்றரை மணி நேரத்தைச் சுவாரசியமாகக் கவலைகளை மறந்து இரசிப்பதற்கு உதவுகின்றன. எந்தெந்தத் திரைப்படங்கள் யாராராருக்கு பொழுதுபோக்காக அமைகின்றன என்பது அவரவரைப் பொறுத்தது. சிலருக்கு அடிதடியென்றால் சிலருக்கு காதல் படங்கள் இன்னும் சிலருக்கு பேய்ப்படங்கள்! 
இன்னும் சில, வாழ்க்கையை ஆராய்பவை. பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் படங்களைவிட இந்தப் படங்களுக்கு இரசிகர்கள் குறைவு. தேடிப்பிடித்துப் பார்ப்பவர்களும் குறைவு. பார்வையாளர்கள் ஒருபுறம் இருக்க, வாழ்க்கையைப் ...</description>
Conversation(s) with other women (2005)
2005இல் இந்தப் படம் வெளியானபோது மேலோட்டமாக விமர்சனம் படித்த நினைவிருக்கிறது. ஆரோன் எக்கார்ட் நடித்த படம் என்ற அளவிலேதான் இந்தப் படத்தின்மீது கவனம் இருந்தது. விமர்சனங்களில் இந்தப் படம் எடுக்கப்பட்ட விதம் பற்றியும் சிலாகித்திருந்தார்கள். வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டது அப்படியிப்படியென்று.
உண்மைதான்!
வசனங்களுக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து 99.9% நேரம் இரண்டு நடிகர்கள் மட்டுமே திரையில் வரும்படியாக அமைக்கப்பட்ட படம். அதுவும் திரை இரண்டாகப்பிரிக்கப்பட்டு இருவரின் கண்ணோட்டத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் குழப்பமாகவிருந்து ...</description>
Elephant (2003)
இந்தப் படத்தை எடுத்தற்கு முக்கிய காரணம் Gus Van Sant என்ற பெயர்தான். எந்தவொரு முன்முடிவுகளுமில்லாமல் இன்று வானம் மப்பாக இருக்கும் பொழுதில், கனேடிய நன்றிநவிலல் விடுமுறையன்று கொஞ்ச நேரத்துக்கு முந்திப் பார்க்கத்தொடங்கினேன். அட்டையின் பின்பக்கம் எழுதியிருந்ததைப் படித்ததோடு சரி. அட்டையில் எழுதியிருந்தது உங்களுக்காக.
Winner of Golden Palm winner at the 2003 Cannes Film Festival, Gus Van Sant's (Good Will Hunting Finding Forrester) ...</description>