Chihwaseon [Painted Fire] (2002)

கொரிய ஓவியர் Jang Seung-upஐப் பற்றிய படம் இது. Jang Seung-upஇன் புனைபெயர் Oh-won. Won ஓவியர் மூவரில் ஒருவர் இவர்.
பொதுவாகவே வாழ்க்கை வரலாறுகளைப் படம் பிடிப்பது கஷ்டமான விதயம். அதிலும் ஓவியர்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. படைப்பாளியின் குணாதிசயங்களைக் கொஞ்சமாவது காட்டுவதற்கு நிறைய மினக்கெட வேண்டும். சொல்லும் விதயங்கள் சுவாரசியமாகவும் இருக்க வேண்டும். அவ்வகையில் எல்லாவித எதிர்பார்ப்புகளையும் ‘சிவாஹ்சியோன்’ பூர்த்தி செய்கிறது. படத்தை இயக்கியவர் Kwon-taek Im. சிஹ்வாசியோன், இவருடைய தொண்ணூற்றி ஐந்தாவது படமாம். கான் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் பரிசைப் பெற்ற படம்.

சாதாரண குடும்பத்தில் பிறந்து அனாதையான Jang Seung-up, தெருவில் அடி வாங்கிக்கொண்டிருக்கும்போது பிரபு ஒருவரால் காப்பாற்றப்படுகிறான். Jang Seung-up வரைந்த ஓவியத்தைக் கண்ட அந்தப்பிரபு, அவனிடம் அசாதரணமான திறமையிருப்பதை உணர்ந்து கொள்கிறார். அவருடைய ஊக்குவிப்பால் குரு ஒருவரிடம் சேர்ந்து முறையாக ஓவியர் வரையக் கற்றுக்கொள்கிறான். அந்த குரு, அவர் இறப்பதற்கு முன்பு கொஞ்சம் இலக்கியத்தையும் கற்றுக்கொடுத்துவிட்டிருந்தார். ஓவியர் வரைவதற்கு இலக்கியமும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமென்பது அவரின் கருத்தாக இருந்தது. பிரபு, இம்முறை Jang Seung-upஐ இன்னுமொரு இடத்தில் வேலையாளாகச் சேர்த்துவிடுகிறார்.
இப்படி ஒவ்வொரு இடமாக மாறி மாறி வித்தையைக் கற்றுக்கொள்ளும் Jang Seung-up கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமடைகிறான். கூடவே, குடித்திருந்தாலோ, கலவிக்கு முன்னும் பின்னுமோ அல்லது மகிழ்ச்சியாக இருக்கும்போதோதான் தன்னால் அற்புதமான படைப்புகளை உருவாக்க முடிகிறது என்பதை Jang Seung-up உணர்ந்திருந்தான்.

இயற்கைக் காட்சிகளை அதே உயிர்ப்புடன் Jang Seung-up வரைந்தார். அந்த ஓவியங்கள் பலராலும் பாராட்டப்பட்டன. அந்த நேரத்தில் அவனை முதலில் காப்பாற்றிய பிரபு, பிறர் எதிர்பார்ப்பதுபோலவே படம் வரைய வேண்டாம் என்று எச்சரிக்கிறார். கொஞ்ச நாள் எதுவுமே வரையாமல் இருக்கிறார் Jang Seung-up.
ஓவியம் வரைவது போன்ற மென்மையான கலையொன்றில் தேர்ச்சி பெற்றிருந்தவராயிருந்தாலும் ஒரு அதிரடியான வாழ்க்கையையே Jang Seung-up வாழ்ந்துகொண்டிருந்தார்.
படத்தின் இயக்குநர் Kwon-taek Im., Jang Seung-up வாழ்க்கையை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து காலவோட்டத்தில் Jang Seung-upயின் வாழ்க்கை ஓடுவதை சிரத்தையாக விரிவாக காட்டாமல் தேவையான அளவு காட்டுகிறார். இது சில சமயம் குழப்பினாலும் படத்தை இன்னமும் இரசித்துப் பார்க்க வைக்கிறது. வழமையான வாழ்க்கை வரலாற்றுப் படங்களிலிருந்து வித்தியாசப்ட்டுத்திக் காட்டுகிறது.

Jang Seung-upஆக நடித்திருப்பது Old-Boy படத்தில் நடித்த Min-sik Choi. அடுத்தடுத்த வருடங்களில் கான் திரைப்பட விழாவில் கலந்து கொண்டு பரிசும் (Chihwaseon - சிறந்த இயக்குநர் விருது, OldBoy - சிறந்த திரைப்படத்துக்கான விருது). 2003ம் வருடம் கான் திரைப்பட விழாவில் ஜூரித் தலைவராக டாரண்டீனோ இருந்தபடியால் OldBoy படத்துக்கு விருது கிடைத்தது என்றும் பலர் சொல்கிறார்கள். ஆனால், OldBoy மிகவும் சுவாரசியமான படங்களில் ஒன்று. தொடக்கத்திலிருந்தே விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லை. மனதை மிகவும் பாதித்த கூறுகள் OldBoy-இன் கதையில் இருக்கின்றன.
OldBoyக்கும் Chihwaseonக்கும் எந்தவிதமான ஒற்றுமைகளும் இல்லை. வித்தையில் கர்வம் கொண்ட அதேவேளையில் சுயநம்பிக்கை குறைந்தவனாகவும், வாழ்க்கையை அதிரடியாக எதிர்கொள்பவனாகவும் Oh-wonஐ அருமையாகச் சித்தரித்திருக்கிறார் Min-sik Choi.
படத்தில் Oh-won வரையும் ஒவ்வொரு காட்சியும் அவருடைய ஓவியங்களுக்கு அடிப்படையாக அமைந்த இயற்கைக் காட்சிகளும் கவிதை போல அமைந்திருந்தன. Oh-won வரையும் ஒவ்வொரு ஓவியத்தையும் அவருடைய தோளுக்குப்பின்னாலிருந்து பார்ப்பது போன்ற உணர்வு.
படத்தின் முக்கியமான இடங்களில் கொரியாவின் பாரம்பரிய இசையும் பயன்படுத்தப்பட்டிருந்தன.
ஓவியங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.











A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (