Salinui chueok [Memories of Murder] (2003)
Se7en படத்தைப்போல இதுவுமொரு தொடர்கொலைகளைப்பற்றிய கொரியத் திரைப்படம். Bong Joon-Ho இயக்கியிருக்கிறார். இப்போது தொலைக்காட்சிகளெங்கும் பரவிக்கிடக்கும் காவல்துறை விசாரணைத்தொடர்களைப்போலவே இந்தப் படமும் சிறுநகரத்து போலீசாரைத் தொடர்கிறதென்றாலும், இயக்குநரின் அணுகுமுறை படத்தை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. சின்னச்சின்னக் காட்சிகளினூடாக 80-90களின் கொரிய சமூகத்தை, அரசாங்கத்தை, காவல்துறையை அறிமுகம் செய்து செல்கிறார். இந்தக் காட்சிகள், இந்தப் படத்தைத் தவறவிடக்கூடாததாக ஆக்குகிறது.



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (