February 13, 2008

பீஜிங்க் ஒலிம்பிக் போட்டி - ஐந்து குறும்படங்கள்

Category: Uncategorized

பீஜிங்க் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு மக்களின் அடிப்படை உரிமைகளில் முன்னெப்போதையும்விட மிகவும் அதிகமாகக் கை வைக்கும் சீன அரசாங்கத்தின்மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. அதைப்போலவே, உலகத்தின் தொழிற்சாலையாக சீனாவை வைத்துக்கொண்டு வாய்கிழியப்பேசும் உலகநாடுகள் மீதும் நிறையவே விமர்சனங்கள் உள்ளன.

இதெல்லாம் ஒருபக்கமிருக்க, உலகப் புகழ்பெற்ற ஐந்து இயக்குநர்கள் பீஜிங்க் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டுத் இயக்கிய ஐந்து குறும்படங்களைப் பார்க்கலாம். சீன அரசாங்கத்தின் விசேஷ அழைப்பில் இந்த இயக்குநர்கள் இப்படங்களை இயக்கியிருக்கிறார்கள்.

Giuseppe Tornatore:

இத்தாலியைச் சேர்ந்த கிசெப்பெ டொர்னாடோர். வெறுமனே பெயரைச்சொன்னால் தெரியாது. சினிமா பாரடைசோவின் இயக்குநர் என்று சொன்னால் பரவலாகத் தெரியும். லெஜெண்ட் ஒஃப் 1900, மலெனா போன்ற படங்களை எடுத்தவர். 2007 ஆஸ்கர் விருதுவிழாவின்போது கடந்த ஐம்பது வருடங்களில் விருது கொடுக்கப்பட்ட உலக சினிமாக்களைத் தொகுத்து ஐந்து நிமிடங்கள் ஓடும் குறும்படமொன்றையும் இவர் தொகுத்தார். படம் இங்கே

பீஜிங்க் ஒலிம்பிக் பற்றி இவர்எடுத்த படம் ஒரு சிறிய கதையாக விரிகிறது.


Patrice Leconte:

பிரான்சைச் சேர்ந்த பார்ட்ரிஸ் லெகொன்டேவை நினைத்தால் உடனேயே நினைவுக்கு வருவது இவருடைய ‘Widow of St. Pierre’உம் ‘The Man on the Train’உம்தான். காட்சியமைப்புகளில் மிகுந்த கவனம் செலுத்தும் இவர், இந்தக் குறும்படத்தையும் அப்படித்தான் எடுத்திருக்கிறார்.


Majid Majidi

சிறுவர்களைவைத்துப் படமெடுப்பதில் ஈரானியர்களை மிஞ்ச ஆட்களில்லையென்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார் மஜித் மஜிதி. இவருடைய ‘The Color of Paradise மற்றும் The Children of Heaven படங்களை நினைவுபடுத்துகிறது இந்தக் குறும்படம்.


Daryl Goodrich:

விளையாட்டு மற்றும் விளம்பரப்படங்களை இயக்கும் டாரில் குட்ரிச், 2012ம் ஒலிம்பிக்கிற்காக லண்டன் போட்டியிட்டபோது இரண்டு படங்களை எடுத்துக்கொடுத்திருக்கிறார். இதனால்தான், உலகப்புகழ்பெற்ற இயக்குநர்களோடு இவரையும் தேர்வு செய்திருக்கிறார்கள். சீனாவிற்கும் ஒலிம்பிக் போட்டிக்குமான உறவையும் விளையாட்டு வீரர்களையும் வைத்து உத்வேகம் கொடுக்கக்கூடிய குறும்படமொன்றை இயக்கியிருக்கிறார்.


Andrew Lau:

ஹொங்கொங்கைச் சேர்ந்த ஆண்ட்ரூ லௌவின் ‘Infernal affairs’ஐத்தான் மார்ட்டின் ஸ்கொர்செசி The Departedஆக எடுத்தார். ஸ்கொர்செசியின் எல்லாப்படங்களையும் விட்டுவிட்டு வேறொருவரின் படத்தை அடிப்படையாக வைத்து எடுத்ததற்கு ஆஸ்கர் விருது கொடுத்த கொடுமை இப்போதும் உறுத்துகிறது. சரிவிடுங்க. அதிரடிப்படங்களை எடுத்திருக்கும் ஆண்ட்ரூ லௌ சீனத்து உணவுவகைகளை முன்னிறுத்தி படமெடுத்திருக்கிறார். பெரிய எதிர்பார்ப்புகளுடன் பார்க்கத்தொடங்கியதாலோ என்னவோ பெரிதாக ஈர்க்கவில்லை.


3 Comments »

  1. ம்ம்.. பார்த்துவிட்டு வரேன்..!

    Comment by தென்றல் — February 13, 2008 @ 8:04 pm

  2. மஜித் மஜிதியின் படத்தை இரண்டு முறை பார்த்தேன்..மற்ற படங்கள் பார்க்க பொறுமை இல்லை :)

    Comment by ravishankar — February 24, 2008 @ 4:26 pm

  3. [...] பீஜிங்க் ஒலிம்பிக் போட்டி - ஐந்து குற… :: மதி கந்தசாமி [...]

    Pingback by சாதனைச் செம்மல் சீனா & தியாக ஜோதி ஒலிம்பிக்ஸ் « Snap Judgment — August 16, 2008 @ 12:35 am

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a comment