Into the Wild (2007)

சின்ன வயதில் நமக்கிருக்கும் ஆசைகளில் பலதை நாம் வளர வளர மறந்துவிடுகிறோம். சில ஆசைகள் நம்மோடே வருகின்றன. அதேபோல அந்த வயதுகளில் நாம் மிகவும் முக்கியமாகக் கருதிய விதயங்களையெல்லாம்கூட தொலைத்துவிடுகிறோம். இது பெரும்பான்மையானவர்களுக்குப் பொருந்தும். எனக்கும்கூட. ஆனால், ஒருசிலர் தாங்கள் விரும்பியதைப் பின்தொடர்ந்து செல்கிறார்கள். அதேபோல நமக்கு இருந்த ideologyக்களையும் பலர் கைவிட்டுவிட மிகச்சிலர் அவற்றைச் செயற்படுத்துகிறார்கள்.
இன்றைக்குப் பார்த்துவிட்டு வந்த Into the Wild படம் என்னுடைய ஆசைகள், இயலாமைகள், கோபங்கள் என்று பலவற்றையும் நினைவுபடுத்திப் பார்க்கவைத்தது. நம்மில் பலரும் படத்தின் நாயகன் Chris McCandless என்ற Alexander Supertramp ஐப்போல நினைத்திருப்போம். வாழ்க்கையின் ஓட்டத்தில் அந்த எண்ணங்களும் அடிபட்டுப்போயிருக்கும். மிச்சசொச்சம் சிலரிடம் ஒட்டிக்கொண்டிருந்தாலும் அவற்றை அலெக்ஸ் அளவிற்கு நிறைவேற்றுவோமாவென்று தெரியாது.
பணக்காரக் குடும்பத்தில் பிறந்து கல்லூரிப்படிப்பையும் நல்லபடியாக முடித்து அடுத்து வக்கீல் படிப்புப் படிக்க இருக்கும் இளைஞன் கிரிஸ். பட்டமளிப்பு விழாவிற்கு பெற்றோரும் தங்கையும் வந்துவிட்டுப் போன சில வாரங்களில் கிறிஸ், எஞ்சியிருந்த அவனது சேமிப்பை தானமாகக் கொடுத்துவிட்டு அவனுடைய பழைய காரில் பணப்படுகிறான். அரிசோனாவை அடைந்ததும் காரையும் அப்படியே விட்டுவிட்டு கையில் இருந்த டாலர் நோட்டுகளை எரித்துவிட்டு சகல அடையாளங்களையும் துறந்துவிட்டு நாடோடியாகக் கண்போன போக்கில் போகிறான்.
வடஅமெரிக்காவின் பல பகுதிகளையும் பலதரப்பட்ட மக்களின் உதவியுடன் பார்க்கிறான். அவனுடைய கடைசிஇலக்கு அலாஸ்காவிற்குப் போவது. ஒரு விவசாயி, அலாஸ்கா-அலாஸ்காவிற்குப் போகிறானா அல்லது நகர்ப்புற அலாஸ்காவிற்குப் போகப்போகிறானா என்று கேட்கிறார். இயற்கையின் கட்டுப்பாட்டிலிருக்கும் அலாஸ்கா-அலாஸ்காவிற்குப்போகப்போவதாக அலெக்ஸ் பதில்சொல்கிறான்.
படம் பார்த்து சில மணித்தியாலங்களே ஆகியிருப்பதால் இன்னமும் முழுக்க உள்வாங்கிமுடியவில்லை. அப்படி உள்வாங்கியபிறகு(முடிந்தளவு) எழுதினாலும் படத்தை எந்தளவு விவரிக்கமுடியும் என்பது பெரிய கேள்வி. பொழுதுபோக்கிறாக எடுக்கப்படும் படங்களைப்பற்றிப்பேசுவதற்கு அதிகம் மெனக்கெடத்தேவையில்லை. ஆனால், இதுபோன்ற சிந்தனையைத்தூண்டும், நம்மில் ஒரு பகுதியை தட்சணையாகக் கேட்கும் படங்களைப்பற்றிப் பேசுவது கொஞ்சமல்ல நிறையவே கஷ்டம். கூடவே, சில படங்கள் நம்மிடம் தட்சணையாகக் கேட்டு நாம் கொடுக்கும் விதயங்களை பொதுவில் பகிர்ந்துகொள்ள முடியாமலும் இருக்கும். Into the Wild எதுவும் கேட்காமலேயே என்னில் ஒரு பகுதியை கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். என்னைப்போல படம் பார்த்த பிறரும் தம்மில் ஒருபகுதியைக் கொடுத்துவிட்டுவந்திருக்கலாம்.
ஷோன் பென்னை முதன்முதலில் கார்லிட்டோஸ் வேய்யில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நினைக்கிறேன் என்று சொல்வதற்குக் காரணம், அந்தப் படத்தைப் பார்க்க முழுக்காரணமும் ஆல்பச்சீனோ என்பதால். அதற்குப்பிறகு பல வருடங்கள் கழித்து டெட் மான் வோக்கிங் படம் பார்த்தபோது கவனத்தை முழுக்கத் தன் வசம் வைத்துக்கொண்டார். அடுத்தடுத்த வருடங்களில் பார்த்த படங்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டிய நடிகர்என்று சொல்லின. ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைந்த அளவு படங்களே நடித்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் கொடுத்திருக்கும் உழைப்பு கணிசமானது. இந்த மாதிரியான நடிகர்கள் இயக்கும் படங்கள் பலவிதங்களில் முக்கியமானவையாக இருக்கும். எந்தவிதமான கேள்விகளும் இல்லாது முன்னேற்பாடுகள் இல்லாமல் நம்பிக்கையுடன் படம் பார்க்கவைக்கும். சில முறை ஏமாற்றமடைந்திருந்தாலும் இந்தப் போக்கை மாற்றவேண்டுமென்று யோசித்ததில்லை.
உண்மைச்சம்பவமொன்றைப் படமாக்கியிருக்கும் ஷோன் பென், படமெடுப்பதற்குப் பத்து வருடங்கள் காத்திருந்திருக்கிறார். அலெக்ஸ் சந்தித்தவர்களைக் கூடியவரை படத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார்.
(எழுதியவரைக்கும் வலைப்பதிவிலிட உத்தேசம். நாளை தொடரலாம்.)
http://outside.away.com/outside/features/1993/1993_into_the_wild_1.html



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (
DVDலயா பார்த்தீங்க..? இங்க கிடைக்கமாட்டேங்குதே…!
Comment by தென்றல் — February 12, 2008 @ 1:06 am
தென்றல்,
இல்ல. ஒரு repertoire theaterல பார்த்தேன். இன்னும் சில மாதங்களில் டிவிடி வந்திரும்னு நினைக்கிறேன். படம் செப்டம்பர்ல வெளியாகியிருக்கு. நிறையப்பேரை பாருங்க, பாருங்கன்னு தொல்லை பண்ணிட்டிருக்கேன்.
தயவு செய்து எந்த விமர்சனத்தையும் படிக்காமப் பாருங்க.
-மதி
Comment by மதி கந்தசாமி — February 12, 2008 @ 4:38 am
தகவலுக்கு நன்றி, மதி!
/தயவு செய்து எந்த விமர்சனத்தையும் படிக்காமப் பாருங்க.
/
நான் DVDகிடைக்காததால, நூலகத்தில் இருந்து அந்த நாவலை எடுத்து வைச்சிருக்கேன்..
ம்ம்ம்…இப்ப அந்த நாவலை படிக்கிறாதா.. வேண்டாமா
;( ?
Comment by தென்றல் — February 13, 2008 @ 7:16 pm
oh. i just lost what i typed.
பொதுவாக நான் படம் பார்த்திட்டு புத்தகம் படிக்க நினைப்பேன். எழுத்து வலிமையாக இருக்கும்பட்சத்தில் அதன் உலகத்துக்குள் நம்மையும் இழுத்துச்சென்றுவிடும் என்பது என்னுடைய எண்ணம். சமீபத்தில் அந்தமாதிரிப் படித்தது Perfume: Story of a murderer.
நீங்க எப்படி?
-மதி
Comment by மதி கந்தசாமி — February 13, 2008 @ 10:41 pm
helloo mathi
This is one film i was so much looking forward to watch it. I m really disappointed that i have not done it yet. In fact, I was so intrigued n inspired on reading the synopsis of the film long back that i even wrote a post based on that. Hope i get to watch it sometime soon. Though i have been reading your posts for a long time, it is the mention of this particular film that made me want to post a comment here. I ve been introduced to a lot of good cinema through your blog. Keep the good work going!
Comment by sk — March 17, 2008 @ 4:21 am
நேற்றிரவு தான் பார்த்தேன்.. கைநடுங்க அவன் டால்ஸ்டாயின் புத்தகத்தில் எழுதும் வாக்கியமும், எட்டி வெடெரின் இசையும் இன்னமும் ஒலித்துக்கொண்டிருக்கிறது..
I didn’t watch a movie for a while, for almost 6 months. Started off with this one yesterday, after reading your review. Thanks so much for sharing.
Comment by Baraka — July 10, 2008 @ 4:49 am