த ப்ரெஸ்டீஜ் [The Prestige] (2006)

இங்கே க்றிஸ்டோபர் நோலனின் ‘மெமெண்டோ’ படம் பார்த்துப் பிடித்துப்போனவர்கள் இருப்பீர்கள். கஜினி படம் பற்றி நான் இங்கே பேசவில்லை. அதனளவில் பார்த்தால் கஜினியும் நல்ல படந்தான், ஆனால் மெமெண்டோவின் களமே வேறு. இல்லையா?
அந்த மெமெண்டோ ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் என்னைமாதிரி படு ஸ்லோவாக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். இன்னிக்குத்தான் கிறிஸ்டோபர் நோலனின் ‘த ப்ரெஸ்டீஜ்’ படத்தைப் பார்த்தேன். எந்த விமர்சனமும் படிக்காமல் போனபடியால் படத்தை அனுபவித்துப் பார்க்க முடிந்தது. உங்களுக்கும் மெமெண்டோ பிடித்திருந்தால், நீங்களும் வாய்ப்புக்கிடைக்கும்போது ‘த ப்ரெஸ்டீஜ்’ பாருங்க. மிக மிக முக்கியமான விசயம். தயவு செஞ்சு எந்த வி்ஷர்மனத்தையும் படிச்சுத் தொலைக்காதீங்க. நல்லதொரு அனுபவத்துக்கு நான் அத்தாட்சி. இது மெமெண்டோ பிடிச்சிருக்குன்னு சொல்றவங்களுக்கு மட்டுந்தான். புரியலை. வெளக்குங்க. வெளக்குமாறுன்னுங்கறவங்களுக்கில்லை.
Bon Chance!



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (