ஆஸ்கர் 2007 பரிந்துரைகள்
இவ்வருட ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகள். கூடவே ஆங்காங்கு என்னுடைய கருத்துகளைத் தூவியிருக்கிறேன். :rog:
Best Picture
# Babel
# The Departed
# Letters from Iwo Jima
# Little Miss Sunshine
# The Queen
சிறந்த படங்களுக்கான தேர்வு ஓரளவு எதிர்பார்த்தமாதிரியேதான் இருக்கிறது. பாபெல், த டிபார்ட்டட், லெட்டர்ஸ் ஃப்ரொம் ஈவோ ஜீமா, த க்வீன் எல்லாமே. லிட்டில் மிஸ் சன்்ஷைன் தவிர. இந்தவிடத்தில் லிட்டில் சில்ரனைத்தான் எதிர்பார்த்தேன்.
Best Actor
# Leonardo DiCaprio, Blood Diamond
# Ryan Gosling, Half Nelson
# Peter O’Toole, Venus
# Will Smith, The Pursuit of Happyness
# Forest Whitaker, The Last King of Scotland
சிறந்த நடிகர்கள் தேர்வில்தான் கொஞ்சம் ஏமாற்றம். இத்துப்போன படமென்று சொல்லமுடியாவிட்டாலும் ‘த டிபார்ட்டட்டுடன் ஒப்பிட்டால் ஒன்றுமேயில்லாத (நடிப்பிலும் இன்னபிற விதயங்களிலுந்தான்) ப்ளட் டயமெண்டில் நடித்ததற்காக சிறந்த நடிகர் பரிந்துரை ரொம்ப ஓவர். மற்றபடி ரையான் கோஸ்லிங், பீட்டர் ஓட்டூல், ஃபாரஸ்ட் விட்டேக்கர் நல்ல தேர்வுகள். ஃபாரஸ்ட் விட்டேக்கருக்குத்தான் கோல்டர் க்ளோப் கிடைத்தது. அதை அவரும் எதிர்பார்க்கவில்லை. பார்வையாளர்களும் எதிர்பார்க்கவில்லை. இதில் சம்பந்தமில்லாத பெயர் வில் ஸ்மித். ஒப்புக்குச்சப்பாணியாக அவர் நடித்த ‘த பர்ஸ்யூட் ஓஃப் ஹப்பினெஸ்’. என்னமோ!
Best Actress
# Penelope Cruz, Volver
# Judi Dench, Notes on a Scandal
# Helen Mirren, The Queen
# Meryl Streep, The Devil Wears Prada
# Kate Winslet, Little Children
சிறந்த நடிகைக்கான பரிந்துரைகள் பெனலொப்பே க்றூஸ், ஜூடி டெ(D)ஞ்ச், ஹெலன் மிர்ரென், மெர்ரில் ஸ்ட்ரீப், கேட் வின்ஸ்லட் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட பட்டியல். இவர்களெல்லோரும் அருமையான நடிகைகள் என்பதும் குறிப்பிடவேண்டிய விதயம்.
Best Supporting Actor
# Alan Arkin, Little Miss Sunshine
# Jackie Earle Haley, Little Children
# Djimon Hounsou, Blood Diamond
# Eddie Murphy, Dreamgirls
# Mark Wahlberg, The Departed
சிறந்த துணை நடிகருக்கான பட்டியலிலும் பெரிய அதிர்ச்சிகளில்லை.
Best Supporting Actress
# Adriana Barraza, Babel
# Cate Blanchett, Notes on a Scandal
# Abigail Breslin, Little Miss Sunshine
# Jennifer Hudson, Dreamgirls
# Rinko Kikuchi, Babel
வெல்லுவதற்கு வாய்ப்புகள் அதிகம் இல்லையென்றாலும் கேட் ப்ளாஞ்செட்டின் பெயரைப்பார்ப்பதற்கு சந்தோ்ஷமாகவிருக்கிறது.
Best Director
# Alejandro Gonzநூlez Iண்நூrritu, Babel
# Martin Scorsese, The Departed
# Clint Eastwood, Letters from Iwo Jima
# Stephen Frears, The Queen
# Paul Greengrass, United 93
அலெஹாந்த்ரோ கொன்ஸாலஸ் இனாறிட்டு, மார்ட்டின் ஸ்கொர்சேசே, க்ளிண்ட் ஈஸ்ட்வுட், ஸ்டீபன் ஃப்ரியர்ஸ் என்று எதிர்பார்க்கப்பட்ட பட்டியல். கூடவே ‘யுனைட்டர் 93′யின் போல் க்ரீன்கிராஸ்.
Best Original Screenplay
# Babel
# Letters from Iwo Jima
# Little Miss Sunshine
# Pan’s Labyrinth
# The Queen
இந்த வாரம் போகலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கும் பான்ஸ் லாப்ரிந்த் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது. மற்றதெல்லாம் எதிர்பார்த்த பெயர்கள்.
Best Adapted Screenplay
# Borat
# Children of Men
# The Departed
# Little Children
# Notes on a Scandal
அதிர்ச்சிகளில்லை.
Foreign Language Film
# After the Wedding
# Days of Glory
# The Lives of Others
# Pan’s Labyrinth
# Water
கனடாவின் சார்பில் அனுப்பப்பட்ட தீபா மேத்தாவின் வோட்டர் பட்டியலில். இந்தப்பட்டியலில் இருக்கும் ஒரு படத்தையும் பார்க்கவில்லை. இந்தவாரம் முடிந்தால் பான்ஸ் லாப்ரின்ந்த் பார்க்கவேண்டும். ம்ம்..
Animated Feature
# Cars
# Happy Feet
# Monster House
பலரும் இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் ஹாப்பி ஃபீட். சுற்றுப்புறச் சூழல் மிகவும் முக்கியமாகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஹாப்பி ஃபீட்டுக்கு ஆஸ்கர் கிடைக்கலாம். பார்ப்போம்!
Music (Score)
# Babel
# The Good German
# Notes on a Scandal
# Pan’s Labyrinth
# The Queen
இதைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மேலேயிருக்கும் பட்டியலில் ‘த குட் ஜேர்மனை’ எங்கேயாவது கும்பலோடு கோவிந்தா என்று பார்த்தால்தால் உண்டு. மற்றவற்றைப்பார்க்கும்போது இசை மனதில் தங்குகிறதாவென்று பார்க்கவேண்டும்.
Music (Song)
# “I Need to Wake Up” – An Inconvenient Truth
# “Listen” – Dreamgirls
# “Love You I Do” – Dreamgirls
# “Our Town” – Cars
# “Patience” – Dreamgirls
‘மூலான் ரூஜ்’, ‘சிக்காகோ’ வரிசையில் ‘ட்ரீம் கேர்ள்ஸ்’. ஏ.ஆர். ரகுமானுக்கு ஆஸ்கர் பரிந்துரை கிடைப்பது பற்றி அவ்வளவாக யோசிக்கவில்லை. ஆனாலும், கனேடிய பொது வானொலியில் ஏ.ஆர்.ரகுமானின் இசையிலமைந்த பாடல்களைக்கேட்டதும் கொஞ்சம் இதுபற்றிய யோசனை வந்ததுதான். ஆனால், ‘ட்ரீம் கேர்ள்ஸ்’ படம் வெளியாகி அதன் பாடல்களை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கேட்டதும் அந்த எண்ணமெல்லாம் ஓடிவிட்டது.
போன வரு்ஷம், ஜொன் ஸ்டூவர்ட் ஆஸ்கர் விழாவை நடாத்தப்போவதாகத் தெரிந்ததும் அளவுக்கதிகமான ஆர்வத்துடன் எதிர்பார்த்து ஏமாந்ததைப்போல இவ்வருடம் ஏமாறத் தயாரில்லை.



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (
என்னது, ஏர் ஆர் ரகுமான் ஆஸ்கர் பரிந்துரையிலா !!!! சூப்பர் நியூஸ்…!!!!!
Comment by செந்தழல் ரவி — January 23, 2007 @ 10:19 am
செந்தழல் ரவி: ஏ.ஆர்.ரகுமானுக்குக் கிடைக்கலாமென்று பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் கிடைக்கவில்லை!
Water தேர்வாகியிருக்கிறது.
Comment by மதி கந்தசாமி — January 23, 2007 @ 10:32 am
செந்தழல் ரவி: இப்பகூட கனேடிய பொது வானொலியில் (http://cbc.ca) வோட்டர் படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமானின் பாட்டுப்போட்டுவிட்டு தீபா மேத்தாவுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். வார இறுதியில் இதே வானொலியில் கேட்ட பாட்டு பம்பாம் படத்தின் உயிரே தமிழ்ப்பாட்டு.
உலக அளவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு வரவேற்பிருக்கிறதை நினைச்சு சந்தோஷப்பட்டுக்குங்க. பட்டுகுவம்.
ஸ்பைக் லீயின் ‘த இன்சைடர்’ படத்தில் ‘உயிரே’ படத்தின் தகதைய தைய. நிக்கொலஸ் கேஜ் நடித்த ‘லோர்ட் ஓஃப் வார்’-இல் பம்பாய் இசை என்று ஜொலிவூட்டிலும் ARR இருக்கிறார்.
Comment by மதி கந்தசாமி — January 23, 2007 @ 11:34 am
[...] கடந்த வருடத்திற்கான ஆஸ்கார் பரிந்துரைகளும் பார்வைகளும் கொடுத்திருக்கிறார். ஆட்டத்தில் தீபா மேத்தாவின் ‘வாட்டர்’-உம் இருக்கிறது. இசைப்புயல் இல்லை என்கிறார். [...]
Pingback by கில்லி - Gilli » Oscar 2007 Nominations - Mathy Kandasamy — January 23, 2007 @ 5:33 pm
என்ன இது pursuit of happyness படத்தில் வில் ஸ்மித் பிரமாதமாக நடித்திருக்கிறார் அதைப் போய் குறை சொல்லீட்டீங்களே? லியனார்டோவுக்கு Aviatorல் குடுக்காமல் ஏமாற்றினார்கள். இந்த வருடம் Blood Diamondக்காக நாமினேட் செய்து மீண்டும் ஏமாற்றம் கொடுத்துள்ளார்கள்.
சிறந்த நடிகை விருது Helen Mirrenக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் கேட் வின்ஸ்லெட்க்கு பல தடவை ஏமாற்றியதால் அவருக்கு கொடுக்க வேண்டும் என்பதே விருப்பம்.
யாருக்கு கிடைக்கிறதோ இல்லையோ Abigail Breslinக்கு Little Miss Sunshineக்கு கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அந்தப் படத்தையே தூக்கி நிறுத்தியது அவர்தான் என்று நினைக்கிறேன்.
Comment by செந்தில் குமரன் — January 24, 2007 @ 1:48 am
You should see Half Nelson to realize Ryan Gosling’s perfomance , For his youg age its absolutely brilliant acting , he and Gael García Bernal are the actors to watch for coming years , i wish him to won the oscar
Comment by senthil — January 31, 2007 @ 9:38 am
செந்தில்குமரன்: இந்தப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் மற்றவர்களோடு ஒப்பிட்டால் Pursuit of Happynessஇல் வில் ஸ்மித் ஒரு மாற்றுக்குறைவுதான் என்பது என் அபிப்பிராயம்.
சிறந்த நடிகை விருது ஹெலன் மிர்ரென்னுக்குத் தான் கொடுப்பார்களென்று நினைக்கிறேன். எனக்கும் அபிகெயிலைப் பிடிக்கும். கேட் வின்ஸ்லெட்டும் எனக்குப் பிடித்த நடிகைகளுள் ஒருவர். பிடித்த நடிகைகள் என்று ஒரு மொக்கைப் பதிவு போடுவதற்கு ஐடியா கொடுத்திருக்கீங்க.
செந்தில்: எனக்கும் ரையன் கோஸ்லிங்க்-ஐப் பிடிக்கும். Gael Garcங்a Bernal ரொம்பவே பிடிக்கும். ஹாஃப் நெல்சன் பார்க்கும் வாய்ப்பு பத்து நிமிடத்தில் தவறிப்போய்விட்டது. பிறகு, கடனே என்று ரஸ்ஸல் குரோவின் படமொன்றைப் பார்த்தோம். அன்றுதான் கடைசிக்காட்சி என்பதுதான் பெரிய சோகம். டிவிடி வரும்வரைக் காத்திருக்கிறேன்.
-மதி
Comment by மதி கந்தசாமி — February 1, 2007 @ 4:56 pm
மதி ,
The Departed பற்றி. படம் இன்னும் பார்க்கவில்லை .
ஆனால் இது சீனப்படத்தின் தழுவல் என என் சீன நண்பன் சொன்னான்.
Infernal Affairs என்று பெயர். 3 பாகங்களாக வந்தது. நான் 2 பாகங்களை பார்த்துள்ளேன்.சிறிது குருதிப்புனல் போல.முடிந்தால் பார்க்கவும் (with english subtitles)
அன்புடன்
சிங்கை நாதன்
Comment by Senthil Nathan — February 3, 2007 @ 9:12 am
mathy
enna ippadi sollidinga!! இதில் சம்பந்தமில்லாத பெயர் வில் ஸ்மித். ஒப்புக்குச்சப்பாணியாக அவர் நடித்த ‘த பர்ஸ்யூட் ஓஃப் ஹப்பினெஸ்’. என்னமோ!
romba nalla padam mathy!! will smith aaa nnu kekkura alavukku nadichi irukkar..
Comment by ayyanar — February 26, 2007 @ 2:31 am