January 31, 2006

2005 Oscar Nominations

2005 ஆண்டுக்கான ஓஸ்கார் விருதுப் பரிந்துரைகள் வந்திருக்கின்றன.

02picture_cb.jpg

Photo: The nominees for best picture are, from left, “Brokeback Mountain,” “Capote,” “Crash,” “Munich” and “Good Night and Good Luck.” (From left: Focus Features, Sony Pictures Classics, Lions Gate Films, Universal Studios and Warner Independent Pictures)

Good Night, and Good Luck, Crash, Syriana போன்ற படங்கள் சிறந்த படத்துக்காகப் போட்டியிடுகின்றன. Golden Globe பட்டியலைப் போல அல்லாமல் ஓஸ்கரின் சிறந்த நடிகருக்கான போட்டியில் இருப்பவர்கள் பட்டியல் கொஞ்சம் திருப்தியைக் கொடுக்கிறது. “Capote” Philip Seymour Hoffman, “Good Night, and Good Luck.” David Strathairn & “Walk the Line” Joaquin Phoenix. கூடவே “Brokeback Mountain” Heath Ledger & “Hustle & Flow” Terrence Howard.

சிறந்த நடிகைகள் பரிந்துரைப்பட்டியலில் Keira Knightley! ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி என்ன நடித்துவிட்டார் என்பதற்காகவாவது இந்த Pride and Prejudiceஐப் பார்க்கலாமென்று இருக்கிறேன். Judi Dench in “Mrs. Henderson Presents” Judi Dench பற்றி நேற்றுத்தான் படித்தேன்.

rest later..

பட்டியலைக் கீழே தந்திருக்கிறேன்.

இந்தப் பட்டியல் போன வருடத்தில் வந்த படங்களில் விட்டுப்போன படங்களைப் பார்க்க உதவியாக இருக்கும்.

Performance by an actor in a leading role

Philip Seymour Hoffman in “Capote”
Terrence Howard in “Hustle & Flow”
Heath Ledger in “Brokeback Mountain”
Joaquin Phoenix in “Walk the Line”
David Strathairn in “Good Night, and Good Luck.”

Performance by an actor in a supporting role

George Clooney in “Syriana”
Matt Dillon in “Crash”
Paul Giamatti in “Cinderella Man”
Jake Gyllenhaal in “Brokeback Mountain”
William Hurt in “A History of Violence”

Performance by an actress in a leading role

Judi Dench in “Mrs. Henderson Presents”
Felicity Huffman in “Transamerica”
Keira Knightley in “Pride & Prejudice”
Charlize Theron in “North Country”
Reese Witherspoon in “Walk the Line”

Performance by an actress in a supporting role

Amy Adams in “Junebug”
Catherine Keener in “Capote”
Frances McDormand in “North Country”
Rachel Weisz in “The Constant Gardener”
Michelle Williams in “Brokeback Mountain”

Best animated feature film of the year

“Howl’s Moving Castle”
Hayao Miyazaki
“Tim Burton’s Corpse Bride”
Tim Burton and Mike Johnson
“Wallace & Gromit in the Curse of the Were-Rabbit”
Nick Park and Steve Box

Achievement in art direction

“Good Night, and Good Luck.”
“Harry Potter and the Goblet of Fire”
“King Kong”
“Memoirs of a Geisha”
“Pride & Prejudice”

Achievement in cinematography
“Batman Begins” Wally Pfister
“Brokeback Mountain” Rodrigo Prieto
“Good Night, and Good Luck.” Robert Elswit
“Memoirs of a Geisha” Dion Beebe
“The New World”Emmanuel Lubezki

Achievement in costume design

“Charlie and the Chocolate Factory”
“Memoirs of a Geisha”
“Mrs. Henderson Presents”
“Pride & Prejudice”
“Walk the Line”

Achievement in directing

“Brokeback Mountain” (Focus Features)Ang Lee
“Capote” (UA/Sony Pictures Classics)Bennett Miller
“Crash” (Lions Gate) Paul Haggis
“Good Night, and Good Luck.” (Warner Independent Pictures) George Clooney
“Munich” (Universal and DreamWorks)Steven Spielberg

Best documentary feature
“Darwin’s Nightmare”

“Enron: The Smartest Guys in the Room”
“March of the Penguins”
“Murderball”
“Street Fight”

Best documentary short subject
“The Death of Kevin Carter: Casualty of the Bang Bang Club”
“God Sleeps in Rwanda”
“The Mushroom Club”
“A Note of Triumph: The Golden Age of Norman Corwin”

Achievement in film editing
“Cinderella Man”
“The Constant Gardener”
“Crash”
“Munich”
“Walk the Line”

Best foreign language film of the year
“Don’t Tell” Italy
“Joyeux Noël” France
“Paradise Now”Palestine
“Sophie Scholl - The Final Days” Germany
“Tsotsi”South Africa

Achievement in music written for motion pictures (Original score)
“Brokeback Mountain” (Focus Features) Gustavo Santaolalla
“The Constant Gardener” (Focus Features) Alberto Iglesias
“Memoirs of a Geisha” (Sony Pictures Releasing) John Williams
“Munich” (Universal and DreamWorks) John Williams
“Pride & Prejudice” (Focus Features) Dario Marianelli

Achievement in music written for motion pictures (Original song)
“In the Deep” from “Crash” (Lions Gate)
Music by Kathleen “Bird” York and Michael Becker
Lyric by Kathleen “Bird” York
“It’s Hard Out Here for a Pimp” from“Hustle & Flow” (Paramount Classics, MTV Films and New Deal Entertainment)
Music and Lyric by Jordan Houston, Cedric Coleman and Paul Beauregard
“Travelin’ Thru” from “Transamerica” (The Weinstein Company and IFC Films)
Music and Lyric by Dolly Parton

Best motion picture of the year
“Brokeback Mountain” (Focus Features)
A River Road Entertainment Production
Diana Ossana and James Schamus, Producers
“Capote” (UA/Sony Pictures Classics)
An A-Line Pictures/Cooper’s Town/ Infinity Media Production
Caroline Baron, William Vince and Michael Ohoven, Producers
“Crash” (Lions Gate)
A Bob Yari/DEJ/Blackfriar’s Bridge/ Harris Company/ApolloProscreen GmbH & Co./Bull’s Eye Entertainment Production
Paul Haggis and Cathy Schulman, Producers
“Good Night, and Good Luck.” (Warner Independent Pictures)
A Good Night Good Luck LLC Production
Grant Heslov, Producer
“Munich” (Universal and DreamWorks)
A Universal Pictures/DreamWorks Pictures Production
Kathleen Kennedy, Steven Spielberg and Barry Mendel, Producers

Best animated short film
“Badgered”
A National Film and Television School Production
Sharon Colman
“The Moon and the Son: An Imagined Conversation”
A John Canemaker Production
John Canemaker and Peggy Stern
“The Mysterious Geographic Explorations of Jasper Morello” (Monster Distributes)
A 3D Films Production
Anthony Lucas
“9”
A Shane Acker Production
Shane Acker
“One Man Band”
A Pixar Animation Studios Production
Andrew Jimenez and Mark Andrews

Best live action short film
“Ausreisser (The Runaway)”
A Hamburg Media School, Filmwerkstatt Production
Ulrike Grote
“Cashback” (The British Film Institute)
A Left Turn Films Production
Sean Ellis and Lene Bausager
“The Last Farm”
A Zik Zak Filmworks Production
Rúnar Rúnarsson and Thor S. Sigurjónsson
“Our Time Is Up”
A Station B Production
Rob Pearlstein and Pia Clemente
“Six Shooter” (Sundance Film Channel)
A Missing in Action Films and Funny Farm Films Production
Martin McDonagh

Achievement in sound editing
“King Kong” (Universal) Mike Hopkins and Ethan Van der Ryn
“Memoirs of a Geisha” (Sony Pictures Releasing) Wylie Stateman
“War of the Worlds” (Paramount and DreamWorks) Richard King

Achievement in visual effects

“The Chronicles of Narnia: The Lion, the Witch and the Wardrobe” (Buena Vista)
Dean Wright, Bill Westenhofer, Jim Berney and Scott Farrar
“King Kong” (Universal)
Joe Letteri, Brian Van’t Hul, Christian Rivers and Richard Taylor
“War of the Worlds” (Paramount and DreamWorks)
Dennis Muren, Pablo Helman, Randy Dutra and Daniel Sudick

Adapted screenplay
“Brokeback Mountain” (Focus Features)
Screenplay by Larry McMurtry & Diana Ossana
“Capote” (UA/Sony Pictures Classics)
Screenplay by Dan Futterman
“The Constant Gardener” (Focus Features)
Screenplay by Jeffrey Caine
“A History of Violence” (New Line)
Screenplay by Josh Olson
“Munich” (Universal and DreamWorks)
Screenplay by Tony Kushner and Eric Roth

Original screenplay
“Crash” (Lions Gate)
Screenplay by Paul Haggis & Bobby Moresco
Story by Paul Haggis
“Good Night, and Good Luck.” (Warner Independent Pictures)
Screenplay by George Clooney & Grant Heslov
“Match Point” (DreamWorks)
Written by Woody Allen
“The Squid and the Whale” (Samuel Goldwyn Films and Sony Pictures Releasing)
Written by Noah Baumbach
“Syriana” (Warner Bros.)
Written by Stephen Gaghan

January 18, 2006

Million Dollar Baby(2005) உருவாக்கிய அலைகள்..

பழைய படந்தான். முன்பே பார்க்கச் சந்தர்ப்பம் கிடைத்தபோதும், பார்க்கவேண்டாம் என்று முடிவு செய்திருந்தேன். பொதுவாக படம் வந்தவுடனேயே அதில் இருக்கும் முக்கியமான விதயத்தைச் சொல்வது எனக்குப் பிடிக்காது. Sixth senseஇல் ப்ரூஸ் வில்லிஸ்ஸும் உயிருடன் நடமாடும் மனிதர்களுள் ஒருவரல்ல என்பதோ, Village படத்தில் பல வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பது அப்படியில்லை என்றோ படம் வந்தவுடனேயே யாராவது சொல்லியிருந்தால் படம் பார்க்கவேண்டும் என்ற உந்துதலே போயிருக்குமல்லவா? அதுபோலத்தான்!

சரி, மில்லியன் டொலர் பேபி பார்த்தாயிற்று. பார்க்கும் ஒவ்வொரு படத்தைப்பற்றியும் நீ எழுதிக்கொண்டிருப்பாயா என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்கிறது. என்ன செய்வது, சில படங்கள் நம்மை எழுதத் தூண்டுகின்றன.

மில்லியன் டொலர் பேபியை இயக்கி நடித்திருப்பவர் க்ளிண்ட் ஈஸ்ட்வூட். அப்பாவுக்கு இவரை ரொம்பவும் பிடிக்கும் என்பதால் இந்தியாவில் இவருடைய படங்கள் பார்ப்பதற்கு முன்னமே பெயர் நன்கு அறிமுகம். Dirty Harryயாக படத்தில் பார்ப்பத்ற்கு முன்பே அர்த்தம் புரிந்ததோ புரியவில்லையோ ‘Go ahead, Make my day’ என்று சொல்லிக்கொண்டு திரிந்தது ஞாபகம் இருக்கிறது. சென்னையில் பார்க்கக்கிடைத்த படம், கிராண்ட் தியேட்டரில் ‘Where Eagles Dare’. பழைய படமென்றாலும் இங்கிலிஷ் படம். அதுவும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட் படம். போஸ்டர் பார்த்துவந்து அப்பா சொல்ல பட்டாளம் கிளம்பியது. அலிஸ்டர் மாக்லீனின் கதை ஏற்கனவே படித்திருந்தாலும் க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டும் ரிச்சர்ட் பர்ட்டனும் ஏமாற்றவில்லை. இப்போது பார்த்தால் படத்தின் கதைபற்றியே நிறைய விமர்சனம் இருக்கும் என்பதால் தவிர்த்திருக்கிறேன். ஒரு நாள் பார்க்கலாம். பார்க்காமலும் போகலாம். :)

க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கி நான் பார்த்த முதல் படம் A Perfect World(1993). ஸ்டாரில் ஒரு தடவை போட்டார்கள். Robinhood: Prince of Thievesஇலும் The Bodyguardஇலும் ஜொள்ளு விட்டிருந்த கெவின் கோஸ்ட்னர் திரையில்.. யார் இயக்குநர் என்றெல்லாம் தெரியாது. சென்னையில் அப்போது கூகுள் இல்லை. ப்ச்! இணையமே இல்லை அப்புறம் எப்படி கூகுள். A Perfect World அருமையான செண்டிமெண்ட் கதை. கண்ணீர் வழிய வழியப் பார்த்தது. ‘நான் பாசமலருக்கு அழுதா சிரிக்கிற. இப்ப, இங்கிலிஷ் படத்தைப்பாத்து அழுகிறியே’ வீட்டில கிண்டல். இங்கிலிஷ்காரன் தான் அழாம, நம்மை அழவைப்பான். சிவாஜி பாசமலர்ல அவரு அழுது என்னைச் சிரிக்க வைக்கிறார்னு சொல்லி அதுக்கும் ஒரு திட்டு. இந்தப் பாசமலர் கதை ஊருலகத்தில் எப்படியோ எங்க வீட்டில தனிக்கதை. சிவாஜி பாத்திரம் அம்மாவோட பெரிய அண்ணராயிருவார். பெரிய மாமாவேற பாக்கிறதுக்கு அசப்பில சிவாஜி மாதிரியே இருப்பாரா. அம்மா விசும்ப ஆரம்பிச்சிருவாங்க. அப்ப மாமா உயிரோட இருந்தபடியா எங்களுக்கு இது பெரிய சிரிப்பு. இப்போ, நானே சில படங்களில்..

சரி க்ளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு வருவோம்.

Unforgiven பார்த்திருக்கிறீர்களா? க்ளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கமென்று தெரிந்து நான் பார்த்த முதல் படம். சமீபத்தில்கூட மறுபடி பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. க்ளிண்டைப் பிரபலமாக்கிய கௌபோய் பட வகையறாவைச் சேர்ந்தது. ஆனால் இதுக்கு மேல் Unforgivenஐ ஏனைய கௌபோய் படங்களோடு சேர்க்கமுடியாது. The Searchers என்று John Wayne படமொன்று இருக்கிறது. அதைப்பார்த்துவிட்டு, Unforgiven பார்த்தால் நான் சொல்வது விளங்கும். Unforgivenஇல் வில்லனாக நடித்திருப்பவர் Gene Hackman. படத்தில் நடித்திருக்கும் மூன்றாவது ஆள் Morgan Freeman. ஹொலிவூட் நடிகர்களில் பிடித்த நடிகர்கள் பட்டியலில் இவர்கள் இருவரும் கட்டாயம் வருவார்கள். அநாயாசமாக நடிப்பார்கள். இருவரும் தேவையில்லாத படங்களில் குப்பை கொட்டியிருப்பதையும் சொல்ல வேண்டும்.

கௌபோய் படங்களில் காட்டப்படும் வழமையான டெக்ஸாஸ் கிராமம் அல்லது அதுபோன்ற ஒன்று. இதுபோன்ற இடங்களில் ஒரு போலிஸ் ்ஷெரீஃப் இருப்பார். ஒரு பார் இருக்கும். பாலியல் தேவைகளைப்பூர்த்தி செய்ய பெண்களும் இருப்பார்கள். அந்தப் பெண்களில் ஒருத்தியை ஒருவன் கத்தியால் அலங்கோலப்படுத்தி விடுகிறான். போலீஸுக்கு இளக்காரம். பெண்கள், தம்மிடமிருக்கும் பணத்தையெல்லாம் சேர்த்து பழிவாங்க முன்வருபவனுக்குக் கொடுப்பதாகச் சொல்கிறார்கள். அந்தக் கிராமத்து போலீஸ் ்ஷெரீஃபுக்கு இம்மாதிரியான சட்டவிரோத நடவடிக்கைகள் பிடிக்காது. சந்தர்ப்ப வசத்தால் அந்தப் பெண்களுக்கு உதவ வருபவர்(பணத்தை வாங்கிக்கொண்டுதான்) க்ளிண்ட் ஈஸ்ட்வூட். கூடவே மோர்கன் ஃப்ரீமன்.

Unforgiven போன்ற sensitive அணுகுமுறைகள் நிறைந்த படத்தை நான் க்ளிண்ட் ஈஸ்ட்வூட்டிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. அப்படிப்பட்ட எனக்கு Bridges of Madison County என்னமாதிரி உணர்வுகளைத் தந்திருக்கும்? ஹொலிவூட் காதல் படங்களில் மிகவும் பிடித்த ஐந்து படங்களில் Bridges of Madison Countyக்கு ஓரிடம் இருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பார்த்துவிடுவேன். பார்க்கவேண்டியது, இரண்டு நாட்களுக்கு இந்தப் பட நினைவிலேயே சுற்றவேண்டியது என்று இது ஒரு தீராத சுற்று. Meryl Streep அருமையான நடிகை. ஆனால், க்ளிண்ட் ஈஸ்ட்வூட்டை இந்தமாதிரியான பாத்திரத்தில் எதிர்பார்க்கவேயில்லை. அதுமட்டுமல்லாமல் படத்தை இயக்கிதும் கிளிண்ட்தான். PHEW! Not the Cowboy/Dirty Harry Clint Eastwood I was introduced to. That’s for sure.

2003 வருடத்தைய Mystic River. இளமைக்கால நண்பர்கள் மூவர். சிறுவயதில் நடக்கும் ஒரு விதயம், வளர்ந்தபிறகு அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய படம். இதற்குமேல் ஒருவரி சொன்னாலும் கதையைச் சொல்லிவிடுவேனோ என்று பயமாக இருக்கிறபடியால் வாய்ப்புக் கிடைத்தால் படம் பார்க்கும்படி மட்டும் சொல்லிப்போகிறேன். Sean Penn, Kevin Bacon, Tim Robbins, Marcia Gay Harden மற்றும் Laura Linney நடித்திருக்கிறார்கள். க்ளிண்ட் இயக்குநர் மட்டுமே.

2004இல் Million Dollar Baby. திரைப்படங்களில் எந்தளவு violence வந்தாலும் இரசிக்க முடிந்த எனக்கு, மூர்க்கத்தனம் நிறைந்த விளையாட்டுகளை ஏனோ பார்க்கக்கூட முடிவதில்லை. அமெரிக்கன் ஃபூட்போல், WWF, குத்துச்சண்டை இவையெல்லாம் எனக்குப் பிடிக்காதவை. முகம்மது அலி பிடிக்கும் என்றாலும், அதற்கான காரணங்கள் வேறு. Ali படம் பார்க்கவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. மில்லியன் டொலர் பேபி குத்துச்சண்டைப் பின்னணியில் எடுக்கப்பட்ட படம். Frankie Dunn ஒரு குத்துச்சண்டை மானேஜர். Frankieஆக க்ளிண்ட் ஈஸ்ட்வுட். அவருடைய பயிற்சிக்கூடத்தைப் பார்த்துக்கொள்கிற Scrapஆக மோர்கன் ஃப்ரீமன். குத்துச்சண்டைப் போட்டிகளில் ஃப்ராங்கியின் ஈடுபாட்டையும் அக்கறையையும் கற்றுக்கொடுக்கும் திறமையையும் பார்த்து, அவருடைய பயிற்சிக்கூடத்தில் சேரும் Maggie Fitzeraldஆக Hillary Swank. இதுக்கு மேல நான் எதுவும் சொல்வதாக இல்லை! :)

க்ளிண்ட் ஈஸ்ட்வூட், மோர்கன் ஃப்ரீமன், ஹில்லரி ஸ்வாங்க் மூவரும் James Liptonனுடன் கலர்ந்துரையாடியதைப் பார்க்க முடிந்தது. நிறைய விதயங்களைத் தெரிந்துகொள்ளவும் முடிந்தது. Inside the Actors Studio நிகழ்ச்சியின் டிவிடிக்களைத் தேடவேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தை இந்தக் கலந்துரையாடல் மேலும் வலியுறுத்தியது. மோர்கன் ஃப்ரீமன் நடிப்பதைவிட தமக்கு எது இலகுவானது என்று சொன்னார். Morgan Freeman said that it’s easier for him to react than to act. Claimed to be lazy enough to prefer the former than the later. சும்மா விளையாட்டுக்குச் சொன்னமாதிரிச் சொன்னாலும், அவர் சொன்னதில் நிறைய அர்த்தம் இருக்கிறது. தன்னிடம் ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொன்னால், சில சமயம் வெறுமனே ‘ம்ம்ம்?’ என்று சொல்வதாகவும் அந்த நடிகர், முதலில் சொன்ன வசனத்தைத் திருப்பிச் சொன்னால், அவர் வெறுமனே வசனங்களை ஒப்பிக்காமல் காதுகொடுத்தும் கேட்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதாகச் சொன்னார்.

Jerry Boyd, F.X.Toole என்ற பெயரில் எழுதிய “Rope Burns: Stories From the Corner” என்ற சிறுகதைத் தொகுப்பில் இருந்துதான் மில்லியன் டொலர் பேபி படம் எடுக்கப்பட்டது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் மூன்று கதைகளில் இருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். புத்தகத்தைப் படிக்க வேண்டும். சுவாரசியமானதாகவே இருக்கும்போல. இந்தப் படம் க்ளிண்ட் ஈஸ்ட்வூட்டின் கைகளுக்கு வந்ததே ஒரு சுவாரசியமான கதையாக இருக்கிறது. Anjelica Huston, Ashley Judd, Sandra Bullock, Sekhar Kapur, Paul Haggis, Morgan Freeman என்று பலரும் இந்தப் படத்தோடு ஒரு காலத்தில் சம்பந்தப்பட்டவர்களாக இருந்திருக்கிறார்கள். மோர்கன் ஃப்ரீமன், க்ளிண்ட் ஈஸ்ட்வுட் வரமுதலே தனக்கென்று வந்த Freddie பாத்திரம் வேண்டாம் Scrap பாத்திரத்தைக் கொடுங்கள் என்று கேட்டு ஒன்றிப்போனார். Paul Haggis திரைக்கதை, வசனமெழுதி இயக்குவதாக இருந்தார். க்ளிண்ட் ஈஸ்ட்வுட், தான் இயக்கப்போவதாகக் கேட்டதும் ஒதுங்கிக்கொண்டுவிட்டார். ஆயினும் Paul Haggis தான் எழுதி வைத்திருந்த முதலாம் பிரதியோடேயே க்ளிண்ட் ஈஸ்ட்வுட் திருப்தியடைந்ததை வியக்கிறார். அதில் இருந்து பிழைகளோடேயே க்ளிண்ட் ஒத்துக்கொண்டார். இதுவரை ஹொலிவூட்டில் ஒருவர் கூட அப்படி ஒத்துக்கொண்டதில்லை என்றார். பிற்பாடு மோர்கன் ஃப்ரீமனும் ஹில்லரி ஸ்வாங்கும் கூட, க்ளிண்ட் ஈஸ்ட்வூட் கொடுத்த பிரதியில் வெள்ளை நிறம் மட்டுமே இருந்தது. அடித்தல் திருத்தல் எதுவுமே இல்லை என்கிறார்கள். James Lipton, இதற்கு முன்பு ஏதாவது படத்தில் இப்படி நடந்திருக்கிறதா என்று கேட்க, மோர்கன் ஃப்ரீமன், ஆமாம் என்கிறார். Unforgiven படத்தில்தான் அப்படி நடந்தது என்கிறார் மோர்கன் ஃப்ரீமன். மோர்கன் ஃப்ரீமன் நடனம் கற்றுக்கொண்டு Musicalகளில் நடித்தவர் என்ற செய்தி எனக்குப் புதிது.

James Lipton உடனான கலந்துரையாடலில் இன்னொன்றையும் தெரிந்துகொள்ள முடிந்தது. க்ளிண்ட் ஈஸ்ட்வுட், ஒரு காட்சி படமாக்கத் தயாரானதும் ACTION என்று கூறுவது கிடையாதாம். அதுபற்றி Lipton கேட்டதும் அனைவரும் ஆமாம் என்றார்கள். பல நடிகர்கள், துணை நடிகர்கள், பின்னணிக் காட்சிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் என்று நிறையப் பேர் இருந்தார் துணை இயக்குநரை ACTION சொல்லச் சொல்வாராம் க்ளிண்ட். மற்றபடி lets get on with it மற்றும் இதுபோன்ற சொற்றொடர்களைத் தான் பயன்படுத்துவதாகச் சொன்னார். அது ஏன் என்று க்ளிண்ட் ஈஸ்ட்வுட் சொன்ன காரணம் யோசிக்க வைத்தது.

எப்படிப் பட்ட திறமையான நடிகராக இருந்தாலும், ஆக்்ஷன் என்று காட்டுக்கத்தலாகச் சொன்னால், ஒரு சின்ன திடுக்கிடல் நேரத்தான் செய்யும். மிகவும் திறமையான நடிகர் என்றால் அந்த நேரத்துத் தயக்கத்தைத் திடுக்கிடலை சாமர்த்தியமாக மறைத்துவிடுவார். அதுவும் மென்மையான காட்சிகளில் இதுபோலச் செய்தால் காட்சிமைப்பே சரியாக வராது. அதனால்தான் தான், அவ்வாறு செய்வதாகச் சொன்னார். இதுவே தான் நடிக்கும் காட்சியென்றால் எதுவும் சொல்லாமல் நடிக்கத் தொடங்கிவிடுவதாகச் சொன்னபோது Dirty Harry க்ளிண்ட் ஈஸ்ட்வுட் ஆச்சரியமான மனிதராகவே இருந்தார்.

கடைசியாக எழுதிய விதயந்தான் இந்த இடுகையையே எழுத வைத்த காரணி. எந்த ஒரு மனிதரையும் நாம் ஒரு பெட்டிக்குள் போட்டு அடைத்து வைத்துவிடுகிறோம். நம் சௌகரிய அசௌகரியங்களுக்கு ஏற்றவாறு.. இல்லையா?

தமிழ்ப்பதிவுகள், தமிழ், திரைப்படம்

January 16, 2006

Good Night, and Good Luck (2005)

அந்த நாட்டின் அரசில் வேலை செய்பவர்களின் தனிப்பட்ட கொள்கைப்பிடிப்புகளின் காரணமாக அவர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களின் மீது ஆதாரம் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆதாரம் எங்கே என்று பலரும் பலதடவை கேட்டபோதும் அவை பொதுவில் வைக்கப்படவில்லை. மாறாக, எதிர்க்கருத்து வைத்தவர்களின் சொந்த வாழ்க்கை தாக்கப்பட்டது, கேள்விக்குள்ளாக்கப்பட்டது. எதிர்க்கேள்வி கேட்பவர்களுக்கு நாட்டுநலன் மீது அக்கறையில்லாத மாதிரியும் அவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லாதமாதிரியும் சித்தரிக்கப்பட்டது.

நான் மேலே எழுதியது ஒரு கற்பனைக்கதையென்று சொல்ல மாட்டீர்கள். சமீபகால வரலாற்றை நினைவில் கொண்டுவருவீர்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால், அதுவும் இல்லை!

நான் குறிப்பிட்ட சம்பவம் 1950களில் நடந்தது. அமெரிக்காவின் விஸ்கான்ஸின் மாநில செனட்டர் ஜோசஃப் மக்கார்த்தி அமெரிக்க அரசில் பணிபுரிபவர்களினூடே கம்யூனிசத்துக்கும் சோவியத் யூனியனுக்கும் ஆதரவானவர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்று சொல்லி விசாரணை செய்தார். மக்கார்த்தி, Senate Permanent Subcommittee on Investigations என்னும் செனட் கமிட்டிக்குத் தலைவராக இருந்து இந்த விசாரணைகளை நடாத்தினார். மக்கார்த்தியின் செனட் விசாரணைக்குழு, ஏனைய குழுக்களைப்போல் அல்லாமல் அரசாங்கத்தில் வேலை செய்தவர்களைக் குறி வைத்தது. மக்கார்த்தியின் செயற்பாடுகள் பலரையும் கோபப்படுத்தினாலும் அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. மக்கார்த்தியின் நடவடிக்கைகளும் எல்லை மீறிக்கொண்டே இருந்தன. அதேபோல அவரது பேச்சும் எல்லை மீறிக்கொண்டே போனது. யாரையும் சிறையில் தள்ளவில்லையென்றாலும் மக்கார்த்தியின் நடவடிக்கைகள் பொதுமக்களைப் பயமுறுத்தின.

பத்திரிகையாளர்கள் யாரும் மக்கார்த்தி மற்றும் அவரது செனட் விசாரணைக்குழுவினரின் நடவடிக்கைகள் குறித்து எதுவும் பேசவில்லை.

எட்வர்ட் ஆர். மர்ரோ என்ற பத்திரிகையாளர் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலமாக இருந்தார். போர் முனையில் இருந்து மர்ரோவும் அவரின் குழுவினரும் கொடுத்த வானொலி அறிக்கைகள் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப்பெற்றன. பல தடவைகள், போர் முனையில் சண்டையிடும் விமானங்களில் இருந்தும் செய்திகளை அளித்தார் மர்ரோ. போர் முடிவடைந்ததும் நாடு திரும்பிய மர்ரோவிற்கு அவரின் பிரபலம் ஒரு புதிராக ஆச்சரியம் கொடுப்பதாக இருந்தது. மர்ரோவின் பிரபலத்தைப் பயன்படுத்தி, அவரது வானொலி நிகழ்ச்சியை தொலைக்காட்சிக்கு மாற்றினார்கள். Hear it now என்று இருந்த நிகழ்ச்சி See it Now என்று மாற்றம் பெற்றது. எட்வர்ட் ஆர். மர்ரோவும் அவரது வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஃபிரெட் பிரெண்ட்லியும் தொலைக்காட்சிக்கு இடம் பெயர்ந்தார்கள். தம் குழுவில் பணி புரிய புதியவர்களையும் தேர்ந்தெடுத்தார்கள். மர்ரோவும் ப்ரெண்ட்லியும் அந்தக் காலத்தில் பயன்படுத்திய formatதான் இப்போதும் தொலைக்காட்சி விவரணப்படங்களின் formatஆக இன்னமும் இருக்கிறது. மர்ரோவின் பிரபல்யம், அவர் குரல் கொடுத்த எந்த நிகழ்ச்சிக்கும் நம்பகத்தன்மையைக் கொடுத்தது. மர்ரோ, See it now நிகழ்ச்சி தவிர Person to Person என்ற பிரபலங்களைச் சந்தித்துப் பேட்டியெடுக்கும் நிகழ்ச்சியையும் வேண்டா வெறுப்பாகச் செய்துவந்தார்.

அந்நேரம், Detroit நகர பத்திரிகையொன்றில் அமெரிக்க விமானப்படை வீரனொருவனை விமானப்படையில் இருந்து விலக்கியதாக ஒரு செய்தி வருகிறது. Lieut. Milo Radulovich, அவனுடைய தந்தையையும் சகோதரியையும் அவர்களோடு தனக்கொரு தொடர்பும் இல்லையென்று பொதுமக்களிடையே கூறினால், விமானப்படையில் திரும்பவும் சேர்த்துக்கொள்ளலாமா என்று பரிசீலனை செய்வதாக விமானப்படை சொல்கிறது. Detroit சென்று அந்தச் செய்தியைப் பல தடங்கல்களுக்கிடையில் See it Now நிகழ்ச்சியில் எட்வர்ட் ஆர். மர்ரோவும் ஃபிரெட் பிரெண்ட்லியும் ஒளிபரப்புகிறார்கள். விளம்பரதாரர்கள் யாரும் முன்வராமல் சிபிஎஸ் நியூஸ் நிறுவனமும் மறுத்துவிட்ட நிலையில் மர்ரோவும் பிரெண்டிலியும் அன்றைய நிகழ்ச்சி நடப்பதற்கான $3000த்தை தாமே கட்டுகிறார்கள்.

எதிர்பார்த்தபடியே மக்கார்த்தியும் அவருடைய குழுவினரும் எட்வர்ட் ஆர். மர்ரோவினைக் குறி பார்க்கிறார்கள். மர்ரோவின் தனிப்பட்ட வாழ்க்கை ஆராய்ந்து அலசப்படுகிறது. முப்பதுகளில் மர்ரோ வேலை செய்த ஒரு நிறுவனம் மாஸ்கோவில் இருந்த ஒரு கல்வி நிறுவனத்தோடு தொடர்பு வைத்திருந்ததைக் காட்டி, அப்போதிருந்தே மர்ரோ சோவியத் யூனியனிடம் காசு வாங்கும் ஒற்றன் என்று சொல்லி மிரட்டப்பார்க்கிறார்கள். மர்ரோவும் குழுவினரும் மக்கார்த்தி பற்றிய நிகழ்ச்சியைத் தயார் செய்கிறார்கள். மக்கார்த்தி பேசிய துணுக்குகளை வைத்தே அவரின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த நினைக்கிறார்கள் See it Now குழுவினர். அவ்வாறே மார்ச் 9, 1953இல் மக்கார்த்தியைப்பற்றிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மக்கார்த்தியின் பெயரையும் நடவடிக்கைகளையும் பத்திரிகைகளில் மட்டுமே பார்த்துப் படித்து வந்த மக்களுக்கு பேரதிர்ச்சி! பத்திரிகைகளில் ஆதரவாகவும் எதிராகவும் செய்திகள் வருகின்றன. பெரும்பாலான பத்திரிகைகளும் பொதுமக்களும் ஆதரவாகவே இருந்தார்கள்.

மக்கார்த்தி, ஏப்ரல் 6, 1953 அன்று See it Now நிகழ்ச்சியில் பேசப்போவதாகச் சொல்கிறார். அப்படியே பேசவும் செய்கிறார். என்ன! அவருடைய பேச்சு முழுக்க முழுக்க எட்வர்ட் ஆர். மர்ரோவைத் தனிப்பட்ட முறையில் தாக்கியே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி மக்கார்த்திக்கு எதிராகவே அமைந்தது. இதைத் தொடர்ந்து இன்னொரு நிகழ்ச்சியை மக்கார்த்தி பற்றிப் பேசுவதற்காக ஒதுக்கிய எட்வர்ட் ஆர். மர்ரோ, மக்கார்த்தி தான் சொன்ன விதயங்களைப்பற்றிப் பேசாமல் போனதைச் சுட்டிக்காட்டுகிறார். மக்கார்த்தியின் புகழ் பெரிதும் குறைந்துவிடுகிறது.

அமெரிக்க இராணுவம் மக்கார்த்தியினை விசாரணை செய்ய முடிவெடுக்கிறது. எட்வர்ட் ஆர். மர்ரோவின் நிகழ்ச்சியின் தாக்கம் எங்கும் எதிரொலிக்கிறது. ஆனால், சிபிஎஸ் நியூஸ் நிறுவனம் மர்ரோவின் நிகழ்ச்சியை ஞாயிற்றுக் கிழமைகளுக்குக் கொண்டு சென்று, ஐந்து episodeகளோடு முடிக்குமாறு சொன்னது. கேள்வி-பதில் (Quiz show) நிகழ்ச்சிகளுக்குப் பெருகி வந்த ஆதரவும் மர்ரோவின் நிகழ்ச்சியை மாற்றியதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் கேள்வி-பதில் நிகழ்ச்சிகளுக்கு எப்படி எங்கே ஆதரவு தொடங்கியது என்பதை ரோபர்ட் ரெட்ஃபோட் இயக்கிய Quiz show திரைப்படத்தில் பார்க்கலாம்.

இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கி நடித்தும் இருப்பவர் ஜோர்ஜ் க்ளூனி(George Clooney). இவருடைய நடிப்பு சமீபத்தைய சிரியானாவில் பெரிதாக சிலாகிக்கக் கூடியதாக இல்லையென்றாலும் இந்தப் படத்தில் இவரை ஓரளவு பொறுத்துக் கொள்ள முடிகிறது. இந்தப் படத்தில் ஜோர்ஜ் க்ளூனியை இயக்குநராக மிகவும் பிடித்திருக்கிறது. ஜோர்ஜ் க்ளூனியின் தந்தை நிக் க்ளூனி ஒரு பத்திரிகையாளர். சிறுவயதில் இருந்தே உலக நடப்புகளைக் கவனித்து வந்தது ஜோர்ஜ் க்ளூனியை இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியதாகச் சொல்கிறார். Confessions of a Dangerous Mind படத்தில் இருந்த தயக்கங்களை இங்கே காணவில்லை. ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் ஓடும் இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு விதயத்துக்கும் இரண்டு proof வைத்துக்கொண்டு இயக்கி இருக்கிறாராம். எட்வர்ட் ஆர். மர்ரோவின் குழுவில் இருந்த Joe Wershbaவினை படப்பிடிப்புத் தளத்தில் வைத்துக்கொண்டு படப்பிடிப்பு நடாத்தியதாகவும் குறிப்பிடுகிறார். இதனால்தானோ என்னமோ, ஐம்பதுகளில் தொலைக்காட்சி நிறுவனம் எப்படி இருக்கும் என்று நினைத்தோமோ எப்படியே இருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவும் குறிப்பிடத் தக்கது. எடிட்டிங்கும் படத்தின் விறுவிறுப்பிற்கு வெகுவாக் ஒத்துழைத்திருக்கிறது.

எட்வர்ட் ஆர். மர்ரோஆக நடித்திருக்கும் David Strathairn. He brings out the essence of the movie. ஆவணங்களில் இருக்கும், தொலைக்காட்சியில் ஏற்கனவே உச்சரிக்கப்பட்ட வசனங்களுக்கு உயிர் கொடுத்திருப்பதாகட்டும், ஜோர்ஜ் க்ளூனி எழுதிய வசனங்களின் எள்ளலை வெளிக்கொணர்ந்ததாகட்டும் எட்வர்ட் ஆர். மர்ரோவினை உயிர்ப்பித்திருக்கிறார்.

இந்தப் படத்தைத் தயாரித்தவர்களுள் Participant Filmsஉம் ஒரு அங்கம். Participant Films, e-bay நிறுவனர் Jeff Skollsக்குச் சொந்தமானது. Participant Films இந்த வருடம், Good Night, and Good Luck தவிர Syriana, North Country, An Inconvenient Truth, Fast Food Nation, American Gun, Truce(House of Sand and Fog’s Vadim Perelman) போன்றவற்றையும் தயாரித்தார்கள்/தயாரிக்கிறார்கள். சமூகத்தின் நலன்களை முன்வைக்கும், அவர்களின் எண்ணங்களைத் தட்டியெழுப்பும் படங்களையே தாங்கள் தயாரிக்க விரும்புவதாகச் சொல்கிறார்கள். குட் நைட், அண்ட் குட் லக், இதற்கு ஒரு நல்ல சான்று.

இந்தப் படத்தை முதலில் பார்த்தவர்கள், செனட்டர் ஜோசஃப் மக்கார்த்தியாக நடித்திருப்பவர் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாக நினைத்தார்களாம். தொலைக்காட்சி ஆவணங்களில் இருந்து உண்மையான செனட்டர் ஜோசஃப் மக்கார்த்தி பேசியிருக்கும் காட்சிகளைத்தான் இணைத்திருப்பதாகச் சொன்னபோது என்னைப்போலவே உணர்ந்திருப்பார்கள். கறுப்பு-வெள்ளையில் இந்தப் படத்தை எடுக்க நினைத்ததற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஐம்பதுகளின்போது எடுத்த படம் என்ற உணர்வையும் ஏற்படுத்தியது. பட வசனங்கள், என்னை இரண்டாம் முறை பார்க்க வைத்தது.

நம்மூரில் பட நாயகன் சப்பாத்துக்காலைக் காட்டும்போதே கைதட்டத் தொடங்கிவிடுவார்கள். நம்மூர் மக்கள் செய்வதுபோல பேப்பர்களைக் கிழித்துப் பறக்கவிடுவதோ, சூடம் கொளுத்தி உணர்ச்சி வசப்படுவதோ இங்கே நடந்து நான் பார்க்கவில்லை. ஆனால், இதற்கு முன்பு ஒரு படத்திற்குத்தான் அரங்கமே அதிரும்வகையில் கை தட்டினார்கள். அதையும் ஒரு முறைக்கு இரண்டு முறை வெவ்வேறு திரையரங்குகளில் பார்த்தேன். அதைப்போலவே, ‘குட் நைட், அண்ட் குட் லக்’ படத்தையும் ஆங்காங்கே வசனங்களுக்குச் சிலர் விசிலடித்து வரவேற்றார்கள். படம் முடிந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள். Quite proud of the Quebecois/Montrealers. And of the Movie and people connected with it. A gem really!

http://www.participantproductions.com - Changing the world one story at a time
Good Night, and Good Luck

தமிழ்ப்பதிவுகள், தமிழ்பதிவுகள், தமிழ், திரைப்படம்

January 5, 2006

Jon Stewart to host Oscars

ஜொன் ஸ்டூவர்ட் எனக்குப் பிடித்த தொலைக்காட்சி நட்சத்திரங்களில் ஒருவர். எங்களூரில் இரவு பன்னிரண்டு மணிக்கு இவருடைய ‘The Daily Show with Jon Stewart’ நிகழ்ச்சி வரும். ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை நையாண்டி செய்யும்வகையில் பொய்யான செய்திகளை அள்ளித் தரும் நிகழ்ச்சி இது. சமீபத்தில் கனடாவில் தேர்தல் நடக்கப்போவதுபற்றிய அறிவிப்பு வந்ததும், ‘The Daily Show with Jon Stewart’ நிகழ்ச்சியில் பெரும்பான்மையான நேரம் அச்செய்திக்கே ஒதுக்கப்பட்டது. கூடவே, அமெரிக்காவின் அண்டை நாட்டில் ‘லிபரல் கட்சி’ ஆட்சியில் இருப்பதுபற்றியும் சொல்லி நக்கலடிக்கத் தவறவில்லை. இந்தமாதிரியான நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் வருகிறதா தெரியவில்லை. நானிருந்தபோது இல்லை. இப்போது வந்திருக்கலாம்! சந்தேகந்தான்.

சரி ஜொன் ஸ்டூவர்டுக்கே வருகிறேன். இவ்வருட ஆஸ்கர் விழாவை ஒருங்கிணைத்து நடாத்தப்போகிறவர் ஜொன் ஸ்டூவர்ட். முதன்முறையாக நடாத்த வருகிறார். போன வருடம் நிகழ்ச்சியை நடாத்திய க்ரிஸ் ரொக்’ஐ ஆஸ்கர் கமிட்டி திரும்ப அழைக்கவில்லை. இவர்கள் அழைத்த பில்லி க்ரிஸ்டல் வர மறுத்துவிட்ட நிலையில் ஜொன் ஸ்டூவர்ட். திரைப்படங்களில் பெரிதும் சோபிக்கவில்லையென்றாலும் சின்னத்திரையின் பெரிய நட்சத்திரங்களுள் இவரும் ஒருவர். இவரும் இவருடைய குழுவினரும் என்னமாதிரியான நிகழ்ச்சியைத் தரப்போகிறார்கள் என்று இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.