King Kong (2005)

கிங் கொங்கை பார்வையாளர்கள் நம்புகிறார்கள் என்றால், கிங் கொங்கிற்காக தங்களையும் மீறி திரையரங்கில் சத்தம் எழுப்புகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் நாவோமி வோட்ஸ்.
Lord of the Rings Triologyக்குப் பிறகு
பீட்டர் ஜாஸ்சனின் படங்கள் மூன்று மணித்தியாலத்து மேல் ஓடுவது பெரிய விதயமல்ல.
முதல் அரைமணி நேரம் முப்பதுகளின் நீயூயோர்க் நகரமும் அங்கே வசிக்கும் மக்களும், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களும் காட்டப்படுகிறார்கள். நாவோமி வோட்ஸ், ஜாக் ப்ளாக் & ஏட்ரியன் ப்ரோடி ஆகியோரின் பாத்திரங்கள் எத்தகையது என்று அறிமுகப்படுத்தும் அந்த முதல் அரைமணி நேரம் கொஞ்சம் நீளந்தான். ஆனாலும், பாத்திரங்களின் குணாதிசியங்களைக் காட்ட அந்த அரைமணிநேரம் தேவைப்படுவதையும் ஒத்துக்கொள்ள வேண்டும். என்ன, கிங் கொங் திரையில் தோன்றும் தருணத்தைத் தான் எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோமே.
எல்லோரின் எதிர்பார்ப்பையும் பீட்டர் ஜாஸ்சன் எதிர்பார்த்ததைவிட நன்றாகவே பூர்த்தி செய்திருக்கிறார். லோர்ட் ஓஃப் த ரிங்க்ஸ் படங்களில் பயன்படுத்திய கணினி உத்திகள் இங்கே இன்னும் அருமையாக படமாக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும்., பிஜி-13 என்று சான்றிதழ் படத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். பத்துப் பதினொரு வயதுக்குக் குறைந்தவர்களைப் படத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டாம். கிங் கொங் இருக்கும் தீவில் வாழ்பவர்களாகக் காட்டப்படும் மனிதர்கள் குழந்தைகளைப் பயமுறுத்தலாம். அத்தீவில் வாழும் சில உயிரினங்களும் குழந்தைகளைப் பயமுறுத்தலாம்.
நாவோமி வோட்ஸை Mulholland Drive பலரது கவனத்துக் கொண்டு வந்த படமென்றால், கிங் கொங் அவரைச் சிறுவர்கள் பெரியவர்கள் என்று எல்லோரின் கவனத்திலும் பல நாட்கள் இருக்க வைக்கும் படம். நாவோமி வோட்ஸின் நடிப்பை, இங்கே பல காட்சிகளைச் சொல்லி சிலாகிக்கலாம். ஆனால் கதையை வெளியே சொன்ன பாவத்திற்கு ஆளாகவேண்டாம் என்று நினைப்பதால்.. ..
அதேபோல கவனத்தை ஈர்த்த இன்னொருவர் ஜாக் ப்ளாக். ப்ரூஸ் வில்லிஸ் ஜாக்கலாக நடித்த ‘The Jackal’ படத்தில்தான் ஜாக் ப்ளாக்கை முதன்முதல் கவனித்தேன். விழுந்து விழுந்து ஆயுதம் தயாரித்து, அந்த ஆயிதத்துக் பலியாகும் முதல் ஆளாக கவனத்தை ஈர்த்து, பரிதாபத்தையும் பெற்றவர். அதற்குப்பிறகு 2003இல் வந்த ‘The School of Rock’ படத்தில் நடித்த்தற்காக விருதுகள் வாங்கினாலும் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை. எனக்குப் பிடித்த ‘Shark Tale’ படத்தில் Lennyஆக ப்ளாக்தான் குரல் கொடுத்தார் என்பதுவும் ஆச்சரியமான செய்தியாகவே இருந்தது. ‘Mommy said not to hit’ வசனம் இங்கே அடிக்கடி நடித்துக் காட்டப்படும்.
கிங் கொங்கில் ஜாக் ப்ளாக்கின் நடிப்பைப் பார்த்தபிறகு அவரது ‘The School of Rock’ படத்தைப் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. One of these days..
Adrien Brody, நாடகாசிரியர் ஜாக் டிரிஸ்கோலாக நடித்திருக்கிறார். இந்தப் பாத்திரத்துக்கு ஏனைய நடிகர்களோடு போட்டிபோட வேண்டும் என்று ஏட்ரியன் ப்ரோடி நினைத்தாராம். அப்படியெல்லாம் இல்லை, ஜாக் டிரிஸ்கோல் பாத்திரத்துக்கு ஏட்ரியன் ப்ரோடியைத் தவிர வேறு யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொன்னார்களாம்.
லோர்ட் ஓஃப் த ரிங்க்ஸ் படங்களில் Gollumஆக நடித்த Andy Serkis இந்தப் படத்தில் கிங் கொங்காக நடித்திருக்கிறார்.
முதல் கிங் கொங் படம் வெளிவந்த 1933இல் நடப்பதாகவே பீட்டர் ஜாஸ்சன் படமெடுத்திருக்கிறார். கறுப்பு-வெள்ளையில் எடுக்கலாம் என்று சிலர் யோசனை சொன்னார்களாம். அப்படியில்லாமல் மங்கலாக இருக்கும் வர்ணம் உபயோகப்படுத்தி இருப்பது நன்றாகவே இருக்கிறது!
பீட்டர் ஜாஸ்சனுக்கு படம் எடுக்க முதலே சம்பளம் கொடுத்துவிட்டார்கள். 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தளவு பணம் ஒரு இயக்குநருக்கு, அதுவும் படத்தை இயக்குவதற்கு முதலே இப்போதுதான் கொடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தை எடுக்க ஆன செலவு 200 மில்லியன்.
ஒரு முறைக்குப் பல முறை பார்க்கலாம். நீங்களும் பார்த்தபிறகு விலாவாரியாக அலசுவோமே!!! என்ன சொல்றீங்க? அப்படியே இந்த வரு்ஷம் ஓஸ்கர் பரிந்துரையில் நாவோமி வோட்ஸின் பெயரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
http://www.kongisking.net/index.shtml



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (