October 20, 2005

Funny Face (1957)

Funny Face (1957)

ஓட்ரே ஹெப்பர்னின் ஆரம்ப காலப்படங்களில் ஒன்று! முப்பது சொச்சப்படங்களே நடித்திருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் ஓட்ரே ஹெப்பர்ன். பெல்ஜியம் நாட்டில் பிறந்தவரானாலும் தந்தை இங்கிலாந்தைச் சேர்ந்தவர். தாயாரோ பெல்ஜியம் நாட்டு பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர். இரண்டாம் உலகப்போரின்போது சிறிது காலம் வறுமையில் உழன்றார். அதுவே, அவரின் உடலமைப்புக்குக் காரணமாக இருந்தது. அப்போது பட்ட கஷ்டத்தாலோ என்னமோ அறுபதுகளில் இருந்து இப்போதைய ஆஞ்செலீனா ஜோலியைப்போல யூ.என். அமைப்பின் தூதுவராக இருந்துவந்தார்.

இங்கிலாந்தில் பாலே நடனம் பயின்றவண்ணம், விளம்பரங்களிலும் நடித்துவந்தார் ஓட்ரே ஹெப்பர்ன். அமெரிக்காவுக்குப் போகலாம் என்று முடிவு செய்து அமெரிக்காவுக்கு இடம் பெயன்ற ஓட்ரே ஹெப்பர்ன் ஓரிரு படங்களில் நடித்தார். ஆனால் பெரிதாகப் பேசப்படவில்லை. 1953ல் நடித்த ரோமன் ஹொலிடே அவரைப் புகழின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. ரோமன் ஹொலிடேவுக்குப் பிறகு வந்த சப்ரீனாவும் ஓட்ரே ஹெப்பனின் புகழை உயர்த்தியது. 1957இல் வந்த ·பன்னி ·பேஸ், ஓட்ரே ஹெப்பர்னின் ஆடல்பாடல்களைக் கொண்ட அருமையான படம். அதுவும் ·ப்ரெட் ஆஸ்டெய்ருடன்! இப்படத்துப் பாடல்கள் பல இன்னமும் இரசிக்கக்கூடியன.

“How Long Has This Been Going On?”, “Funny Face” 5/5, “Bonjour Paris”, “How To Be Lovely”, “Clap Yo’ Hands”, “‘S Wonderful” என்று இந்தப் படத்துப் பாடல்கள் மிகவும் அருமையானவை. கேட்பதற்கும் பார்ப்பதற்குந்தான்.

புத்தகக் கடையில் வேலை பார்க்கும் அறிவுஜீவி ஓட்ரே ஹெப்பர்ன், தன்னுடைய empathicalism தொடர்பாக அதில் புகழ்பெற்ற பேராசியரைச் சந்திக்க பாரீஸ் செல்ல விரும்புகிறார். அதை வைத்தே அவரை பாரீஸ¤க்கு போய்வர அழைக்கிறார் அந்த புகழ்பெற்ற புகைப்படக்காரர். புகைப்படக்காரர் டிக் அவேரியாக ·பிரெட் ஆஸ்டெய்ர். ·பாஷன் இதழ் ஆசிரியராக கே தொம்ப்ஸன். இந்தப் படத்தில் மட்டுந்தான் ஓட்ரே ஹப்பர்ன் தன்னுடைய சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். புகழ்பெற்ற ‘My Fair Lady’இல் ஓட்ரே ஹெப்பர்னின் குரல் டப் செய்யப்பட்டது. இதில் ஓட்ரேவுக்கு நீண்ட நாள் வருத்தமிருந்தது. ·பன்னி ·பேசில் ·பிரெட் ஆஸ்டெய்ரும் இந்ததால் நடனங்களுக்கும் குறைவில்லை.

பாரீஸ¤க்குச் சென்றவர்களுக்கு என்ன நடந்தது. ‘Empathicalism’இல் புகழ்பெற்ற அந்த பேராசிரியரைச் சந்திக்கிறார்களா? என்ன நடக்கிறது. புகைப்படங்களை ஒழுங்காக எடுத்து முடித்தார்களா? கூடவே அதி முக்கியக் கேள்வியான புகைப்படக்காரரான டிக் ஏவரியும் ஓட்ரே ஹெப்பர்னின் பாத்திரமான ஜோ ஸ்டொக்டனும் காதல் வயப்பட்டார்களா? அவர்களின் காதல் வெற்றிகரமாக இருந்ததா? என்றெல்லாம் நீங்களே படத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்களேன்.

கதையென்று பெரிதாக எதையும் சொல்லிவிட முடியாவிட்டாலும் அந்த ஆடல்/பாடல் காட்சிகளுக்காகவே பார்க்கலாம். And also for Audrey costumes! By none other than Givenchy. :)