August 31, 2005

Green Card (1990)

Gerard Depardieu என்ற ஃபிரெஞ்சு நடிகரும், ஆண்டி மாக்டோவல் என்னும் அமெரிக்க நடிகையும் நடித்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, இயக்கம்:பீட்டர் வெய்ர்

தாவரங்களை நேசிக்கும், வளர்க்கும் ஆண்டி மாக்டோவலுக்கு, மான்ஹாட்டனில் ஒரு அப்பார்மெண்ட் வாடகைக்கு கிடைக்கிறது. அந்த இடம் ஆண்டிக்கு மிகவும் பிடித்து விடுகிறது. காரணம் அந்த வீட்டில் இருக்கும் பெரிய solarium. ஆனால், அதில் ஒரு சிறிய சிக்கல், திருமணமானவர்களுக்கு மட்டும்தான் வீடு வாடகைக்குத் தரப்படும் என்ற சொல்லி விடுகிறார்கள்.

அதே நேரத்தில் இசைத்துறையில் ஈடுபட்டிருக்கும் ஜெரார்டிற்கு அமெரிக்காவில் தங்கும் விசா முடிந்து விட்டது. இனியும் தங்க வேண்டுமென்றால் ஏதாவது வழி செய்தாகவேண்டும்.

ஆண்டியையும், ஜெரார்டையும் இருவருக்கும் பொதுவான ஒரு நண்பர் அறிமுகப்படுத்தி வைக்கிறார். இருவரும் தத்தம் பிரச்சினைகளைத் தீர்க்க திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர்.

(more…)

August 4, 2005

LA Confidential(1997)

1997-இல் பதினொரு ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இரண்டு விருதுகளை (best supporting actress- Kim Basinger, Best adapted Screenplay) வென்றது “எல்.ஏ.கான்ஃபிடென்ஷியல்”L A Confidential. ரஸ்ஸல் குரோ, கெவின் ஸ்பேசி, (G)கை பியர்ஸ், கிம் பாசிங்கர் மற்றும் டானி டெவிட்டோ ஆகியோர் நடித்துள்ளனர்.

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் இருந்த லாஸ் ஏஞ்சலஸ் நகரம்தான் களம். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து சகஜநிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பல கொலை கொள்ளைகளும் நடந்தன. அதே காலகட்டத்தில் ‘கான்ஃபிடென்ஷியல்’ என்ற பரபரப்புச் செய்திகள் அடங்கிய இதழும் வெளிவந்தது. சில நீதிமன்ற வழக்குகளால் நொடித்துப் போன அந்தப் பத்திரிகையை அடியொட்டி இந்தப் படத்தில் வரும் பத்திரிகைதான் ஹஷ்-ஹஷ். இதன் ஆசிரியர் சிட் ஹட்ஜென்ஸ் (டானி டெவீட்டோ). அந்தக் காலகட்டத்தில் லாஸ் ஏஞ்சலஸ் நகர போலீஸ் எப்படி இருந்தது, மேயர் போன்றவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதையும் இந்தப் படத்தில் நாம் காணலாம்.

(more…)

My Big Fat Greek Wedding

இப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளில் பிற கலாசாரங்கள் பற்றிய படங்கள் பெருகிவிட்டன. இங்கிலாந்தில் சக்கை போடு போட்ட ‘Bend it Like Beckam’ படம் Fox நிறுவனத்தினால் அமெரிக்காவில் வெளியிடப்படுகின்றது. பல இந்தியப் படங்களுக்கு நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் விமர்சனம் எழுதுகின்றார்கள். தேவதாஸ் போன்ற படங்கள் மான்ரியலில், அதிக விலைக்கு டிக்கட் விற்கும் திரையரங்கில் திரையிடப்படுகிறது. தமிழர்களுக்காக, தனித் திரையரங்கில் புதுப்படங்கள் வெளியாவது வேறு கதை. 2001-ஆம் ஆண்டு மான்ரியலில் நடந்த திரைப்பட விழாவிற்கு வந்த ‘அலைபாயுதே’ படத்தின் ஸ்டில் இங்குள்ள முக்கிய ஆங்கிலப் பத்திரிகையில் மூன்றில் ஒரு பக்கத்தை நிரப்பியது. இங்கிருக்கும் கேபிள் தொலைக்காட்சியில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதுப்படங்களை தேர்ந்தெடுத்து அவற்றை வாரத்திற்கு 2-3 தரம் திரையிடுவார்களாம். அப்படி அவர்கள் திரையிட்ட படங்களில் ஒன்று ‘பம்பாய்’ (தமிழில்).

(more…)