காந்தகார் - ஒரு சந்தேகம்

பல மாதங்களாக எனக்கிருந்த சந்தேகமொன்றிற்கு இங்கே விடை கிடைக்கலாம் என்று நினைக்கிறேன். உங்களில் பலர் காந்தகார் திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள். ஈரானிய இயக்குநர் Mohsen Makhmalbaf இயக்கத்தில் Nelofer Pazira என்ற கனேடிய-ஆப்கானிஸ்தான் பெண் நடித்த படம். நிஜக் கதையைப் படமாக்கியிருந்தார்கள். குறைசொல்ல நிறைய விஷயங்கள் இருந்தாலும், ஆப்கானிஸ்தானில் பெண்கள் நிலை எப்படி இருக்கிறது என்று நான் முதன்முதலில் பார்த்த படம்.
என்னுடைய சந்தேகம் இதுதான். படத்தில், பாலைவனத்தில் ஓரிடத்தில் கூடாரங்கள் அமைத்து செயற்கைக்கால்கள் வழங்குவார்கள் இல்லையா? பல ஆண்கள் அங்கே சென்று தமக்காகவும் தம் உறவினருக்காகவும் என்று கால்களை வாங்கிக்கொள்வார்களே? அந்தக் கட்டத்தில் ஒரு காட்சியில் விமானத்திலிருந்து கால்கள் சின்ன பாரசூட் உதவியோடு கீழிறங்குமே. ஆட்களெல்லோரும் கும்பலாகப் அந்தக் கால்கள் விழுமிடங்களை நோக்கிச் செல்வார்கள். அந்த நேரத்தில் பிண்ணனியில் ஒரு பாட்டு ஒலிக்கும். அந்தப் பாட்டை யாராவது கேட்டிருக்கிறீர்களா? முதன்முறை நூலகத்திலிருந்து வீடியோப் பிரதி வாங்கிவந்து போட்டதும் என்னால் நம்பவே முடியவில்லை. Mohammad Reza Darvishi என்பவர் இசையமைத்திருப்பதாகத் தெரிகிறது.
அந்தப் பாடல் வரிகள் சத்யசாயி பாபாவையோ சிவபெருமானையோ பாடுவதுபோல வருகிறது. வீடியோப் பிரதியில் பார்த்து என்னடா என்று இருந்தது. பிறகு, டிசம்பர் மாதம் டிவிடிப் பிரதி கைக்குக் கிடைத்ததும் Nelofer Paziraவின் கருத்தைக் கேட்க, அவசர அவசரமாக நான் மேலே சொன்ன காட்சிக்குத் தள்ளிக்கொண்டு போனேன். Paziraவும் ஏதும் சொல்லவில்லை. ஆனால், டிவிடிப் பிரதியிலும் அதே பாடல். பெண்கள் குழுவொன்று வட இந்தியப் பாணியில் பாடும் பாடல்.
இந்தப் பாடல் இந்தப் படத்தில் எப்படி வந்தது? இசையமைப்பாளர் வெளிதேசத்துக் காரரா தெரியாமல் குழப்பம் நேர்ந்துவிட்டதா என்று இசையமைப்பாளர் யார் என்று தேடினால் கிடைத்த விடை Mohammad Reza Darvishi. வேண்டுமென்றே செய்தார்களா? நூலகத்தில் இருக்கும் என் தோழியிடம் இதுகுறித்துப் பேசியதில் அவளுக்கும் ஆச்சரியம்.
எங்களுடைய சந்தேகத்திற்கு விடை கிடைக்குமா?



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (