January 25, 2005

ஆஸ்கர் விருது: பரிந்துரைகள்

ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைகளை இன்று அறிவித்திருக்கிறார்கள்.

BEST PICTURE

THE AVIATOR
FINDING NEVERLAND
MILLION DOLLAR BABY
RAY
SIDEWAYS

அருமையான படங்களை இவ்வாண்டு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். விரிவாக வரும் நாட்களில் எழுத உத்தேசம்.

ACTOR IN A LEADING ROLE

Don Cheadle - HOTEL RWANDA
Johnny Depp - FINDING NEVERLAND
Leonardo DiCaprio - THE AVIATOR
Clint Eastwood - MILLION DOLLAR BABY
Jamie Foxx - RAY

இந்தப் பிரிவில் போட்டியிடும் ஐந்துபேரும் நல்ல நடிகர்கள். இதில் ஜேமி ·பொக்ஸ்’ஐ மட்டுமே ‘ரே’யில் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். Rwandaவை மறந்து இப்போதும் தெரியாது என்று சொல்லிக்கொள்ளும் அமெரிக்கர்கள் அதற்குப் பிராயச்சித்தம் என்று ஏதும் செய்யக் கூடாது என்று தோன்றுகிறது. Johnny Depp, Leonardo DiCaprio, Clint Eastwood என்று திறமையான நடிகர்கள் போட்டியிடும் இப்பிரிவில் யார் வெற்றி பெறப்போகிறார்கள்? சுவாரசியமான தேர்வுகள்.

ACTOR IN A SUPPORTING ROLE

Alan Alda - THE AVIATOR
Thomas Haden Church - SIDEWAYS
Jamie Foxx - COLLATERAL
Morgan Freeman - MILLION DOLLAR BABY
Clive Owen - CLOSER

கடந்த இரண்டு மாதங்களாக திரைப்படங்கள் அவ்வளவு பார்க்காதது இப்போது உறைக்கிறது. மேலே இருக்கும் பட்டியலில் Jamie Foxxஐ Collateral திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன். Jamie Foxx மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பிய படம் இது. பட்டியலில் இருக்கும் மற்ற நடிகர்களும் நல்ல தேர்வு என்று தோன்றுகிறது. வரும் மாதங்களில் இந்தத் திரைப்படங்களைப் பார்க்க வேண்டும். Croupier திரைப்படத்தில் நடித்த Clive Owenஐ இப்பட்டியலிக் காண்பது சந்தோஷமாக இருக்கிறது.

ACTRESS IN A LEADING ROLE

Annette Bening - BEING JULIA
Catalina Sandino Moreno - MARIA FULL OF GRACE
Imelda Staunton - VERA DRAKE
Hilary Swank - MILLION DOLLAR BABY
Kate Winslet - ETERNAL SUNSHINE OF THE SPOTLESS MIND

நடிகர்கள் பட்டியலுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல சிறந்த நடிகைக்கான பட்டியல். எப்போதாவது நடிக்கும் Annette Bening. Annette Beningகும் Hilary Swankஉம் அப்படி என்ன உறவோ தெரியவில்லை. இருவரும் மறுபடியும் போட்டியிடுகிறார்கள். Kate Winslet, Leonardo DiCaprioபோலக் கஷ்டப் படவில்லை. அவருடைய Titanic image அவரை அவ்வளவு தொந்தரவு செய்வதில்லை. Maria Full of Grace நல்ல தேர்வு.

ACTRESS IN A SUPPORTING ROLE

Cate Blanchett - THE AVIATOR
Laura Linney - KINSEY
Virginia Madsen - SIDEWAYS
Sophie Okonedo - HOTEL RWANDA
Natalie Portman - CLOSER

Natalie Portmanஇன் நடிப்பை பலரும் பேசிக்கேட்டிருக்கிறேன். Cate Blanchett, Laura Linney, Virginia Madsen என்று நல்ல பட்டியல்.

DIRECTING

THE AVIATOR
MILLION DOLLAR BABY
RAY
SIDEWAYS
VERA DRAKE

DOCUMENTARY FEATURE

BORN INTO BROTHELS
THE STORY OF THE WEEPING CAMEL
SUPER SIZE ME
TUPAC: RESURRECTION
TWIST OF FAITH

மக்களின் கவனத்தை செய்திப்படங்களின் பால் திருப்பியது மைக்கேல் மூர் செய்த இன்னுமொரு நல்ல விஷயம். மேலே இருக்கும் படங்களில் Super Size Me ஏறக்குறைய அவருடைய பாணியிலேயே எடுக்கப் பட்டிருக்கிறது.

FILM EDITING

THE AVIATOR
COLLATERAL
FINDING NEVERLAND
MILLION DOLLAR BABY
RAY

WRITING (ADAPTED SCREENPLAY)

BEFORE SUNSET
FINDING NEVERLAND
MILLION DOLLAR BABY
THE MOTORCYCLE DIARIES
SIDEWAYS

WRITING (ORIGINAL SCREENPLAY)

THE AVIATOR
ETERNAL SUNSHINE OF THE SPOTLESS MIND
HOTEL RWANDA
THE INCREDIBLES
VERA DRAKE

புகைப்படங்கள், சிறுகுறிப்புகளோடு இன்றிரவு எழுத உத்தேசம்