‘God Father’ is no more


Movietalk தமிழில்..


Salinui chueok [Memories of Murder] (2003)
Se7en படத்தைப்போல இதுவுமொரு தொடர்கொலைகளைப்பற்றிய கொரியத் திரைப்படம். Bong Joon-Ho இயக்கியிருக்கிறார். இப்போது தொலைக்காட்சிகளெங்கும் பரவிக்கிடக்கும் காவல்துறை விசாரணைத்தொடர்களைப்போலவே இந்தப் படமும் சிறுநகரத்து போலீசாரைத் தொடர்கிறதென்றாலும், இயக்குநரின் அணுகுமுறை படத்தை வித்தியாசப்படுத்திக்காட்டுகிறது. சின்னச்சின்னக் காட்சிகளினூடாக 80-90களின் கொரிய சமூகத்தை, அரசாங்கத்தை, காவல்துறையை அறிமுகம் செய்து செல்கிறார். இந்தக் காட்சிகள், இந்தப் படத்தைத் தவறவிடக்கூடாததாக ஆக்குகிறது. (0)
Riri Shushu no subete [All About Lily Chou-Chou] (2001)
A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (1)