Troy (2004)
சமாதானம் பேசப்போன மகன்களில் ஒருவன் போன இடத்தில், அந்த நாட்டு ராணியோடு திரும்புகிறான். அவனுடைய அண்ணன் விஷயம் தெரிந்ததும் அவளைத் திரும்பக் கொண்டுபோய் விட்டுவிடலாம் எனச் சொல்கிறான். தம்பி முடியவே முடியாதென்று கூற, இருவரும் நாடு திரும்புகிறார்கள். அதற்கிடையில் மனைவியைப் பறிகொடுத்த அரசன் தன் அண்ணனிடம் உதவி கேட்கவும் சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்த அவனுடைய அண்ணன் சுற்றுப்புற நேச நாட்டுப் படைகளைத் திரட்டி, அந்த சகோதரர்கள் நாட்டின்மீது படையெடுக்கிறான். இவர்களோடு, இவர்களின் வேண்டுகோளை ஏற்று, யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாத ஒரு மாவீரனும் அவன் படைகளோடு தனிக்கப்பலில் சேர்ந்துகொள்கிறான். அதற்குமுன்பு, சகோதரர்கள் இருவரும், தம்பி அழைத்து வந்த பெண்ணோடு, நாட்டுக்குத் திரும்பி, அவர்களின் தந்தையைச் சந்திக்கிறார்கள். இளையமகன் செய்தது தவறென்றாலும், அவன் அப்பெண்ணை நேசிப்பதைத் தாம் உடனே உணர்ந்ததாக தந்தை மூத்தவனிடம் சொல்கிறார். கப்பல்கள் முற்றுகையிடுவதை அறிந்துகொண்ட எதிராளிகள் போருக்கு ஆயத்தமாகிறார்கள்.



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (