Kill Bill I & II (2003, 2004)
ஒரு நிறைமாதக் கற்பிணி அவளுடைய திருமண ஒத்திகையின்போது சுடப்படுகிறாள். அவளுடைய குழந்தையும், திருமண ஒத்திகைக்கு வந்திருந்த தோழிகள், சர்ச் பாதிரியார், அவரின் மனைவி, பியானோ வாசிப்பாளர் மற்றும் அவளுடைய கணவனாகப் போகிறவன் அனைவரும் இறக்கிறார்கள். இவள் மட்டும் ஐந்து வருடம் கோமாவில் இருக்கிறாள்.
கோமாவில் இருந்து விழிக்கும்போதே பிரச்சனைகளை எதிர்கொள்ளும் Beatrice Kiddo, தன்னைச் சுட்டவர்களை ஒவ்வொன்றாகப் பழிவாங்கும் கதையே Kill Bill part I & II. பில்(David Carradine)இன் அறுவர் அடங்கிய கொலைப்படையில் முக்கியமான ஆள் இந்த பியாட்ரிக்ஸ். ஒரு நாள் கொலைத்தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, பெயரை எல்லாம் மாற்றிக்கொண்டு, டெக்சாஸில் ஏதோ ஒரு சின்ன சர்ச்சில் திருமணம் செய்ய விழைகிறாள். அந்தத் திருமண ஒத்திகையின்போதுதான் பில்லும் அவனது ஆட்கள் - Vernita Green (Vivica A. Fox), O-Ren Ishii (Lucy Liu), Budd (Michael Madsen), மற்றும் Elle Driver (Darryl Hannah) ஆகியோர் அனைவரையும் தீர்த்துக் கட்டுகின்றனர்.
முதல் பாகத்தில் திருமணம் செய்துகொண்டு குழந்தை குட்டி என்று வாழும் வேர்னிட்டா கிரீனையும், ஜப்பானிய மா·பியா கும்பல் தலைவியாக ர்ருக்கும் ஓ-ரென் இஷீ’ஐயும் பழி வாங்குகிறாள். இரண்டாம் பாகத்தில் மீதி இருக்கும் மூவரையும் ஒரு வழி செய்கிறாள்.
நீங்கள் சண்டைப் பிரியர் என்றால், சமீபத்தில் வந்த படங்களிலேயே இதுதான் மிகவும் சிறந்தப்படம் என்று சொல்வீர்கள். முதலாம் பாகத்தில், ஜப்பானிய கத்திச் சண்டை, இன்னபிற கராத்தே போன்ற சண்டைகள் இடம்பெற்றிருந்தன. அதுவும் ஜப்பானிய கொலைக்கும்பல்களைத் தீர்த்துக் கட்டும் இடம் தியேட்டரே இரத்த வெள்ளத்தில் மிதக்கிறது.
முதல் பாகத்தில் எனக்குப் பிடித்த காட்சி, ஜப்பானில் ஒக்கினாவா தீவிற்குச் சென்று Hattori Hanzo(Sonny Chiba) விடம் வாள் செய்விக்கும் கட்டம். ஆரம்பத்தில் இழையோடும் நகைச்சுவையும், பியாட்ரிக்ஸ் மீது ஹட்டோரி ஹன்zசோ படிப்படியாக மரியாதை வைக்கும் காட்சிகளும் நன்றாக இருந்தன.
அதேபோல ஜப்பானிய தோட்டத்தில் பனியில் ஓ-ரென் இஷீயும் பியாட்ரிக்ஸ¤ம் சண்டைபோடும் காட்சியும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
முதலாம் பாகத்தில் சில நிமிடங்களே வந்துபோன திருமண ஒத்திகைக் காட்சி விலாவாரியாகக் காட்டப்படுகிறது. முதலாம் பாகம் கிழக்காசியாவில் நடந்ததென்றால், இரண்டாம் பகுதி அமெரிக்காவின் கௌ-பாய் பிரதேசத்தில் நடைபெறுகிறது. முதலாம் பாகத்தில் மொத்தமாக வசனம் இடம்பெற்ற காட்சிகள் ஏறக்குறைய ஒரு முப்பது நிமிடங்கள் என்றால், இரண்டாம் பாகத்தில் பியட்ரிஸ¤ம் மற்றவர்களும் வார்த்தைச் சண்டையும் போட்டுக் கொள்கிறார்கள். முக்கியமாக பில்-பியாட்ரிக்ஸ் பேசும் காட்சிகள் அருமை. ஓரிடத்தில் பில் தனக்கு காமிக்ஸ் ஹீரோக்களில் மிகவும் பிடித்தது சூப்பர்-மேன் என்று சொல்லி, ஏன் என்றும் விளக்குவார். அந்த ஒரு காட்சிக்காகவே, இத்திரைப்படம் காசட்டில் வரும்போது பார்க்கவிருக்கிறேன்.
இந்தப் பட இயக்குனர் Quentin Tarantino இதுவரை ஐந்தாறு படங்களே இயக்கியிருக்கிறார். ஆனால், சினிமாத்துறையினர் இவரைப்பெரிதும் மதிக்கிறார்கள். கு·பூ படங்கள். அமெரிக்க வெஸ்டேர்ன் படங்கள் என்று தமக்குப் பிடித்த படங்களை முன்மாதிரியாக வைத்து இந்தப் படங்களில் அவரைக் கவர்ந்த படக் காட்சிகளை Kill Bill I & IIஇல் வைத்திருக்கிறார். நான் பெருமளவு சண்டைப்படங்கள் பார்த்திராததினால், விலாவாரியாக அலச முடியவில்லை.
படத்தில் நடித்திருக்கும் அனைவரும் பாராட்டிற்குரியவர்கள் என்றாலும் பெண்கள் கவனத்தை ஈர்க்கிறார்கள். ஜப்பானிய கொலைக்கும்பலில் வரும் டீன்-ஏஜ் பெண், ஓ-ரென் ஈஷியாக நடித்திருக்கும் Lucy Liu, Elle Driverஆக நடித்திருக்கும் Darryl Hannah. Tarantinoவோடு சேர்ந்து திரைக்கதை அமைத்திருக்கும் Uma Thurman அருமையாகச் செய்திருக்கிறார்.
Beatrice Kiddo பல வருடங்கள் நினைவில் இருப்பாள்.







A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (