The English Patient (1996)
இரண்டாம் உலகப்போர் முடியும் காலகட்டம். இடம் - இத்தாலி. போரில் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்றுவருபவர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கூட்டிக்கொண்டு போகிறார்கள். நோயாளிகளில் ஒருவன், English Patient என்றழைக்கப்படுகிறான். தீயில் கருகி, இன்றோ நாளையோ என்று இருக்கும் அவனை பார்த்துக்கொள்வது கனடாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருத்தி, பெயர் ஹானா. வழியில் கண்ணி
வெடியில் இவர்களின் வாகனமொன்று அகப்பட்டுக்கொள்ள, பயணம் தடைப்படுகிறது. அருகில் இருக்கும் ஆளில்லாத, கைவிடப்பட்ட கிறிஸ்தவ மடாலயத்தில் தன்னையும் அந்த நோயாளியையும் விட்டுவிட்டுப்போகச் சொல்கிறாள் ஹானா. நோயாளிக்கான மருந்துகளும், வலிக்கான மோர்பீனும் கொண்டு மடாலயத்துள் நுழைகிறாள்.
தான் அன்பு செலுத்துபவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக இறப்பதால், தான் எல்லோருக்கும் பிடித்த கேடு என்று சொல்லும்/நினைக்கும், வாழ்க்கையை இரசிக்கும் பெண் ஹானா. படுத்த படுக்கையாக, உடல் முழுவதும் உருத்தெரியாமல் அழிந்து, முகம்கூட இல்லாத சாகக்கிடக்கும் மனிதன் அந்த The English Patient. பழைய நினைவுகளைத் தொலைத்துவிட்டு உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக்கொண்டிருக்கும் அந்த மனிதனும், பழைய நினைவுகளை விட்டுவிட முடியாமல், பிரச்சினையான காலகட்டத்திலும் வாழ்க்கையின் சின்னச் சின்ன சுகங்களை தேடி அனுபவி
க்கும், வாழ்க்கையை இரசிக்கும் ஹானாவும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கின்றனர்.
தீயில் எரிந்து கிடந்தபோது காப்பாற்றப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மனிதனின் டயரியை ஹானா படிக்கப்படிக்க அவனுக்கு பழைய நினைவுகள் திரும்புகின்றன. The
English Patient என்றழைக்கப்படும் அவன், உண்மையில் ஹங்கேரி நாட்டுப் பிரபுக் குடும்பத்தைச் சேர்ந்தவன். உலகப்போருக்கு முன்பே எகிப்தில் இங்கிலாந்து Royal Societyக்காக விமானத்தில் பறந்து பறந்து மத்தியகிழக்காசிய நாடுகளின் வரைபடத்தை உருவாக்கிக்கொண்டிருப்பவன். ஆய்வுகளுக்காக என்று சொல்லப்பட்டாலும், அந்த வரைபடங்கள் இங்கிலாந்து படைவீரர்களுக்கு உதவியாக இருந்தது.
இடத்திற்கு இடம் சென்று வரைபடங்களை உருவாக்கும் இவர்களோடு ஆங்கில ஜோடி ஒன்று வந்து சேருகிறது. நமது ஹங்கேரிய பிரபு Laszlo de Almasyக்கும் Katharine Cliftonக்கும் பஞ்சும் நெருப்பும்போல காதல் பற்றிக்கொள்கிறது. போர் மேகங்கள் சூழ, தங்கள் தனியுலகில் கிடக்கும் காதலர்களுக்கு என்ன நடக்கிறது, ஏன் Laszlo de Almasyயும் காத்தரின் கிளி·ப்டனும் பறந்துவந்த விமானம் வேண்டுமென்றே தரையில் மோதியது, அப்போது தீக்காயம்பட்ட ஆல்மாசியை, Caravaggio என்ற திருடன்
(கனடாவைச் சேர்ந்தவன், திடீரென்று எங்கிருந்தோ வந்து மடாலயத்தில்
தங்குபவன்) அடியோடு வெறுக்கிறான் என்பது, கிளி·ப்டனின் கணவனுக்கு என்ன ஆனது என்பதெல்லாம் ஹானா வாசித்துக்காட்டும் நாட்குறிப்பிலி
ருந்தும், அதைக்கேட்கும்போதெல்லாம் அல்மாசியின் கண் முன் விரியும் இறந்தகால நிகழ்வுகளிலிருந்தும் தெரிகிறது.
அல்மாசி பழைய நினைவுகளைக் கொஞ்சங்கொஞ்சமாக மீட்டுக்கொண்டிருக்கும்போது மடலாயத்துக்கு இன்னும் இரண்டு பேர் வந்து சேர்கிறார்கள். குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்களான Kip என்றழைக்கப்படும் சீக்கியர் ஒருவனும், அவனுடைய கூட்டாளியும். அன்பு வைத்தவர்களை போரில் பறிகொடுத்த ஹானாவும் கிப்பும் அழகாக,
மெதுவாக தங்களையும் அறியாமல் காதல் வயப்படுகின்றனர். (இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று கேட்ட மனச்சாட்சியை, பொருட்படுத்தாமல் படத்தில் ஆழ்ந்துபோனேன்).
மூன்றரை மணித்தியாலம் ஓடும் இந்தப்படத்தில் பல அருமையான காட்சிகள் இருக்கின்றன. இந்தப்படத்தைப் பலமுறை பார்த்தாலும், ஒவ்வொரு முறையும் தொண்டை அடைத்துக்கொள்ளும். இந்த ஒரு படம் என்னைத் தீவிர Ralph Fiennes ரசிகையாக்கிற்று. இவரின் படங்களையெல்லாம் தேடித்தேடிப்பார்த்தேன். The quiz show போன்ற சில நல்ல படங்களில் நடித்திருந்தாலும், பலர் மனதில் நிற்பது Shindlers List படம்தான். நல்ல நடிப்பாற்றல் பெற்ற இவர் ஏன் The maid in Manhatten போன்ற
படங்களில் எல்லாம் நடிக்கிறார் என்று தெரியவில்லை. ஹானாவாக நடித்த ஜூலியெட் பினோஷ் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த நடிகை. குழந்தைத்தனத்தையும், வாழ்க்கையின் சின்னச்சின்ன சந்தோஷங்களை தேடித்தேடி இரசிக்கும் ஹானாவின் மனோதைரியத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார், அந்த அழகான, ஆற்றல் மிகுந்த பிரெஞ்சு
நடிகை. இந்தப்படத்தின் மற்றொரு எதிர்பாராத அதிசயம் காத்தரின் கிளி·ப்டனாக நடிக்கும் Kristin Scott Thomas. பலத்த போட்டிக்கிடையே இவருக்கு இந்த வாய்ப்புக்கிடைத்தது. இவரையும் மற்றும் சில நடிகர்களையும் மாற்ற ஒத்துக்கொள்ளாததாலேயே கடைசி நிமிடத்தில் 20th Century Fox வெளியேறியது. இத்தாலியில் படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்று தெரியாமல் நடிக நடிகையர் விழித்துக்கொண்டிருக்கும்வேளையில் ஆபத்பாந்தவனாக களம் இறங்கியது Miramax. காத்தரின் கிளி·ப்டனின் கணவராக வரும் Colin Firth, கிப்’ஆக வரும் Naveen Andrews, Carvaggio’வாக வரும் Willem Defoe என்று அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
மனதில் நிற்கும் இசை, படப்பிடிப்பு என்று பல விஷயங்கள் இருந்தாலும்,
எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தியது Anthony Minghella. Michael Ondaatjeவின் Booker Prize வென்ற இந்த நாவலை பாராட்டத்தக்க வகையில் எடுத்திருக்கிறார். நாவலில் வரும் பல சுவாரசியமான பகுதிகள் படத்தில் இல்லையென்ற குற்றச்சாட்டு இருந்தாலும், நாவலைப்படிக்காதவர்களுக்கு இந்தப்படம் ஒரு அருமையான வி
ருந்து (என்று நினைக்கிறேன்).
Best Actress in a Supporting Role (Juliette Binoche), Best Art Direction-Set Decoration, Best Cinematography, Best Costume Design, Best Director, Best Film Editing, Best Music - Original Dramatic Score, Best Picture, Best Sound என்று ஒன்பது ஆஸ்கர்களை வென்று குவித்தது. Best Actor in a Leading Role (Ralph Fiennes), Best Actress in a
Leading Role (Kristin Scott Thomas), Best Writing, Screenplay Based on Material from Another Medium (Anthony Minghella) என்று மூன்று ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கவும் பட்டது. இது தவிர எண்ணிலங்காத பல விருதுகளை வென்று குவித்திருக்கிறது The English Patient.
பின் குறிப்பு: The English Patient நாவலை எழுதிய Michael Odantje இலங்கையில் 1942ல் பிறந்து பல வருடங்களாக கனடாவில் வாழும் ஒரு burgher ஆவார். burgher - ஆங்கிலோ இந்தியர் போல.
பின் குறிப்பு: மைக்கேல் ஒடான்ட்ஜே’யின் இந்தக்கதையை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், இந்தப்படம் மனதிற்குப் பிடித்ததென்பதால் ஒத்திப்போட்டுக்கொண்டே இருக்கிறேன்.



A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (