September 24, 2003

Freaky Friday (2003)

freakyfriday.jpg

போனவாரம் கடைசி நிமிடத்தில் தோழியின் தொலைபேசி அழைப்புக்குப்பிறகு, 10 நிமிடத்தில் தயாராகி பாதாளரயில் வண்டியில் இன்னும் 10 நிமிடங்கள் பயணம் செய்து டைட்டில் கார்ட் போடுவதற்குமுன் சீட்டில் உட்கார்ந்த படம்.

Jamie Lee Curtis, Lindsay Lohan, Mark Hermon ஆகியோர் நடித்திருக்கின்றனர். 1970களில் இதே தலைப்பில் வந்த படத்தில் ரீமேக் இது.

கதை என்ன என்று கேட்கிறீர்களா?

மூன்று வருடங்களுக்கு முன் கணவர் இறந்து போக டீன் ஏஜரான மகளுடனும் ஏறக்குறைய பத்து வயதிருக்கும் மகனுடனும் கொஞ்சம் டமாரக்காது உடைய தகப்பனாருடனும் வாழ்ந்து வரும் மனோதத்துவ டாக்டர் ஜேமி. கூடவே சில தினங்களில் ஜேமி திருமணம் செய்துகொள்ள இருக்கும் ரையன்.

அம்மா தன்னை புரிந்து கொள்ளவில்லை, தன்னை விட எல்லாம் முக்கியம் என்று மனவேதனைப்படும் அன்னா பள்ளிக்கூடத்திலும் ஆசிரியர் ஒருவரால் பழிவாங்கப்படுகிறாள். அவரால் டிடென்ஷன் ரூமிற்கு அனுப்பப்படுகிறாள். அன்றே அவளுடைய முன்னாள் தோழியின் சதியால் மறுபடியும் டிடென்ஷன் ரூமிற்கு போகிறாள். இதற்கிடையே பள்ளியில் ஒருவனைப்பார்த்து ஜொள்ளும் விடுகிறாள். வீட்டில் தம்பியுடன் எலியும் பூனையுமாக இருக்கும் அவள் தன் அம்மாவால் தன்னுடைய வாழ்க்கையே பாழாகப்போகிறது என்று புலம்பிய வண்ணம் இருக்கிறாள்.

நிச்சயதார்த்தத்திற்கு சில நாட்களே இருக்கும்போது அன்னாவின் நடவடிக்கைகள் கட்டுக்கடங்காமல் போவது குறித்து கவலைப்படுகிறாள் அவளுடைய அம்மா டெஸ். இவர்களின் வாக்குவாதத்திற்கு இடையே அங்கு வரும் ரையன் அனைவரையும் அவர்கள் அனைவரும் செல்லும் சீன உணவகத்திற்கு அழைத்து செல்கிறான். அங்கும் அம்மா-மகளின் வாக்குவாதம் தொடர்கிறது. இதைக்கண்ட, இவர்களை நன்கறிந்த உணவக உரிமையாளரின் தாயார் ·பார்ச்சுன் குக்கியில் ஏதோ வைத்து இவர்கள் தனியாக இருக்கும்போது கொடுத்துவிடுகிறாள். அந்த சீனப்பெண்மணியை அங்கிருந்து விரட்டுவதற்காக குக்கியை பிரிப்பதாக சொல்லும் இருவரும் பிரிக்கும்போது என்ன நடக்கிறது. இவர்கள் இருவரும் மட்டுமே உணர்ந்த நிலநடுக்கம் நடக்கிறது.

நம்ப முடியாமல் இருக்கிறதா? இனித்தான் சுவாரசியமே! அடுத்த நாள் காலையில் விழித்து படுக்கையில் இருந்தபடியே அன்றைக்கு செய்யவேண்டிய வேலைகளைப்பட்டியல் இடும் டெஸ்சின் குரல் கேட்கிறது. ஆனால், நாம் அங்கே காண்பது அன்னாவை. பயந்து அலறி ஒரு வழியாக என்ன நடந்திருக்கும் என்று அவள் அமர்ந்திருக்கும்போது அன்னாவின் தம்பி அங்கு வந்து நிற்கிறான். அம்மா இறந்து விட்டாள் என்று கதறுகிறான். அன்னாவின் உடலில் இருக்கும் டெஸ், அன்னாவின் தம்பியுடன் டெஸ் உடலில் இருக்கும் அன்னாவுக்கு என்ன ஆயிற்று என்று பார்க்க ஓடுகிறாள். இந்த இடத்தில் இருந்து படம் அதிசுவாரசியமாக ஓடுகிறது. ஒருவர் உடலில் இருந்து மற்றவர் உடலுக்கு மாறும் அதரப்பழைய கதைதான் என்றாலும் அதை மிகவும் சுவாரசியமாக்குவது ஜேபி லீ கர்டிசின் நடிப்பு. உங்களில் எத்தனை பேருக்கு ‘அமெரிக்கன் பிரெசிடெண்ட்’ திரைப்படம் ஞாபகம் இருக்கும் என்று தெரியவில்லை. அதில் வந்த அன்னெட் பென்னிங்’தான் முதலில் டெஸ்ஸாக நடிப்பதாக இருந்தது. இரண்டு வாரங்கள் படப்பிடிப்பும் நடந்ததாம். மறுபடியும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு மூன்று நாட்கள் முன் வந்தவர்தான் ஜேமி லீ கர்டிஸ். இவருடைய படங்கள் பெரிய வரவேற்பு பெற்றிருக்காவிட்டாலும், எனக்கு இவரை பிடிக்கும். அதுவும் சில மாதங்களுக்கு முன் தைரியமாக நாற்பது வயதுகளில் இருக்கும் ஒரு பெண் எப்படி இருக்கிறாள். அவளுக்கும் வயதாகும் என்பதை எந்த விதமான கிம்மிக்ஸ¤ம் இல்லாமல் சாதாரண மேக்கப்புகளுடன் ஒரு பெண்கள் மாத இதழில் அட்டைப்பட கட்டுரையில் சொல்லி இருந்தார். முகத்தில் சுருக்கங்களே இருக்கக்கூடாது என்பதற்காக எதையெல்லாமோ செய்யும், சமீப காலமாக சாதாரண மகளிரும் botex என்னும் ஊசிமருந்தை முகத்தில் குத்திக்கொண்டு அரை மணிநேரத்தில் பார்ட்டிகளுக்கு செல்லும்போது இப்படி இவர் செய்தது பரவலாகப்பேசப்பட்டது.

freakyfriday2.jpg

சரி படத்திற்கு வருவோம். 40களில் இருக்கும் மனோதத்துவ வைத்தியரின் உடம்புக்குள் பதினாறு வயது மகள். கையில் உலகில் கிடைக்கக்கூடிய கிரெடிட் அட்டைகள் அத்தனையும், அம்மா முடியாது என்று சொல்லிக்கொண்டிருக்கும் காது மடல் துளையில் இருந்து எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதை நம்புமபடியாக, சுவாரசியமாக நகைச்சுவையாக செய்திருக்கிறார் ஜேமி. அவ்வப்போது இது நிஜ நாற்பது வயது பெண்மணி என்று நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுவே படத்தின் வெற்றிக்கு காரணம். மேற்கத்தைய நாடுகளில் பார்க்கக்கூடிய டீன் ஏஜ் மாணவியை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாற்பதுகளில் இருக்கும் ஜேமி. அவருடைய மகளாக நடிக்கும் லிண்சேவும் சோடை போகவில்லை. ஆரம்பத்தில் ஓவர் ஆக்டிங் என்று நினைக்கும்படி நடித்திருந்தாலும், பிறகு நடக்கப்போகும் விஷயங்களினால், முற்றிலும் மாறுபட்ட அடக்கமான, பண்பான 16 வயது பெண்ணாக வந்து, இரண்டிற்கும் வேறுபாடு காட்ட முயற்சித்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

தோழி அழைத்ததால் என்ன படம் என்ன ஏதென்று தெரியாமல் பயந்துகொண்டே போனேன். பிறகு ஜேமி லீ கர்டிஸ் நடிக்கிறார் என்றறிந்ததும் கொஞ்சம் நிம்மதியானேன். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை - ஜேமி லீ கர்டிஸ¤க்கு ஆஸ்கர் அவார்ட் கொடுக்கலாம் என்று விமர்சனம் எழுதி இருந்ததை அடுத்த நாள் படித்தேன்.

டைம் பாஸ்!!!

(08-13-2003)

September 5, 2003

And life goes on… (1992)

இதுவும் ஒரு ஈரான் நாட்டுப்படந்தான். இங்கு நடந்து கொண்டிருக்கும் திரைப்படவிழாவில் ஈரான் நாட்டு படங்களை வெளியிடுகிறார்கள். அதனால் நூலகங்களிலும் சில நல்ல வெளிநாட்டுப்படங்களை வாங்கி இருக்கிறார்கள். இத்திரைப்படம் அமெரிக்காவில் 1996 வெளியானபோது கொடுக்கப்பட்ட தலைப்பு - Life and nothing more.

andlifegoeson.gif

நண்பர் கிருபா (மரத்தடி) கேட்டுக்கொண்டதற்கிணங்க, இலங்கைத்தமிழில் விமர்சிக்க முயலுகிறேன். வழக்கமாக தரும் நீண்ட விமர்சனம் இந்தப்படத்திற்கு தரமுடியாது என்று நினைக்கிறேன். ‘ஆயிரம் வார்த்தைகள் ஒரு படத்திற்கு சமானம்’ என்பது இங்கும் பொருந்தும்.

ஈரான் நாட்டுக்காரரான அப்பாஸ் கியாரோஸ்டாமி (Abbas Kiarostami) ஒரு புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1987′ல் இவர் எடுத்த அருமையான படம் - ‘where is my friend’s home’ என்பது. லொகேஷனில் எடுக்கப்பட்ட படம் அது. அந்த இடத்தில இருந்த பெடியங்களை (பசங்க) வைத்து படம் எடுத்தவர். 1990இல் அந்த மலைப்பிரதேசத்தில இடத்தில பெரிய நிலநடுக்கம் நடந்து பெரிய சேதம். நிலநடுக்கம் நடந்த ரெண்டாம் நாள் இவரும் இவரின்ற ஏறக்குறைய பத்துப்பன்றெண்டு வயது மகனும் காரில வெளிக்கிட்டவை. அந்தப்பெடியங்களை பாத்து ஏதாவது உதவி செய்யத்தான் போகீனம். உண்மையா நடந்த கதை இது. என்னெண்டாலும் பெரிய டைரக்டரில்லே. அதனால தான் மட்டும்தனிய போகாம ஒரு படப்பிடிப்பு குழுவையும் பிடிச்சண்டு போனவர்.

போறவழியெல்லாம் சில இடங்களில போக முடியாம ஆபத்தான குறுக்குப்பாதைகளால போறெர். வழியெங்கயும் நிலநடுக்கத்தால ஏற்பட்ட சேதங்களை மக்கள் சரி செஞ்சண்டு இருந்திச்சினம். செத்தவைக்கு அழக்கூட நேரம், சக்தி இல்லாம இடிஞ்சு விழுந்த கட்டிடங்களை கிடியண்டு இருந்திச்சினம். பாக்கிற இடமெல்லாம் இரண்டு-மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த இயற்கையழிவு தாண்டவமாடினாலும், மக்கள் தத்தம் வாழ்க்கையை மறுபடியும் ஒரு வழிப்படுத்துவதில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில் நிலநடுக்கம் நடந்தது 1992ம் ஆண்டின் அகில உலக கால்பந்து விளையாட்டுப்போட்டியின்போது… ஓரிடத்தில் கொட்டாய்களில் தங்கியிருந்த மக்கள், கூப்பிடு தூரத்தில் அவர்களின் வீடுகள் இடிந்து கிட்ட, உறவினர்கள் இறந்திருக்க, ஆண்டனா பூட்டி விளையாட்டு பாக்கிறது தயாராகியண்டு இருந்திச்சினம். கால்பந்தாட்டப்பைத்தியமான இயக்குநரின் மகனும் அங்கே நிற்பதாகவும் திரும்பி வரும்போது கூட்டிப்போகும்படியும் சொல்லி இறங்கிவிட்டான். போகும் வழியில் குன்றின் உச்சியில் ஆண்டனா சரி செய்துகொண்டிருந்தவனிடம், இப்படி அழிவு நடந்து ஏராளமானவர்கள் இறந்திருக்கும் இந்த நேரத்தில் விளையாட்டு முக்கியமா என்று கேட்க, அவனோ தன்னுடைய குடும்பத்தில் இறந்து போனவர்களின் பட்டியலை ஒப்பிக்கிறான். இறந்தவர்கள் இறந்துவிட்டார்கள். மற்றவர்கள் வாழவேண்டுமல்லவா? நானும் எப்போது இறப்பேன் என்று தெரியாது. அதுவரை பயந்து கொண்டிருக்கமுடியாது எண்டு நிலநடுக்கத்துக்கு அடுத்த நாள் கல்யாணம் செஞ்ச ஒரு ஆள் சொல்லுறான்.

வழியெங்கும் வயது வித்தியாசமின்றி மனோதைரியம் நிறைந்த மக்களைக்காணுகிறோம். இதற்கிடையே சில பகிடிகளும் இல்லாமல் இல்லை. மலைப்பாதைகளில் பயணித்த கார், ஆங்காங்கே மக்களை ஏற்றி, பொருட்களை ஏற்றி உதவி செய்தது. அப்படி வழியில் கண்ட பெரியவர் ஒருவரை ஏற்றிக்கொண்டார் அப்பாஸ். மேற்குறிப்பிட்ட படத்தில் இவரும் நடித்திருப்பதாக சொல்லுகிறார் இயக்குநர். பெரியவர், அவருடைய ஊர் வந்ததும் இறங்கிக்கொள்ளுகிறார். தன்னுடைய மகனுக்கு குடுக்கத்தண்ணீர் இருக்குமா என்று கேட்க, அவர்களையும் அழைத்துக்கொண்டு போகிறார் அந்தப்பெரியவர். இடிபாடுகளுக்கு இடையில் இவருடைய வீடுமட்டும் கனகம்பீரமாக காட்சி அளிக்கிறது. அது மட்டும் இடிந்து போகாமல் இருப்பது ஆச்சரியம் என்று இயக்குநராக நடித்தவர் சொல்லிக்கொண்டே போக, அவர்கள் பேசுவதெல்லாம் அங்கேயே படப்பிடிப்பு இடத்திலேயே பேசப்பட்டதுதான். பிறகு சேர்க்கவில்லை என்பதை ஒரு சம்பவம் உணர்த்தியது. இயக்குநராக நடித்தவர் பேசிக்கொண்டே இருக்கும்போது பெரியவர் தனக்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டு படியேறியது பார்வையாளர்கள் காதில் தெளிவாக விழுந்தது. பெரியவர் அப்படி என்னதான் சொன்னார்? இந்த வீடு என்னுடையதில்லை. என்னுடைய வீடும் இடிந்து நான் இப்போது டெண்டு கொட்டாயில் தங்கி இருக்கிறேன். இந்த வீடு என்னுடைய வீடு என்று சொல்லச்சொன்னார்கள். அப்படியே சொல்லுகிறேன்.

முணுமுணுத்துக்கொண்டே மேலே ஏறியவர், தொடருகிறார். ‘வீடு என்னுடையது என்று சொல்லச்சொல்கிறார்கள். புகைப்படம்/வீடியோ எங்காவது பொய் சொல்லுமா? இந்த வீடு என்னுடையது என்றால் ஏன் எல்லாக்கதவுகளுக்கும் சாவிபோட்டு பூட்டி இருக்கிறார்கள்?’ இப்படி அலுப்பாக பேசிக்கொண்டே தண்ணீர் குழாயைத்தேடுகிறார் மேல் மாடி விறாந்தையில். மேலே பலகணியில் தண்ணீர் குழாயைக்கண்டு கொண்ட பெரியவருக்கு தண்ணீர் கொடுப்பதற்கான பாத்திரம் கிடைக்கவில்லை. அந்த பலகணியில் நின்று கொண்டு கீழே இருந்த புகைப்படக்குழுவினரைப்பார்த்து தண்ணீர் எப்படிக்கொடுப்பேன். பாத்திரம் எங்கே என்று கேட்�