Season Five (1997)
ரfபி பிட்ஸ் (Rafi Pitts) இயக்கத்தில் ரோயா நோனாஹாலி (Roya Nonahali), அலி சர்க்கானி (Ali Sarkhani) ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


இரானிய கிராமம் ஒன்றில் இரண்டு குடும்பங்கள் ஒருவரை மற்றவர் பகைத்துக்கொண்டு ஒருவரை மற்றவர் தாக்கிக்கொன்று வருகின்றனர். இந்த சண்டையால் அவதியுற்ற அந்த ஊர் மக்கள் கிராமத்தலைவரிடம் முறையிட அவரும் முன்னின்று இருகுடும்பத்திற்கு திருமண உறவேற்படுத்திக்கொடுக்கிறேன். ஜமால்வாண்டி குடும்பப்பெண்ணை கமால்வாண்டி குடும்ப ஆண் மணப்பதற்கு இருகுடும்பத்தாரும் சம்மதித்து திருமணம்வரை வந்துவிட்டனர். ஆனால் திருமண அரங்கில் ஊரே கூடியபிறகு, மணமகன் கராமத், இத்திருமணத்தினால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று சொல்லி வெளியேறுகிறான். மணப்பெண் ஒர் கணம் திகைத்து, பின் தானும் அவனை மணந்து பிறகு தொல்லை கொடுக்கலாம் என்ற முடிவோடு சம்மதித்ததாக கூறுகிறாள். திருமணம் தன்னெதிரிலேயே முறிந்ததைக் கண்ட கிராமத்தலைவருக்கு மாரடைப்பு வந்து அங்கேயே உயிர் பிரிகிறது.
மணமகன் ஊரைவிட்டே எங்கோ போய் விடுகிறான். மணமகளாக இருந்த மெஹர்பானு கிராமத்தில் எங்கு போனாலும் பரிகசிக்கப்பட்டாள், தனிமைப்படுத்தப்பட்டாள். தாய்தந்தை அற்ற அவளுக்கு இருக்கும் ஒரே துணை அவளது சகோதரனும், கூட இருக்கும் சில உறவினர்களுந்தான். ஆனால், தன்காலிலேயே நிற்கவேண்டிய நிற்பந்தம் அவளுக்கு. அதனால், அவளின் தாயார் விட்டுப்போயிருந்த நிலத்தை தானே பராமரித்து அதிலிருந்து வரும்பணத்தில் வாழ்ந்து வருகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய கோபம் அடங்கும் சமையத்தில் கராமத் ஊர் திரும்புகிறான். வந்தவன் சும்மா வரவில்லை. சிறு மினி பஸ்ஸை கிராமத்திலிருந்து பக்கத்தில் இருக்கும் நகரத்துக்கு மக்களை அழைத்து சென்று பணம் சம்பாதிக்கும் எண்ணத்தோடு வந்திருந்தான். கூடவே அவன் மினி பஸ் வாங்கிய நிறுவனபிரதிநிதியும். அந்த ஊர் மக்கள் அனைவரும், கமால்வாண்டி, ஜமால்வாண்டி இருகுடும்பத்தினரும் மினி பஸ்ஸை மிகவும் ஆச்சரியத்தோடு பார்த்து அதில் பயணமும் செய்தனர். முதல் நாள் தன் உறவினர் அனைவரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிடுகிறாள் மெஹர்பானு. அதுவரை வண்டிலில் மக்களை நகரத்திற்கு கொண்டுபோய்க்கொண்டிருந்த சகோதரனுக்கும் வேலை இல்லாததால், தனியரு ஆளாக அவளது அம்மாவின் நிலத்தை பராமரிக்கிறாள். அவ்வப்போது அவளுடைய நினைவிடத்திற்கும் போய் புலம்புகிறாள். கமால்வாண்டி குடும்பத்துடனான பகையை தொடரும்படி அப்போது சிறுமியாக இருந்த என்னை ஏன் கேட்டாய். இறந்துபோன அண்ணனின் முகம்கூட எனக்கு ஞாபகம் இல்லை. உறவினர்களும் எனக்கு கொம்பு சீவி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். திருமணம் நின்று போய்விட்டதே, என்ன செய்யலாம். எனக்கு வயதாகிறதே என்று யாருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை என்று கவலைப்படுகிறாள். இப்படி இருக்கும்போது கிராமத்தில் அங்காங்கே சந்தித்துக்கொள்ளுகிறார்கள் கராமத்தும் மெஹர்பானுவும். ஊர்மக்களால் தன்னுடைய சகோதரன் கேவலப்படுத்தப்படுவது பொறுக்காத மெஹர்பானு, நிலத்தை விற்று கராமத்’துடைய மினி பஸ் போலவே அவளுடைய சகோதரனுக்கும் வாங்கிக்கொடுக்கிறாள். இப்போது இருவருக்குமிடையிலான போட்டியில் பயணக்கட்டணத்தை குறைப்பது, இலவச சலுகைகள் அளிப்பது, நகரத்துக்கு போய்வரும் வழியில் அடிபடுவது என்று போட்டியுடன் வாழ்க்கை நகருகிறது. ஊர்மக்களும் சுவாரசியமாக இச்சண்டையை பார்த்துக்கொண்டு வருகிறார்கள். பொழுதுபோக வேண்டுமல்லவா? ஒரு முறை நகரத்தில் இருந்து வரும்போது நடந்த சண்டையில் இரு வண்டிகளும் மோதிக்கொண்டதில் இரண்டுமே உருக்குலைந்து போயின. ஊர் மக்கள் இரண்டுவண்டியிலும் போகாமல், நடராஜா சர்வீஸில் போனார்கள். இப்படியே போகப்போக, மெஹர்பானுவும் கராமத்தும் தங்களையறியாமல் ஒருவரை ஒருவர் விரும்பத்தொடங்கினார்கள்.
ஒரு நாள் நகரத்திற்கு சென்று திரும்பும் வேளையில் கராமத்தின் வண்டி சக்கரம் தனியே கழண்டு ஓடத்தொடங்கியது. வாகனமும் தறிகெட்டு ஓடியது. கிராமத்தில் அனைவரும் காத்துக்கொண்டிருந்தனர். இரவு முழுவதும் காத்திருந்தும் இரு வண்டிகளும் வரவில்லை. மறுநாள் ஒரு வண்டி மெதுவாக கிராமத்தை வந்து சேர்ந்தது. மெஹர்பானுவின் வண்டி அது. அவனிடம் போய் கராமத்தின் வண்டியை சகோதரன் கண்டானா என்று மெஹர்பானு கேட்கிறாள். இல்லையென்றும் தன்னுடைய வண்டியை நகரத்தில் சரிசெய்துவருவதற்கு நேரமாகி விட்டதால் தான் காலையில் வர நேர்ந்தது என்று அவன் கூறுகிறான். ஆனால், முதல்நாள் மாலையெ கராமத்தின் வண்டி நகரத்திலிருந்து கிளம்பியது என்று அவன் கூறினான். செய்வதறியாது திகைத்து நின்ற மக்களை கயிறு போன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு தன் வண்டியில் ஏறுமாறு சொல்லி கராமத்தையும் அவனது மினிபஸ்ஸையும் தேடிப்போகிறாள் மெஹர்பானு.

ஏனைய ஈரானிய படங்கள் போல விருதுகளைக்குவிக்காவிட்டாலும், ஈரானில் பொதுமக்கள் மிகவும் ரசித்த படமாம் இது. நான் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பெண் ஈரானை சேர்ந்தவள். அவளுடன் சேர்ந்து பார்த்த படந்தான் இது. அவளுக்கு மிகவும் பிடித்த படமாம். பெரும்பகை கொண்ட இருகுடும்பத்தையும் சேர்ந்த ஆணும் பெண்ணும் மெதுவாக காதல் வயப்படும் படம். அதுவும் நம்ம ஊர் படங்களைப்பார்த்த கண்களுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. மெஹர்பானுவாக நடித்தவரின் கண்ணில் தெரியும் தீ (?) இவரின் மற்றப்படங்களையும் தேடிப்பார்க்க சொன்னது. பார்த்தால் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.







A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (