Abre Los Ojos - Open Your Eyes (1997)
இன்னிக்கு பேசபோறது ஒரு ஸ்பானிஷ் படத்தைப்பத்தி. (ஆங்கில சப்டைட்டிலோடுதான்). ‘அப்ரெ லோஸோஜோஸ்’ என்று ஸ்பானிஷ் மொழியிலும் ‘ஒபன் யுவர் ஐஸ்’ என்று ஆங்கிலத்திலும் தலைப்பிடப்பட்ட இப்படத்தை இயக்கியவர் Alejandro Amenabar என்ற ஸ்பெயின் தேசத்துக்காரர்.

இந்தக்கதையில் நாயகன் இருபத்தைந்து வயதுள்ள செசார் (Eduardo Noreiga), அழகான, பெரும் பணக்கார, கொஞ்சம் சுயநலமான ஆனால் வசீகரமான இளைஞன். He is never seen with a single woman twice (U know what I mean!). இவனுடைய உற்ற நண்பனான பெலாயோவிற்கு இவன்மேல் லேசான பொறாமையும் உண்டு. தன்னுடைய நவீன அப்பார்ட்மெண்டில் செசார், தன்னுடைய இருபத்தைந்தாவது பிறந்த நாளைக்கொண்டாடுகிறான். கொண்டாட்டத்திற்கு பெலாயோ, தன் காதலியான சோ�பியாவை (Penelope Cruz) அழைத்து வருகிறான். அதே விழாவிற்கு அழையா விருந்தாளியாக வருவது நூரியா (Najwa Nimri). இவள்தான் செசாரின் லேட்டஸ்ட் தோழி.
சோ�பியாவைப் பார்த்ததும் சொக்கிப்போன செசார், அவளிடம் தன்னை நூரியாவிடமிருந்து காப்பாற்றச்சொல்லி கேட்கிறான். செசாரைப்பற்றி அவனது நடை உடை பாவனைகளிலிருந்தே அறிந்து கொண்ட சோ�பியா சம்மதிக்கிறாள். இவர்களிருவரும் பேசிகொள்வதைப்பார்த்த பெலாயோ அளவுக்கு மீறி குடித்து விட்டு வீட்டிற்கு சென்று விடுகிறான். போவதற்கு முதல் சோ�பியாவை அவள் வீட்டில் விடுமாறு செசாரிடம் கேட்டுக்கொள்கிறான் அந்த (கொஞ்சம்) தாழ்ந்த மனப்பான்மையுடைய நண்பன்.
இரவு முழுக்க சோ�பியாவின் வீட்டில் அவளுடன் பேசியே கழித்த செசார் வெளியே வந்ததும் லேசாக திடுக்கிடுகிறான். அங்கு அவனுக்காக காத்திருப்பது நூரியா. அவள் தன்னுடைய காரில் ஏறிக்கொள்ளுமாறு செசாரை கேட்டாள். மறுத்த செசாரிடம் ஒரு பந்தயம் கட்டி, அவனுக்கே உள்ள இயல்பான குணநலனைப்பயன்படுத்தி காரில் ஏற்றிக்கொள்கிறாள். காரில் ஏறியதுமே செசாருக்கு தான் காரில் ஏறியிருக்க கூடாதென்று விளங்கி விட்டது. அவன் சுதாகரிப்பதற்குள், மிகவும் பொசசிவ் குணத்தைக்கொண்ட நூரியா வேகமாக காரையோட்டி ஒரு சுவரில் மோதி இறந்து விடுகிறாள். தன்னுடைய அழகில் இறுமாந்திருந்த செசார், அவலட்சணமாகிறான். போலீஸ் நூரியாவை கொலை செய்ததாக கூறி அவனைக் கைது செய்கிறது.
போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் மனநோயாளர் காப்பகத்தில் கண்விழிக்கிறான் செசார். முகத்தில், அவன் எப்போது அணிந்திருக்கும் முகமூடி. அவனை பரிசோதனை செய்கிறார்கள். அதற்காக வந்திருந்த மனநோய் மருத்துவரிடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத்துவங்குகிறான் செசார். மருத்துவருடன் சேர்ந்து நாமும் பல புதிர்களுக்கு விடை தேடி, சேசார் சொல்லுவதை கேட்கத்தொடங்குகிறோம். பல எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த சம்பவங்களை சேசார் சொல்லுகிறான். சில சமயங்களில் அவன் சொல்லுவது முன்னுக்குபின் முரணாக இருக்கிறது. மருத்துவருடன் சேர்ந்து நாமும் செசாரை நம்ப மறுக்கிறோம்.
இதை எங்கயோ கேட்டிருக்கேன் அல்லது பார்த்திருக்கேன் என்று சொல்லுறீங்களா? 2001ம் ஆண்டு டாம் குரூஸ், பெனலோபே குரூz, காமரூன் டையஸ் நடிப்பில், காமரூன் குரோ இயக்கத்தில் வந்த Vanilla Sky’, இந்த ஸ்பானிஷ் மொழிப்படத்தின் காப்பி.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாம பேசின ‘மொமண்டோ’ படத்தைப் போன்ற படமிது. ஆகவே இதில் நடித்திருப்பவர்களைப்பற்றியும் தொழில்நுட்பக்கலைஞர்கள் பற்றியும் கொஞ்சம் பேசிய பிறகு மீதிக் கதையை தொடரலாம் என்றிருக்கிறேன்.
‘எடுஆர்டோ நொரீகா’தான் இப்படத்தின் நாயகன். அலெஜாண்ரோ அமெனபாரின் முதல் படத்தில் நடித்த இவன், அவரின் இந்த இரண்டாவது படத்திலும் நடித்திருக்கிறான். ஆரம்பத்தில் மற்றவர்கள் கண்டு பொறாமைப்படும் அளவு அழகும், வசீகரமும் பணமும் படைத்த இளைஞனாக வரும்போதும் சரி, அவலட்சணமாக எந்நேரமும் முகமூடியணிந்தவனாக வரும்போது சரி நடிப்பில் அசத்துகிறார். அழகான வாலிபனாக வந்த போது இல்லாத தயக்கமும், அங்க அசைவுகளும் (அதாங்க பாடி லாங்குவேஜ்) என்று நன்றாக நடித்திருக்கிறார். கொஞ்சம் வல்நரபிளாக தெரியவேண்டிய பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்துகிறான் நொரீகா. என்னால் டாம் குரூஸை அப்படி கற்பனை செய்ய முடியவில்லை.
அடுத்து ஹீரோயினாக வரும் பெனோலோபே Cruz. இவர் நடித்த சில ஆங்கிலப்படங்களைப் பார்த்து என்னப்பா அருமையா நடிப்பாரு அது இதுன்னு சொன்னீங்களே. நடிப்புன்னு ஒரு விஷயமே இவங்களுக்கு தெரியாது போல இருக்கேன்னு நினைச்சிருக்கேன். இந்தப்படம் பார்த்த பிறகு, ஆங்கிலப் படத்தில் சில சமயங்களில் மரக்கட்டை போல வந்து போவது, இவரது ஆங்கில அறிவு குறைவால் இருக்கலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டேன். படத்தின் ஆரம்பக்கட்டத்தில் செசாருடன் Flirt செய்யுபோதும், பிறகு செசார் மருத்துவரிடம் பேசும்போது வந்து போகும் பலதரப்பட்ட சூழ்நிலைகளிலும் அவரது நடிப்பு நன்றாக இருக்கிறது. அதே போல தாழ்வு மனப்பான்மையுடைய நண்பனாக வந்து போகிறவரும் தன் பாத்திரம் உணர்ந்து செயல் பட்டிருக்கிறார். சிற்சில இடங்களில் வில்லியாகவும், சில இடங்களில் நம் அனுதாபத்தை பெறுபவருமாக வரும் நூரியா பாத்திரத்தில் நடித்த ‘நஜ்வா நிம்ரி’யும் நினைவில் நிற்கிறார். இதைப்போல நாம் கவனிக்கும் இன்னொரு நபர் அந்த மனநோய் மருத்துவர்.
இயக்குநருக்கு இது இரண்டாவது படமென்றே சொல்ல முடியாது. அத்தனை அருமையாக திரைக்கதையை அமைத்திருக்கிறார். வளைந்து நெளிந்து செல்லும் திரைக்கதை கொஞ்சம் மூச்சை முட்டினாலும் அருமையாக இருக்கிறது. சட்டுபுட்டுன்னு சொல்லி முடிப்பானு சில பேர் அலுத்துக்கலாம். அப்படிப்பட்ட திரைக்கதையமைப்பு. இயக்குநர் தன்னுடைய கதாபாத்திரங்களுடன் சில நிமிடங்களை செலவழித்த பிறகே கதையை நகர்த்துகிறார். ஆனால் கடைசி வரை நாம் எதிர்பாராத வகையில் பற்பல திருப்பங்கள். ஆமாம்! கடைசிக்காட்சிவரை!!
இந்தளவு அருமையான ஒரிஜினலைப்பார்த்துட்டு எந்த முட்டாளாவது, டூப்ளிகேட்டை அதுவும் வேறு ஒரு இயக்குநர் வண்ணத்தில் உருவான டூப்ளிகேட்டை பார்ப்பானா? அதான் நான் வனிலா ஸ்கையை பார்க்கலை. இன்னிக்கு வரைக்கும் பார்க்கணும்னு தோணலை. டாம் குரூஸை பிடிக்காதென்பது இரண்டாம் பட்சம். ஏனென்றால் குரூஸ் நடித்த சில படங்களை பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் நண்பர்களே, இந்த ஸ்பானிஷ் மொழி படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது என்று சொல்லுபவர்கள், வனிலா ஸ்கையை பாருங்கள். பார்த்து விட்டு விலாவாரியாக அலசலாம். பரபரப்பா பேசப்படுகிற ‘மாஜிகல் ரியலிசம்’ டெக்னிக் இந்தப்படத்துல இருக்குன்னு நினைக்கிறேன். இருக்கா இல்லையான்னுட்டு படம் பார்க்க முடிந்தால் (ஆங்கிலத்திலோ, ஸ்பானிஷிலோ) பார்த்துவிட்டு சொல்லுங்கள்.
நண்பர்களே, நீங்களும் என்னைப்போல புதிர்கள் நிறைந்த படத்தை நீங்களாகவே பார்த்து புரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் என்றால் இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.

இவ்வளவு நேரம் என்னுடைய அறுவையை தாங்கிக்கொண்டு படிக்கும் நண்பர்களுக்கு.
மனநோய் மருத்துவரிடம் என்ன நடந்தது என்று செசார் சொல்ல ஆரம்பிக்கிறான். மருத்துவருக்கும் நமக்கும் பல கேள்விகள் எழுகின்றன. பிளாஸ்டிக் சிகிச்சை செய்து கொண்டதாக சொல்லும் செசார் ஏன் முகமூடியை கழற்ற மறுக்கிறான், இறந்து விட்டதாக அனைவரும் (நாமும்) கருதும் நூரியா எப்படி உயிருடன் இருக்கிறாள், சோபியா ஏன் சில சமயங்களில் அன்பு மழையும், சில சமயங்களில் அமில மழையும் பொழிகிறாள், சோபியாவும் அவளின் முதல் நண்பனுமான பெலாயோவிற்கு நடுவில் அப்படி என்ன உறவுதான் இருக்கிறது என்று பலப்பல கேள்விகள்.
செசார் பொய் சொல்லுகிறான் என்று மருத்துவரும் நாமும் நினைக்கிறோம். ஆமாவா, இல்லையா என்று படம் பார்த்து (open your eyes OR Vanilla Sky) பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மீதிப்பகுதி. திரில்லரோ, காதலோ எதையெடுத்தாலும் நான் முதலில் கடைசிப்பக்கத்தை படித்து விட்டுத்தான் மீதியெல்லாம் படிப்பேன்/பார்ப்பேன் என்று சொல்லும் நண்பர்களுக்காக.
மிகவும் குழப்பமான ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் அமெனபார். படத்தின் ஆரம்பத்தில் டீவியில் வரும் ஒரு நிகழ்ச்சிதான் அனைத்து முடிச்சுகளையும் அவிழ்க்க உதவுகிறது. இதில் என்ன சுவாரசியமென்றால், செசாருக்கும் முடிச்சு அப்போதுதான் அவிழ்கிறது என்பதுதான். மருத்துவரும் செசாரும் படிப்படியாக ஒருவர் மேல் மற்றவர் நம்பிக்கை வரும் அளவு நெருக்கமாகிறார்கள். தனியறையில் வைக்கப்பட்டிருந்த செசார், மற்ற மனநோயாளி கைதிகளுடன் நடமாட அனுமதிக்கப்படுகிறான். அப்போது அவன், அவன் வாழ்க்கையில் அவ்வப்போது முக்கிய தருணங்களில் வந்து போகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி/விளம்பரத்தை பார்க்கிறான். அதிலிருந்து ஒவ்வொன்றாக முடிச்சு அவிழ்கிறது.
இந்தப்படத்தை ஒரு தடவை மட்டும் பார்த்து புரிந்து கொள்ள முடியாது. ஆனால் இரண்டாம் முறை பார்ப்பதும் எவ்வளவு தூரம் உதவும் என்று தெரியவில்லை. அமெனபாருக்கு எப்படி இந்த பொறி கிடைத்தது என்று நான் ஆச்சரியப்பட்டேன். [update: Alejandro Amenabar imagined the script after having horrible nightmares when he was ill with the flu.] கதை சுலபம்தான், ஆனால் அதை அமெனபார் திரைக்கதையாக்கிய விதம் அருமையாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.
விஷயம் என்னவென்றால் பெரும்பணக்காரனாகிய செசார், இறந்தவர்களின் உடலை அவர்கள் மீண்டும் உயிர்ப்பதற்கு வசதியாக பதனப்படுத்தி வைக்கும் கம்பனியின் விளம்பரத்தை (infomersial மாதிரி) கண்டிருக்கிறான். அவர்களிடம் சென்று பணம் செலுத்தி கிளையண்ட் ஆகியிருக்கிறான். திடீரென்று நொரீகாவின் காரில் அகப்பட்டு அவள் இறந்து போக இவன் அவலட்சணமாகி, அந்த அவலட்சணம், எத்தனை ஆப்பரேஷன் செய்தும் முற்றிலும் சரியாக வராததால் ஒரு நாள் அளவிற்கு அதிகமாக மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்து கொள்கிறான். இவன் பணம் கட்டிய கம்பனியினர், இவனே மறுபடியும் உயிர்த்து வரும்போது, தன் வாழ்வில் யார் யார் இருக்கலேமென்று முடிவு செய்யலாமென்று சொல்லி இருக்கிறது. அப்படி வந்தவர்கள்தான் அவனும் நாமும் இதுவரை கண்ட மனிதர்கள்.
ஆனால்………….
இது புது தொழில்நுட்பமாகையால் சில எதிர்பாராத தவறுகள் நடந்து விட்டதாக கம்பனியின் பிரதிநிதி சொல்லுகிறார். அது என்னவென்றால் சில சமயம் சோபியா நொரீகாவாகவும், நொரீகா சோபியாவாகவும் செசார் கண்ணுக்கு தெரிவதுதான்.
ஆகையால், கம்பனியின் பிரதிநிதி, செசாரை அக்கம்பனி மாடிக்கு அழைத்து சென்று அவன் வாழ்வில் இது வரை வந்த சோபியா, நொரீகா, பெலாயோ ஆகிய மூவரும் சிலை போல நிற்க. (ஆனால் சோபியாவை அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறான் செசார்.
). மனநோய் மருத்துவர் வேண்டாம் வேண்டாம் என்று கதற அந்தக்கட்டடத்திலிருந்து கீழே குதிக்கிறான்.
அடுத்த ஷாட். படத்தின் முதல் காட்சியாக நாம் கண்ட செசாரின் படுக்கை அறையும், இன்னமும் தூங்கும் செசாரும், அவனை எழுப்பும் பேசும் அலாரமும்தான். அந்த அலாரக்கடிகாரத்திலிருந்து நாமும் செசாரும் கேட்பது, கேட்டுக்கொண்டிருப்பது (கடைசிக்காட்சியில்) Abre Los Ojos - Open Your Eyes - உன் கண்களைத் திற.
படம் முடிந்த பிறகு எனக்குத் தோன்றியது இதுதான்
ஹ்ம்ம்ம்ம்….. கண்களை இவ்வளவு நேரமும் திறந்திருந்தேனா?!







A disturbing movie. ஜப்பானிய இயக்குநர் Shunji Iwai ஜப்பானிய பதின்ம இளைஞர்களின் நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கும்படி எடுத்திருக்கும்படம். Non-linearஆக எடுக்கப்பட்டிருக்கும் படத்தை முழுமையாகப் பார்ப்பது கொஞ்சம் சிரமந்தான். படத்தின் தொழில்நுட்ப அமைப்பு அப்படி இருக்கிறது. ஆனால், முழுமையாகப் பார்க்கமுடியாமற்போவதற்கு அதுமட்டும் காரணமல்ல. படத்தில் காட்டப்படும் ஜப்பானிய பதின்ம வயது இளைஞர்களின் போக்கு. நிறைய யோசிக்க வைத்தது. கட்டாயம் பார்க்கவேண்டிய படம். (